Thursday, June 11, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (பாகம் ஐந்து)

பயணத்துக்கு தயார்

உஸ்ஸ்ஸ் அப்பாடா....

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுது. பாக்கிங்கும் ஒரு 99% முடிஞ்சாச்சு. இனிமே போர்டர் வேல பாக்க கொஞ்சம் பளு தூக்கி தயார் பண்ணிக்கணும். Immigration check, customs, security check எல்லாம் நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

இதுல என்ன விசேஷம்னா, எங்களோட ஒரு சபதம் நிறைவேறும் போல இருக்கு. ஆனா இன்னும் இங்கிருந்து கிளம்புகிற வரையில் நிச்சயம் இல்லை. அதனால் மார் தட்டி கொள்ள கொஞ்சம் பயமாக இருக்குகிறது. கட்டயில குட்ட (knock on wood). பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்ற சபதத்தில் படு தோல்வி ஒப்பு கொள்கிறோம். பெட்டிகளில் ஒன்று, சிறியதாக அமைந்து விட்டது. 16.67% வெற்றி பெற்றோம். பெட்டிகளின் எடை, அதிலும் தோல்வியே. கையில் எடுத்து செல்லும் பெட்டிகளில் மட்டும் சற்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். பாப்போம்.

ரிச்மண்டிலிரிந்து பல குடும்பங்கள் சேர்ந்து, உடன் பயணம் செய்யபோகிறோம். மீனா நினைவு கூர்ந்த வாஷிங்டனில் திருமணத்திற்கு சென்னையிலிருந்து வண்டி பூட்டின கல்யாண குழு போல, சென்னையில் நடக்க விருக்கும் திருமணத்திற்கு நம்ம ஊர்லேந்து ஒரு பெரிய குழு போவது போல் ஒரு உணர்வு. அந்த விதத்தில் இந்த பிரயாணத்தை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

நாராயணன்

இனி வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.


5 comments:

  1. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். அந்தக் கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை. வாஷிங்டனில் திருமணத்தின் எதிர்மாறாக இந்தத் திருமணம். அமெரிக்காவில் வளர்ந்த இருவரின் திருமணம் இந்தியாவில்!!!

    அந்தக் கோணத்தில் இந்தத் திருமணத்தை விவரித்தால் எப்படி இருக்கும்? நம் குழந்தைகளிடம் விடவேண்டும் அந்த விஷயத்தை. வினு கல்லூரியில் எழுதிய ஒரு படைப்பு நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  2. தமிழர்ஸ் தளம் பார்த்தேன். இதற்கும் தமிழிஷ் தளம் மாதிரிதான் இருக்கிறது. தளத்தில் பதியப்பார்த்தால் வேலை செய்ய வில்லை. சரி பார்க்கவும்.

    ReplyDelete
  3. இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வினு இலக்குவன் தென்னிந்தியத் திருமணத்தை விவரித்து கல்லூரிப் பத்திரிக்கையில் எழுதியது
    http://www.cavalierdaily.com/news/2006/jul/13/bright-saris-buses-and-banana-leaves/

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!