Tuesday, August 07, 2007

கிராமத்து தேநீர்க் கடை



பின்னிய கீற்றுக் கொட்டகையில்
மண்ணில் முளைத்த மரத்தூண்கள்

திண்ணை இருக்குது இருபுறம்
அதில் ஒட்டியிருக்குது விளம்பரம்

திட்டம் போட்ட கூட்டமில்லை
கட்டை மேசை மாநாடு

விடியல் கருக்கும் வேளையிலே
மாமன் மச்சான் உறவுகள்

புழுதி பரப்பும் பேருந்தில்
பருத்த செய்தித்தாள் வர

ஆளுக் கொன்றாய் பிரித்தெடுத்து ...

அருந்தத் தேநீர் சிலநேரம்
அரசியல் அலசப் பலநேரம்.

12 மறுமொழிகள்:

சிவபாலன் said...

Good!

ILA(a)இளா said...

அடடா, நம்ம ஊருக்கு ஒருதபா போய்ட்டு வந்தா மாதிரி இருக்குங்க..

மாசிலா said...

கவிதை நல்லா இருக்குதுங்க சதங்கா.
பகிந்தமைக்கு மிக்க நன்றி.

நாகு (Nagu) said...

எங்கே டீ குடித்தாலும், அந்த கிளாஸ் டம்ளரில் சுடச்சுடக் குடிப்பதற்கு இணையாகுமா? அதுவும் மணம் கமழும் த்ரீ ரோஸஸ் டீ. எங்களுக்கும் லிப்டனுக்கும் ஜென்ம விரோதம் அந்த நாளில். இப்போது ரெண்டும் ஒரே கம்பெனியாமே?

அருமை சதங்கா. ஆள கொஞ்ச நாளா யாரையுமே காணோமே இந்தப் பக்கம். வாராது வந்த மாமணியைன்னு பாடிக்கிட்டு இருந்தேன் :-)

பரதேசி ஊர் போயிட்டு வந்து இன்னும் முழு பரதேசி modeக்கு வரலை போலிருக்கு....

சதங்கா (Sathanga) said...

நன்றி சிவபாலன்.

சதங்கா (Sathanga) said...

நாகு,

டீ க்ளாஸ். ஆஹா, படத்திற்கு இதைத்தான் இணையத்தில் தேடினேன். கிடைக்கவேயில்லை. கிடைத்ததும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

//அருமை சதங்கா. ஆள கொஞ்ச நாளா யாரையுமே காணோமே இந்தப் பக்கம். வாராது வந்த மாமணியைன்னு பாடிக்கிட்டு இருந்தேன் :-)//

அலுவல் தான் காரணம் ;-)

நாகு (Nagu) said...

//டீ க்ளாஸ். ஆஹா, படத்திற்கு இதைத்தான் இணையத்தில் தேடினேன். கிடைக்கவேயில்லை.//

நானும் தேடினேன். கிடைக்கவேயில்லை. ஒன்னே ஒன்னு கிடைச்சுது. அதுல ட்ரேட்மார்க் பட்டைகள் இல்லை. நாங்க ஸ்மூத்தா கிளாஸ் இருந்தா போகமாட்டோமே?

சதங்கா (Sathanga) said...

இளா,

வருகைக்கு நன்றி.

//அடடா, நம்ம ஊருக்கு ஒருதபா போய்ட்டு வந்தா மாதிரி இருக்குங்க..//

இந்த நிறைவு தாங்க எழுதும்போது இருந்தது.

சதங்கா (Sathanga) said...

நாகு,

//நாங்க ஸ்மூத்தா கிளாஸ் இருந்தா போகமாட்டோமே?//

டீ க்ளாஸ் மட்டும் தானெ ஸ்மூத்தா இருக்கக் கூடாது ? ;-)

த.அகிலன் said...

தின்னை யா திண்ணையா? சதங்கா

சதங்கா (Sathanga) said...

மாசிலா,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

சதங்கா (Sathanga) said...

அகிலன்,

//தின்னை யா திண்ணையா? சதங்கா//

திண்ணை தான் சரி, பிழை திருத்தலுக்கு நன்றிங்க.

 

blogger templates