நம்ம முன்னாள் ரிச்மன்ட்வாசியான சதங்கா வழக்கம்போல தனிக்கட்சி ஆரம்பிச்சு கலக்கிவிட்டு விகடன் போல பல இடங்களிலும் தன்னோட பதிவை போட்டு அசத்தி எனக்கு சுட்டி அனுப்பியிருகாருன்னு நம்பி ஓபன் பண்ணினா, நம்மளையும் ஒரு பதிவருன்னு மதிச்சு இந்த பட்டாம்பூச்சி விருதை வழங்கியிருக்காரு சதங்கா! நன்றி! கூடவே சிலபல கண்டிசன் வேற! சரி நமக்கு தெரிஞ்ச யாராவது இன்னமும் பட்டாம்பூச்சி பிடிக்காம இருக்கங்களான்னு துலாவ ஆரம்பிச்சேன்.
மொதல்ல அகப்பட்டவர் எங்க ரி.த.ச வின் தானைத் தலைவர் முரளி. தமிழ்தென்றல் ஆரம்பிச்சு பின்னே கலைச்சோலையில் தொடர் கதைகளை எழுதுவதோடு எங்க தமிழ் சங்க பதிவுகளுக்கு தவறாம பதிவுகளையும் படிச்சு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துபவர். பிடியுங்கள் விருதை!
எல்லோரும் பதிவுக்கு மேட்டர் தேடி மெனக்கெட்டு ஒரு பக்கம் சேர கஷ்டப்பட்டு கொஞ்சம் மொக்கை கொஞ்சம் மேட்டருன்னு போட்டு பதிவை பண்ணிக்கொண்டு இருப்போம். ஆனா இவரு மட்டும் எங்கிருந்துதான் அட்டகாசமான வித்தியாசமான படங்களை கண்டுபிடுச்சு அதுக்கு அருமையான கடிகளையும் போட்டு அசத்துபவர். வாருங்கள் பரதேசியாரே, பிடியுங்கள் விருதை!
லேட்டா வந்தாலும் வசந்த காலத்தில் தோட்டகலை பற்றி விளக்குவதுடன் நல்ல சம்பவங்களை பதித்து சிறப்பாக ப்ளாகில் வலம் வருபவர். சம்சாரம் அது மின்சாரம் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவர் எழுதிய மின்சாரம் அது சம்சாரம் படியுங்கள் உபயோகமான பதிவுகளை வழங்கி வரும் வசந்தமே எனது அடுத்த சாய்ஸ்!
எனக்கு இந்த விருதை வழங்கிய சதங்காவிற்கு நன்றி! விருது பெரும் மூவருக்கும் வாழ்த்துக்கள்!!!
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்