Sunday, May 24, 2009

தமிழ் மணத்துக்கு நன்றி

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்ததற்கு தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி. தொடர்ந்து எழுத எனக்கு மிகவும் ஊக்கமளித்தமைக்கும் நன்றி. உங்கள் புண்ணியத்தால் ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சில பதிவுகளை எழுதி முடித்தேன். வருகை தந்த வாசகர்களுக்கும் தொடர்ந்து எங்கள் சங்கப் பதிவுகளை படித்து எங்களுக்கு உற்சாகமூட்டிவரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.

தமிழ் மணத்து இந்த செயலால் எனது தலை இந்த வாரம் கொஞ்சம் பெருத்துப் போனதென்னவோ நிஜம். இரண்டு நாட்கள் முன்னால் அங்காடிக்குப் போயிருந்த போது தமிழ் பேசும் ஒரு தம்பதியினரைப் பார்த்தேன். முன்பின் தெரியாத அவர்களிடம் போய் இந்த வாரம் தமிழ்மணத்து நட்சத்திரம் நாந்தான் தெரியுமா என்றேன். மனைவி கணவனின் சட்டையை இழுத்து - எங்களுக்கு இந்த பிசினெஸ் கிசினெஸ் எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு வாங்க என்றாள்.

என்னடா இது தமிழ்மணத்துக்கு வந்த சோதனை?

6 comments:

  1. /மனைவி கணவனின் சட்டையை இழுத்து - எங்களுக்கு இந்த பிசினெஸ் கிசினெஸ் எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு வாங்க என்றாள்.

    என்னடா இது தமிழ்மணத்துக்கு வந்த சோதனை?/

    தமிழ்மணத்திற்கு சோதனையா அல்லது
    உங்களுக்கு சோதனைக் காலமா?

    :))))))))))))

    ReplyDelete
  2. //முன்பின் தெரியாத அவர்களிடம் போய் இந்த வாரம் தமிழ்மணத்து நட்சத்திரம் நாந்தான் தெரியுமா என்றேன்.//

    நம்ப முடியலை!

    ReplyDelete
  3. ஒரு வாரமாக நட்சத்திரமாக ஜொலித்து ரிச்மண்ட் தமிழர்களை உலகப் பார்வையில் வைத்ததுக்கு நன்றி நாகு.

    ReplyDelete
  4. திகழ்மிளிர் - நன்றி

    தமிழ்மணத்திற்கோர் பழி நேர்ந்தால் நமர்க்கன்றி அதற்கில்லை! :-)

    கவிநயா - நம்பமுடியாவிட்டால் போங்கள். என் கனவில் வந்ததை அப்படியே சொன்னேன்!

    மீனா - ஜொலித்தேனோ இல்லையோ தெரியாது. ஆனால் ஒரு வாரம் சுவாரசியமாக சென்றது. நன்றி!

    ReplyDelete
  5. //ஒரு வாரமாக நட்சத்திரமாக ஜொலித்து ரிச்மண்ட் தமிழர்களை உலகப் பார்வையில் வைத்ததுக்கு நன்றி நாகு.//

    அதே ! அதே !!

    ReplyDelete
  6. நம் தமிழ் சங்கத்தின் பதிவுகளினால் இந்த வாரம் தான் "ஜொலிக்கும்" வாரம் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் நாகு.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!