Wednesday, April 11, 2007

முந்தானை முடிச்சு

தலைப்பைப்பார்த்துவிட்டு என்னவோ ஏதோவென்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு என் அனுதாபங்கள். இது பாக்கியராஜ் படத்தின் விமர்சனமும் அல்ல.

பெண்கள் முந்தானையில் சாவி முடிவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முந்தானையில் புருஷனை முடிந்து வைத்திருக்கும் பெண்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் முந்தானையில் 'பார்முலாக்களை' முடிந்து வைத்து மாட்டிய ஒரு மாணவிப்பெண்மணியைப்பற்றி இன்று படித்தேன்.

பீகாரில், பாட்னாவில் கணித பட்டப்படிப்புத்தேர்வு மையத்தில் நடந்த விஷயம் இது. காப்பியடிப்பது அதிகமானதால், அந்தத்தேர்வு மையத்தை கண்காணிக்க அதிகாரிகள் படை சூழ சென்றுள்ளனர். அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவியின் செய்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை உன்னிப்பாக கண்காணித்தனர். அடிக்கடி புடவையால் முகத்தை துடைப்பதும், மூக்கைத்துடைப்பதுமாக இருந்த அம்மாணவி அருகில் சென்று நைஸாக கண்காணித்தபோது அவர் தந்திரம் வெட்டவெளிச்சம் ஆனது. மாணவியின் புடவை ஓரங்களில் பல கட்டங்கள் புடவை டிஸைன் போல வரையப்பட்டிருந்தன. கட்டங்களுக்குள் கணித பார்முலாக்கள் வண்ணங்களில் எழுதப்பட்டிருந்தன. இதைக்கண்ட அதிகாரிகளுக்கு 'பகீர்' என்றது. அவரை மேலும் சோதித்ததில் அவர் புடவை ஓரங்கள் மட்டுமல்லாமல் புடவை மடிப்புகளிலும் பலவித 'பார்முலாக்கள்' வரையப்பட்டிருந்தது தெரிந்தது. பிறகென்ன? மாணவியை தேர்வு எழுத விடாமல் விசாரணைக்கு அழைத்துச்சென்றுவிட்டனர்.

இது போல் 'நூதன பிட்' அடித்தல் வியக்கத்தக்கது. இம்மாதிரி பிட் அடிப்பதைத்தடுக்க பீகார் அரசாங்கம்/இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நம் லாலுஜியிடம் இந்த அதிகாரத்தை கொடுத்தால் "இனிமேல் மாணவர்கள் கோவணத்துடன் தான் தேர்வு எழுதவேண்டும்" என்று சட்டம் கொண்டுவந்தாலும் வருவார். அப்போது தேர்வு எழுதுபவர்களை விட எழுத வருபவர்களைப்பார்க்க வருபவர்கள் கூட்டம் அதிகமாகிவிடும்.

1 comment:

  1. இந்த பிட் அடிப்பதாவது தமாஷாக முடிந்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண் ஆசிரியர் மாணவியை பிட் வைத்திருக்கிறார் என்று 'சோதித்து' அந்த பெண் அவமானத்தில் தற்கொலையே செய்து கொண்டாள். என்ன கொடுமை.

    என் பள்ளியில் ஒரு ஒன்றரை கண்ணன் இருந்தான். பிட் அடிப்பதில் மன்னன். அவன் எங்கே பார்க்கிறான் என்றே சொல்ல முடியாது. நுணுக்கி நுணுக்கி எழுதி நடராஜ் பாக்ஸிலும் அட்டையிலும் ஒட்டி விடுவான்.

    அதற்குத்தான் ஓபன் புக் பாலிஸி கொண்டு வரவேண்டும். இந்த பரீட்சை அமைப்பிலேயே எங்கள் பள்ளியில் 'ஓபன் புக்' பரீட்சையெல்லாம் எழுதியிருக்கிறோம்:-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!