Wednesday, May 20, 2009

பீச்சுக்கு போகலாமா ?! (அரைபக்கக் கதை)

சரியாகக் காலை பத்து மணிக்கு சிணுங்கியது செல்.

மறுமுனையில் செந்தில். "மாலதி ! இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் வச்சுக்காத. சாயந்திரம் பீச்சுக்கு போகலாம் !"

'சாயந்திரம் போற‌த்துக்கு இப்பவே என்ன அவசரம் ! என் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல' என்று பெருமிதம் கொண்டாள் மாலதி.

சமையலில் மூழ்கினாள், புத்தகம் வாசித்தாள். அயற்சியாக இருக்க சிறிது கண்ணயர்ந்தாள்.

பண்ணிரண்டு முப்பதுக்கு மீண்டும் செல்லின் சிணுங்கல்.

"மாலதி ! நான் குணா. இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் இல்லியே ?! சாயந்திரம் பீச்சுக்கு போகலாமா ?"

'இல்லடா, செந்தில் கூப்பிட்டு இருக்கான்னு சொல்லிடலாமா ?!' என யோசித்து, அவன் என்னடான்னா போகலாம் என்று உத்தரவிடுகிறான். இவன் என்னடா என்றால் போகலாமா என்று கேட்கிறான். யாருக்கு என்ன பதில் சொல்வது'

"உனக்கு எத்தனை தடவை சொல்வது. பசங்களுக்கு இந்த அளவிற்கு செல்லம் கொடுத்து வளர்க்காதே என்று !!! பேரு சொல்லிக் கூப்பிட்டாங்க, ச‌ரி, அத ஆரம்பத்துலேயே கண்டிச்சிருக்கணும். விட்டாச்சு. இவனுங்க எலியும் பூனையுமா இருந்துகிட்டு, நம்மள பிரிக்கிறானுங்க. இப்ப பாரு, ஊர்ல எவ்வளவோ அழகழ‌கா புள்ளைக இருக்கு. எதிர்த்து நின்னு என்ன அழகா பேசுது. அதுல யாரையாவது புடிச்சு கிடிச்சு பீச்சுக்கு போக வேண்டியது தானே !!! என் பொண்டாட்டிய என் கூட அனுப்ப மாட்டேங்கிறானுங்க" என்று ம‌திய‌ச் சாப்பாட்டிற்கு வ‌ந்த‌ அர்ஜூன் வழக்கம் போல அலுத்துக் கொண்டார்.

9 comments:

  1. ஐயோ..... என்ன நடக்குது இங்கே?

    நீங்கதான் சதங்காவா?

    ReplyDelete
  2. நீங்க என்ன கேக்கறீங்கன்னு புரியல. இது தமிழ்ச் சங்க பதிவாச்சே. எல்லார் பதிவும் தமிழ்மணத்துல ஐயா பதிவு மாதிரி தெரியும்... ballot-stuffingல தான் நாங்க கிங்'ஆச்சே...

    ReplyDelete
  3. சதங்கா,

    நல்ல அருமையா இருக்கு ட்விஸ்ட். ஆனா நிஜமாவே அம்மாவை பேர் சொல்லி கூப்புடர பசங்க இருக்காங்களா?

    முரளி.

    ReplyDelete
  4. அரைப்பக்கத்தில் அளவா ஒரு கதை. சூப்பர்.

    -மீனா சங்கரன்

    ReplyDelete
  5. துளசி கோபால் said...

    //ஐயோ..... என்ன நடக்குது இங்கே?

    நீங்கதான் சதங்காவா?//

    டீச்சர், நான் அவரில்லை :)))

    ReplyDelete
  6. முரளி இராமச்சந்திரன் said...

    //நல்ல அருமையா இருக்கு ட்விஸ்ட். //

    மிக்க நன்றி !

    //ஆனா நிஜமாவே அம்மாவை பேர் சொல்லி கூப்புடர பசங்க இருக்காங்களா?//

    இல்லாமலா ! நிறைய நகர்புறங்களில் நடக்கும் கதை தானே. அதைப் பெருமையாகக் கூறும் பெற்றோரும் இருக்கிறார்களே !!!

    ReplyDelete
  7. Meenakshi Sankaran said...

    //அரைப்பக்கத்தில் அளவா ஒரு கதை. சூப்பர்.//

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  8. இயல்பான கதை சதங்கா

    நல்வழ்ழ்த்துகள் சதங்கா

    பெற்றோரை பெயர் சொல்லிக் கூப்ப்பிடும் பிள்ளைகள் தானாகவே காலம் கடந்தால் திருந்தி விடுவார்கள்

    ReplyDelete
  9. அம்மாவை பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள் எனும் சேதி எனக்கும் புதிதே. பலருக்கும் அது புதிது என்பதால் அதையே அழகான சஸ்பென்ஸாக வைத்து கதையை நகர்த்தி அருமையாக முடித்திருக்கிறீர்கள். ரசித்தேன், வாழ்த்துக்கள்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!