Tuesday, May 12, 2009

வலை வலம்.

அமெரிக்க வீடுகளில்  தபால் பெட்டியில் வைக்கப்படும் ஜங்க் மெயில் எனப்படும் "குப்பை" விளம்பர காகிதங்கள் மிக அதிகமாகி விட்டன. வருடத்திற்கு சுமார் ஆயிரம் பக்கம் விளம்பரங்கள் உங்கள் வீட்டை வந்தடையும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. இதனால் வருடத்திற்கு பல கோடி மரங்கள் அழிக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு அழைப்பின்றி வரும் இவற்றை எவ்வாறு கட்டுபடுத்துவது என சமீபத்தில் படித்தேன்.  http://dmachoice.org என்ற இணைய தளத்தில் நமது வீட்டு 
முகவரியை பதிவு செய்து,  தேவை இல்லாத விளம்பரங்களை முழுவதுமாக நிறுத்திவிடலாம்! இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான விளம்பரங்களை தெரிவு செய்தால் அவை மட்டும் உங்களுக்கு வந்தடையும். எதோ நம்மால் முடிந்தது சில மரங்களையாவது விட்டு வைப்போமே!! 


நடந்து வரும் (நடக்கவுள்ள) இந்திய நாடாளுமன்ற தேர்தல் காமெடிகளை பார்த்தால் கடவுளே வந்தாலும் நம்ம மக்களை திருத்தமுடியாது என்றே தோன்றுகிறது! இதிலும் சில நம்பிக்கை வேட்பாளர்கள் இருப்பது சின்ன ஆறுதல். எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் யார் வென்றார்கள், அவர்களுடைய சொத்து, படிப்பு (அட ஆமாங்க), கிரிமினல் விபரங்கள் (வெளியே தெரிந்தது :-( மட்டும் ) , எத்தனை நாட்கள் பாராளுமன்றத்தில் பங்குபெற்றார்கள் (அதில்  எத்தனை கேள்விகள் எழுப்பினார்கள்)  போன்ற விபரங்களை கூகிள் தளத்தில்  காணலாம்.
 
அதில் வேடிக்கை என்னவென்றால் கோடிஸ்வரகள், அமைச்சர்கள் சொத்து விசயத்தில் வறுமைகோட்டிற்கு அருகே இருப்பதாக காட்டியிருப்பது  தான்!  மிக சில நல்ல அதிகாரிகள் கடந்த சில தேர்தல்களில் பல நல்ல கட்டுப்பாடுகள், விதிமுறைகள் என்று இந்த காமெடிகள் அதிகரிக்காமல் செய்திருக்கிறார்கள்! 
கடந்த  இடைதேர்தல் மாதிரி ஓட்டுக்கு ருபாய், பிரியாணி, சரக்கு என்று இந்த முறையும் மாநிலம் முழுக்க கிடைக்குமா என்று தெரியவில்லை. நம்ம முன்னாள் தலைவர் நாகு  இந்த முறை வாக்களிக்க முடியாமைக்கு மி்கவும் வருத்தப்பட்டு பேஸ்புக்கில் பதித்திருந்தார் - ஏன் என்று இங்கே சென்று பாருங்கள்

காரமான மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று படித்திருப்போம். 
ஆனால் அவற்றிலும் சில நன்மைகள் இருக்கிறது என்று சமீபத்தில் படித்தேன்.  ரத்த அழுத்தத்தை குறைப்பது, அல்செய்மர் (Alzheimer)  நோய் தடுப்பு சக்தி அதிகரிப்பு, உடல் எடை மற்றும் பருமனை குறைப்பது, டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தத்தை குறைப்பது என பல நன்மைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள் . அடிக்கடி லெட்டுஸ், தக்காளி, ஆலிவ் பழங்கள், வெள்ளரியை பன்னுக்கு இடையே வைத்து சாப்பிட்டு பழகினதால் என்னால் இப்பவெல்லாம் ஒரு சில்லி பரோட்டாவை கூட (இந்தியாவில்)  தொட முடிவதில்லை.  


  

6 comments:

  1. ஜெயகாந்தன் r u from Namakkal ?
    Anputan
    Singai Nathan

    ReplyDelete
  2. இல்லை சிங்கைநாதன். நான் கொங்குநாட்டை சேர்ந்தவன். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. சுட்டிக்கு நன்றி, ஜெய்
    .

    வியாபார தொலைப்பேசி அழைப்புகளை நிறுத்தியாகிவிட்டது. இந்த வியாபார குப்பைக் கடிதங்களை நிறுத்தினால், மரங்கள் பிழைக்கின்றனவோ இல்லையோ, நம் வீடு (கொஞ்சம்) சுத்தமாக இருக்கும்.

    இந்த மாதிரி ஒரு தளம் வைத்து அரசியல்வாதிகளை நிறுத்தினால் நல்லது. :-)

    ReplyDelete
  4. கடன் அட்டை குப்பைத்தபால்களை நிறுத்த வேண்டுமானால், நம் சோஷல் செக்யூரிடி எண்ணை கொடுக்க வேண்டுமாம். ஆளை விடுங்க, சாமி!

    ReplyDelete
  5. Nagu,

    The official Consumer Credit Reporting Industry Web site that processes requests from consumers to opt in or out of credit card offers is OptOutPrescreen.com. You can opt out right here - https://www.optoutprescreen.com/opt_form.cgi . You can also call to opt out: 888-567-8688.

    The FTC has an information and tipsheet online that you can check out here - http://www.ftc.gov/bcp/conline/pubs/credit/prescreen.shtm.

    ReplyDelete
  6. Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!