Wednesday, February 28, 2007

ஐயோ! மண்டை காயுதே!

இதை படிக்கிற உங்களுக்கும் மண்டை காயும். மண்டை காயுதேன்னு டாக்டர் கிட்ட போனீங்கன்னா அவரு மருந்துக்கு பதிலா ஒரு பாட்டில் சாராயம், ஒரு கட்டு கீரை, ஒரு கிலோ காப்பிக்கொட்டை, ஒரு கிலோ சாக்லேட், ஒரு கட்டு பீடி, ஒரு பாட்டில் கரிசலாங்கண்ணி ஜூஸ் தருவாரு.
ஒரு சில டாக்டர்கள் உங்க நெத்தியிலே பொட்டு வெச்சு உங்க கையில தாயத்து கட்டி வேப்பிலை அடிச்சாலும் அடிக்கலாம்.

நான் சொல்றது ஒண்ணுமே புரியலியா? என்ன பண்றது? நேரம்யா நேரம்.
இந்த medical/health research பண்றேன்னு ஆளாளுக்கு research பண்ணி, result publish பண்ணி நம்ம மாதிரி மக்களை பைத்தியம் பிடிச்சு பாயை சுரண்ட வெக்கறாங்க.

சரி விஷயத்துக்கு வரேன்.

இன்றைக்கு படித்த செய்தி - Denmark ல் ஒரு group research பண்ணி வெளியிட்ட செய்தியின் படி: Antioxidant, Beta Carotene, Vitamin A, Vitamin B supplement இதுகளினால் ஒரு பயனும் கிடையாதாம். அதை விட மோசம் என்னதுன்னு கேட்டா, இந்த supplement எல்லாம் சாப்பிட்டா "பூட்ட கேஸ்" அப்படீன்னு வேற சொல்றாங்க. அதுல என்ன விசேஷம்னா, Beta Carotene
supplement சாப்பிட்டா புகை பிடிக்கிறவங்களுக்கு lung cancer வேறு வருமாம். இப்படி research பண்ணி result வெளியிட்டு நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியிருக்காங்க. முக்கியமா, டப்பா டப்பாவா வைடமின் supplement அடுக்கி வைத்திருக்கும் கடைகளுக்கு இந்த செய்தி ஷாக்கா இருக்கும்.

இப்படித்தான் research பண்றேன் பேர்வழின்னு research பண்ணுவாங்க - இதை சாப்பிட்டா அந்த வியாதி வரும் அப்படீம்பாங்க. அடுத்த வருஷம் அதை சாப்பிடுங்க வந்த வியாதி சரியாகி விடும் அப்படீன்னுவாங்க. மக்களும் பறந்தடிச்சுக்கிட்டு ஓடி வாங்குவாங்க. உடனே அடுத்த வருஷம் ஓ அந்த மருந்தா? அதை சாப்பிட்டா வேற வியாதி வரும் அப்படீன்னுவாங்க.
மருந்து பொருட்கள் மட்டுமில்லை. பல உணவுப்பொருட்களும் இப்படித்தான்.

காபி சாப்பிட்டா blood pressure அதிகமாகும்னு அந்த கால டாக்டர்களிலிருந்து நம்ம சினிமா டாக்டர் வீரராகவன் வரை சொன்னது நமக்கு தெரியும். இப்போ என்னடான்னா தினமும் காபி குடிச்சா உடம்புக்கு நல்லது அப்படீங்கறாங்க.

மது குடிக்காதீங்க. 'குடி குடியை கெடுக்கும்' அப்படீன்னு சொன்னாங்க. இப்போ என்னடான்னா தினமும் காலையிலும் மாலையிலும் மது குடியுங்க மது அருந்தினால் உடம்புக்கு நல்லது அப்படீன்னு சொல்றாங்க.

அடுத்தது - சாக்லேட், கோக்கோ சாப்பிட்டா கொழுப்பு (body fat) அதிகமாகும்னு சொன்னவங்க இப்போ சாக்லேட் சாப்பிட்டா கேன்ஸர் வராது, ஹார்ட் அட்டாக் வராது அப்படீன்னு சொல்றாங்க.

இது மாதிரி பல. போதாதற்கு Atkin's diet, South Beach diet இத்யாதி வேறு.
இப்படி ஆளாளுக்கு மாத்தி மாத்தி சொல்றாங்க. சில பேர் result, analysis data தப்பு அப்படீங்கிறாங்க. ஆனா, இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிற மக்கள் தான் பைத்தியம் பிடிச்சு பாயை சுரண்டறாங்க.

இன்னும் சிகரெட் ஒண்ணு தான் பாக்கி. இன்னும் கொஞ்ச நாளில் 'சிகரெட் பிடிங்க - உடம்புக்கு நல்லது' அப்படீன்னு சொல்லுவாங்க போலிருக்கு.

என்னென்னவோ advertisement எல்லாம் தோணுது:

"உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர காலையிலும் மாலையிலும் ஒரு கப் காபி குடுங்க"

"ஒரு தில்லானா ஆடிட்டு கப்புனு 4 பெக் அடிச்சா ஆடின களைப்பெல்லாம் பறந்திடும்"

"கலக்க வேண்டாம் பாட்டிலோட அப்படியே குடிப்பேன்"

நம்ம திருவள்ளுவர் உயிரோடு இருந்தால் அவரைக்கூட மாற்றி -
"தம் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தம் இன்றி சாவார்" என்று சொல்ல வைத்து விடுவார்கள் போலிருக்கு.

போகும் போக்கைப்பார்த்தால், மருந்து கம்பெனிகளும், டாக்டர்களும் கறிகாய் மண்டி, ஒயின் ஷாப், சிகரெட் கடை அப்படீன்னு திறந்திடுவாங்க போலிருக்கு.

இந்த பதிப்பை படித்துவிட்டு சுரண்டுவதற்கு பாய் வாங்க ஓடுவீங்கன்னு நினைக்கிறேன்! பாய்! பாய்!

1 comment:

 1. /மண்டை காயுதே/
  ஒன்னு பிரச்சனையில்ல,
  எல்லாத்தையும் மூட்டகட்டி
  தலய சுத்தி எறிஞ்சுட்டு
  குத்தாலத்தில போய் குந்திக்கலாம்.
  குத்தாலதண்ணி தலயில விழுந்துகிட்டே
  இருந்திச்சின்னா அப்புறம் மண்ட காயாது.
  நல்லா இருக்குதுங்களா ஐடியா? :-))

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!