Tuesday, February 06, 2007

என் ஆளுதான் எனக்கு மட்டும் தான்

இன்று கேள்விப்பட்ட ஒரு விசித்திரமான செய்தி. ஒரு விண்வெளி வீராங்கனை(Astronaut), Houstan, Texas ல் இருந்து Orlando, Florida க்கு 900 மைல் வந்தது தான். மூனுக்கே (Moon) சென்றவர் கேவலம் Florida க்கு போக முடியாதா என்று கேட்கலாம். ஆனால் அந்த திருமணமான மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்மணி போனது ராக்கெட்டில் அல்ல - காரில். தன் முற்கால காதலனை வேறு ஒரு பெண் லவுட்டிக்கொண்டதை அறிந்து அப்பெண்ணை விரட்டிப்பிடித்து மிரட்ட இப்படி ஒரு ப்ளான். அதுவும் காரில் போகும் போது வழியில் இயற்கைக்கடன்களை கழித்து நேரம் வீணடிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் டயப்பரை (Diaper) கட்டிக்கொண்டு விடாமல் (எதை) வண்டியை விட்டிருக்கிறார். ஆமாம் டயப்பருக்கு தமிழில் என்ன? டோவணம் தானே? ஓர்லாண்டோ ஏர்போர்ட் அடைந்து ஷட்டில் பஸ்ஸில் ஏறி அந்த பெண்ணை பின் தொடர்ந்து பார்க்கிங் லாட் வரை சென்றிருக்கிறார். அந்தப்பெண் தன்னை யாரோ தொடர்வதை அறிந்து காரில் ஏறி கதவை சாத்திக்கொண்டு விட்டாள். நம் பெண்மணி அழுது குளித்ததும் அந்தப்பெண் கார் கண்ணாடியை இறக்கியிருக்கிறாள். நம் பெண்மணி கையில் இருந்த மிளகாய் ஸ்ப்ரே யை (Pepper Spray) காருக்குள் அடித்திருக்கிறார். அந்தப்பெண் போலீஸைக்கூப்பிட போலீஸ் விண்வெளி பெண்மணியை கைது செய்திருக்கிறார்கள். அந்தப்பெண்மணியிடமிருந்து போலீஸ் பரிமுதல் செய்தவை என்னென்ன தெரியுமா? விக், மழை கோட், BB துப்பாக்கி, சுத்தியல், கத்தி, $600, கார்பேஜ் பைகள் இத்யாதி. இப்படியாக ஒரு ரோபாடிக்ஸ், எம் எஸ் படித்த விண்வெளி வீராங்கனை தன் முற்கால காதலனின் புதுக்காதலியை மிரட்டப்போய் மாட்டிக்கொண்டார்.

இதில் தெரிந்த மற்றொரு உண்மை - விண்வெளி வீரர்கள் ராக்கெட் takeoff - landing போது diaper அணிந்து கொள்ளவேண்டுமாம். வசதிதான்.

என் இளவயதில் நாங்கள் அடிக்கும் ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. "சாதாரண மனிதனுக்கும் Astonaut க்கும் என்ன வித்தியாசம்? சாதாரண மனிதன் 1க்கும் 2க்கும் தான் போவான் ஆனா Astonaut மூனுக்கே போவான்" இதையும் மாற்றி இப்போ மூனுக்கு டயப்பர் கட்டிக்கொண்டு போவான் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த டயப்பர் யுக்தி பிரபலமாக வழியிருக்கிறது. குறிப்பாக Long Distance ட்ரைவிங் செய்து வெகேஷனில் செல்லும் குடும்பங்களுக்கு அவசியம். நேரத்தில் கிளம்பி நேரத்தில் ஊர் போய் சேரவேண்டுமென்று விடிகாலையிலேயே வண்டியில் கிளம்பும் குடும்பங்களில் நடக்கும் பொதுவான பிரச்சனை ஒன்று. வண்டியில் ஏறி ஒரு மைல் சென்றவுடன் ஒவ்வொருவராக ஆரம்பிப்பார்கள் - "பாத்ரூம் போகணும்" என்று. அதில் என்ன வேடிக்கையென்றால் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் வராது. சந்தேகத்துக்கு நாமும் சென்று வேலையை முடித்து விடலாமே என்றும் தோணாது. ஒருவர் சென்று வண்டியை ஓரிரு மைல் ஓட்டிய பிறகு இன்னொருவருக்கு வரும். ஒவ்வொருவருக்காக நிருத்தி ஒரு வழியாக வண்டியை கிளப்பியவுடன் ட்ரைவருக்கு வயிற்றை கலக்கும். இதற்கெல்லாம் முடிவு கட்ட நம் பெண்மணி உபயோகித்த மாதிரி டயப்பர் தான் சரி. ஆனால் பயணம் முடிந்து ஹோட்டலில் போய் இறங்குவதாயிருந்தால் சரி. மாறாக உறவினர் வீட்டில் அல்லது நண்பர்கள் வீ ட்டில் போய் இறங்குவதயிருந்தால் பிரச்சனையே. படையோடு (எடையோடு) குடும்பமே இறங்கி நேரே பாத்ரூமுக்கு படையெடுத்தால் அவர்கள் வீடு நாறிவிடும்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!