Sunday, May 17, 2009

பாலகுமாரன்

பாலகுமாரன் – 80 களின் துவக்கத்தில் இவருடைய எழுத்தின் பாதிப்பின்றி வளர்வது மிகக் கடினமாக இருந்தது. ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் இவரது எழுத்து மிகப் ப்ரபலமாக வெளிவந்து பலதரப்பட்ட மக்களை புரட்டிப் போட்டது. இவரது பலம், கதை என்பது ஒரு காட்சியாக படிப்பவரின் மனதில் வியாபித்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பி இன்றளவும் அதைப் பின்பற்றிவருவது. சில சமயம் இதுவே இவரது எழுத்தின் பலவீனம் என்றும் நான் கருதுவேன். இவைகளையும் மிஞ்சி இவரது எழுத்து பலரையும் பாதித்து, வெளிஉலகை, வாழ்க்கையை சற்று வித்தியாசமாக பார்க்க வைத்தது. 80 களில் வெளிவந்த மெர்க்குரிப் பூக்களையும், இரும்பு குதிரைகளையும் என்னால் இன்றும் நினைவுகூற முடிகிறது என்றால் அது இவரது எழுத்தின் ஆழம் என்பேன். இவரது எழுத்துக்களைப் போலவே இவரது கதைகளின் தலைப்புகளும் மிக வித்தியாசமான ஒன்று. இவரது எழுத்து மட்டும் இல்லாமல் இவரது கதைகளின் தலைப்பும் இவரை சக எழுத்தாளர்களில் இருந்து எனக்கு இவரை தனித்து அடையாளம் காட்டியது.

விவரமான பதிவை இங்கு படிக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

7 comments:

  1. உண்மை!!!நான் கூட பாலகுமாரனின் தீவிர ரசிகை.....அவரின் எழுத்துக்கள் அப்போது ஒரு போதையாயிருந்தது...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. இன்றளவும் அவர் எழுத்துக்கு நான் விசிறி.

    ReplyDelete
  3. நானும் பாலகுமாரனின் ரசிகன். சுஜாதாவைக் காப்பியடித்தால் காணாமல் போயிருப்பார் என்பது மிகவும் உண்மை. ஒரு கம்ப்யூட்டர் ப்ரொக்ராமர் ஒரு கதையில் கொண்டுவந்து சில தப்பு தப்பான கணனிப் பதங்களை(டிஸ்க் ஆண்ட்டெனா) பிரயோகித்தபோதுதான் காணாமல் போக ஆரம்பித்தார்.

    ஆனால் அவரின் இரும்பு குதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள் என்றும் நினைவில் நிற்பவை. ஒரு கதை - கிராமத்தில் அமைந்த கதை - குழந்தையில்லா ஒரு தம்பதியினரின் -கதையும்(பச்சை வயல் மனது?), ஒரு பிரசவ மருத்துவமனையில் அமைந்த கதையும்(தென்னம்பாளை?) எனக்கு மிகவும் பிடித்தவை.

    ReplyDelete
  4. yes Balakumaran is the main reason who reduced arrogance with lot of Tamil youth. He helped us to learn how a male should move with female, how to respect a female etc.

    Lifelong we owe to Balakumaran.

    ReplyDelete
  5. பயணிகள் கவனிக்கவும்

    இதுவே எனக்கு கிடைத்த பெரும் பாதிப்பு இவர் எழுத்துகளில் ...

    ReplyDelete
  6. அருணா, வடுவூர் குமார், நாகு, குப்பன் யாஹூ மற்றும் ஜமால், அனைவர் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி. பாலகுமாரனின் ரசிகர்கள்/வழி நடப்போர் நடத்தும் வலைப்பூவில் (http://balakumaranpesukirar.blogspot.com/) பல விஷயங்கள் இருக்கின்றன.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  7. ஆமாம் பாலகுமாரனால் செதுக்கப்பட்டோர்களீல் நானும் ஒருவன்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!