Thursday, February 22, 2007

பொங்கல் விழா பற்றி உங்கள் கருத்து

சென்ற சனிக்கிழமை நடந்த பொங்கல் விழாவுக்கு நீங்களும் வந்திருந்தீர்கள்தானே? அது குறித்து உங்களின் கருத்து என்ன என்று கீழே பின்னூட்டத்தில் எழுதினால் நன்றாக இருக்கும். விழாவில் உங்களுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன, நீங்கள் பார்க்க விரும்புவது என்ன என்று எழுதினால், எங்களுக்கு அடுத்த விழாவை இன்னும் மிகச் சிறப்பாக நடத்த முயல்வோம். உங்கள் கருத்தை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடவும்(அதாங்க கமெண்டு...)


Hope you attended the saturday's pongal cultural program and enjoyed it. If you give us your feedback on the program in the comments, it will help us plan the next program better. Please let us know what you liked about it, what you didn't like and the kind of programs you would like to see in a RTS function in the future. You can write in English. And you can be anonymous too.

7 comments:

  1. It was excellent and well organized.. We enjoyed every minute of it.. Our sincere thanks to you all for your time, effort and energy for making this a memorable event..

    ReplyDelete
  2. The show started on time, thats nice. The dances were entertaining. The drama 'Dhuruva' was a good concept, but nobody except the participants could hear the dialogues. How about releasing such dramas on the blog /websites like youtube instead? The debate/drama was okay, it would have been heard better if the parents had watched the kids and the sound system was working the way it was supposed to work. Overall, it was an entertaining evening. Thanks RTS!

    ReplyDelete
  3. பாராட்டுக்கு மிக்க நன்றி, திவ்யா.
    அனானி அவர்களே, உங்கள் ஆலோசனைப்படி இணையத்தில் வீடியோவை காண்பிக்க இளந்தென்றல்காரர்களிடம் சொல்கிறோம். மற்ற நிகழ்ச்சிகளை இணையதளத்தில் போட முயல்கிறோம் கூடிய விரைவில். பாராட்டுக்களுக்கு நன்றி. அடுத்த முறை ஒலி/ஒளியில் கவனமாக இருப்போம்.

    ReplyDelete
  4. புதிய தமிழ்ச்சங்க செயற்குழு பொறுப்பேற்று நடத்திய முதல் நிகழ்ச்சி பிரமாதம். வாழ்த்துக்கள்! குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை ஆரம்பித்தது அதைவிட பிரமாதம். நிகழ்ச்சியில் கண்டவை அதைவிட பிரமாதம். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற அனைவருக்கும், அரங்கேற்ற உதவியவர்களுக்கும் பாராட்டுக்கள். பல்வேறு காரணங்களால் ஒலியமைப்பு சரியாக அமையவில்லை. இதில் முன்கூட்டியே மேலும் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, பொதுப்பள்ளிகளில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளை நடத்தும்போது இதில் மேலும் கவனம் வேண்டும். "துருவன்" குறும்படம் நன்றாக இருந்தது. நல்ல முயற்சி. பளபளக்காத (glare அதிகம் இல்லாத)வெள்ளைத்திரையை அடுத்த முறை பயன்படுத்தினால் நல்லது. ஒரு வெற்றிகரமான பொங்கல் பல்சுவை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழங்கிய ரிச்மண்ட் தமிழ்சங்க செயற்குழுவிற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. நிகழ்ச்சி 3:00 மணிக்குத் துவங்கும் என்று சொல்லி 3:10 க்கு ஆரம்பிக்கப் பட்டது மிக நல்ல ஒரு தொடக்கம். நிகழ்ச்சி நிரல் யாருக்கும் தரப்படவில்லை. அதனால் எப்போது என்ன நிகழ்ச்சி என்று எல்லோரும் சற்று குழம்பவேண்டியிருந்தது. அடுத்த முறை அதைத் தவிர்க்க முயலவும்.

    துருவன் குறும்படம்:
    பரதேசி - glare இல்லாத பக்கத்தை கண்டிப்பாக அடுத்த முறை பயன் படுத்துவோம். அது சரியான பக்கம் இல்லை என்பதை ஓளிபரப்பு ஆரம்பித்த பிறகுதான் உணர்ந்தோம். மாற்ற அவகாசம் இல்லை. துருவன் குறும்படம் எங்களின் முதல் முயற்சி, இதிலிருந்து பல பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். இதை ஒரு DVD வடிவமாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில பிரதிகள் RTS-டம் தந்து, விரும்புபவர்கள் அதை RTS-டம் இருந்து வாங்கி பார்க்கலாம். தனிப்பட்ட முறையில் 'you tube'-ல் இதை வெளியிடும் எண்ணம் இதுவரையில்லை.

    அனானி (நாகு - இது சரியான தமிழ்ப் பதமா?)

    நாடகத்திலிருந்து சில பாடங்களைக் கற்றேன்.

    1. நடிகர்கள் வெறும இருக்காமல் அவர்கள் காட்சியில் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

    2. இப்படி பட்ட நாடகங்களில் உச்சரிப்பு மற்றும் body language மிக அவசியம்.

    3. பின்னனி இசை மிக முக்கியம்.

    இவைகளை அடுத்த நாடகம் அரங்கேற்றும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    - முரளி.

    ReplyDelete
  6. அனானி - அநாமதேயமாக பின்னூட்டம் இடுபவர்களை தமிழ்ப்பதிவுகளில் இப்படித்தான் அழைக்கிறார்கள். கணினித் தமிழ்ச்சொற்கள்!

    அடுத்த முறை நிகழ்ச்சி நிரலை தெரிவிப்போம்.

    ReplyDelete
  7. Well, everything was fine expect for the audio default. I would like to tell that with what ever snack was provided was sufficient but, if you had something like a small dinner type because by the time the programme ended and return back home was exhausting for everyone. With paying some extra money for a good food is not a problem. Also, i think some profit does go to the sangam. (Just a Suggestion!) Over all, It was good. Only disappointment was audio and food. Thank for all the effort and time.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!