இந்த இனிய மாலைப் பொழுதில் உங்களுக்கு ஒரு இனிய கானம்.
எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு திரைப்படங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு இசை அமைப்பாளர்கள், எவ்வளவு பாடகர்கள். இன்றும் இப்பாடல் நமக்கு இனிக்கிறதென்றால், thats is S.P.B and Raja. என்ன ஒரு finish !!!
Please click the below link to enjoy the video. கடைசியில், கண்டிப்பா நீங்களும் S.P.B. கூட சேர்ந்து ஆடுவிங்க.
href="http://www.youtube.com/watch?v=W8l_ezoU8Lc&mode=related&search=
என்றும் அன்புடன்
சதங்கா
Friday, May 18, 2007
Thursday, May 17, 2007
வீணையடி நீ எனக்கு....
ரிச்மண்ட் தமிழ் சங்கம் அண்மையில் தமிழ்ப் புத்தாண்டை இசைவிழாவாகக் கொண்டாடியது. நிறைய சிறுவர், சிறுமியர் தமிழில் இனிய பாடல்கள் பாடினர். பாரதியின் ஒரு பாடல் இதோ:
இன்னும் இரண்டு மாதிரிகள் இந்த சுட்டியில் காணலாம்.
இந்த நிகழ்ச்சிகள் அனைவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம் DVD வடிவில். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விரைவில் தெரிவிக்கிறோம்.
இன்னும் இரண்டு மாதிரிகள் இந்த சுட்டியில் காணலாம்.
இந்த நிகழ்ச்சிகள் அனைவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம் DVD வடிவில். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விரைவில் தெரிவிக்கிறோம்.
சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி
எனது சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி படிக்க இங்கே க்ளிக்கவும் அல்லது கீழ்கண்ட இணைப்பில் க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html
இதுவும் 2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலேயே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்த போது அப்போதைக்கும் இப்போதைக்கும் சன் டிவியின் தொடர்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிந்தது, அதனால் வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,முரளி.
Wednesday, May 16, 2007
மனங்கவர் சிங்கை
ஆசியக் கண்டத்தின் ஆச்சரியக் குறிப்புள்ளி
தேசிய மிதுவெனவே போற்றி வசிக்குமாந்தர்
அளவிற் சிறிதாயினும் அனைவரையும் ஆனந்தத்
திலார்த்து மற்புதச் சிங்கை (1)
வானுயர்ந்த வண்ணக் கட்டிடங்கள் வரிசையில்
வனப்புமிக பச்சைமரங் களெங்கும் -- வானம்
முழுதும் பெய்யும் வெய்யிலு மிருக்கும்
பொழுதில் நீர்வடிந்து விடும் (2)
சிவ லயன்சித்தித் தண்டபாணி சீனிவாசன்
ஸ்ரீவடபத்ர வைராவிமடவீ ரகாளிமாரி யவள்
யாவருடன் இன்னும்பலர் வீற்றிருக்கு மழகில்த்
தவக்கோலம் காணும் சிங்கை (3)
தீபத் திருநாள் திருக்கோலம் ஆண்டோறும்
தைப் பொங்கல் மறந்தாலும் தைப்பூசத்
திருவிழாவில் பலவிதக் காவடி தாங்கித்
தெருவெலாம் பக்தர் மயம் (4)
அரசுப் பேருந்தோ வாடகைச் சிற்றுந்தோ
விரைவுரயிலு மதோவெதிலும் சுற்றுகையில் ஊரழகு
வியக்கவைக்கும் நம்மனதை அதற்குழைக்கப் பாடுபடும்
தயக்கம் சிறிதுமிலாச் சிங்கை (5)
ஆடை அணிகலன்கள் அணிவகுக்கும் தொழில்நுட்பக்
கடைத் தெருக்கள் ஏராளம் -- கூட்டம்
அலைமோதி வாங்கத்துடிக் குமுயர்தரப் பொருட்கள்
விலைமலிவில்க் கிடைக்கும் சிங்கை (6)
ஆட்சி மொழி நான்கிலும் சமத்துவமே
வீட்சி யுறுமெனக் கூறும் காட்சி
இங்கில்லை அரசியலாக்க வில்லை இருந்தும்
எங்கிலும் தெரியும் தமிழ் (7)
உடுக்க உடை உண்ண உணவு
படுக்க இடம் எல்லாமும் கிடைத்திட
உண்டிங்கு வேலை என்று நம்மைச்
சுண்டி யிழுக்கும் சிங்கை (8)
கட்டுமானத் தொழிலாளர் ஓய்வான அந்நாளில்
திட்டுத் திட்டாய்க் குவிதலில்க் கூட்டம்
எட்டுத் திக்கும் பரவிநிற்க படபடக்கும்
சிட்டாய்ச் சிராங்கூன் சாலை (9)
குறைவிலா வசதி நிறைவான வளமுடன்
முறையான வாழ்வு தனில் உறையும்
ஊர்முழுக்கத் தூசிலாச் சுத்தத்திற்கு மாசற்ற
பேர்பெற்ற மனங்கவர் சிங்கை (10)
-----
ஐந்து பாடல்களில் முடிக்க எண்ணி பத்து பாடல்களாகிவிட்டன. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. நெல் விதைத்து நெல் அறுக்க, நிறையையே சொல்ல முயற்சித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டமிடுங்கள்.

Tuesday, May 15, 2007
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd
கவிஞர் புகாரி, திசைகள் மாலன் ஆகியோரின் முன்னுரையுடன் அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் வரத் துவங்குகின்றன.
அனைவரும் பொறுமையாக வாசிக்கவும் என்று கேட்டுக்கொள்கிறோம், அனைத்து முடிவுகளும் வெளியாக சில காலம் ஆகும் என்பதால்.
நடுவர்கள் வாசிப்புரை, வாழ்த்துரையுடன் கலக்கப் போகிறார்கள்!
இயல்கவிதைப் பிரிவின் நடுவரான திசைகள் மாலன் அவர்களின் நடுவர் உரையின் ஒரு பகுதியும் இன்று வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்கவும்.
http://groups.google.com/group

Monday, May 14, 2007
நிதர்சனம் - சிறுகதை
எனது நிதர்சனம் சிறுகதையினை படிக்க இங்கே க்ளிக்கவும்.
இது 11/25/2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
முரளி.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post.html
இது 11/25/2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
முரளி.
Friday, May 11, 2007
தோட்டம்
வாழைக் குலை தள்ளி
வைத்த கன்று பலவிருக்கும்
அவரை துவரை கொடியேறி
அழக ழகாய்ப் பூத்திருக்கும்
மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
மகரந்தத் தூள் பரப்பும்
கொய்யா மரத்து அணில்
குதித் தோடி விளையாடும்
மா மரத்து மைனா
மண்புழுவைத் தேடி நிற்கும்
வேப்ப மர நிழலடியில்
வெக்கை இன்றி குளுகுளுக்கும்
இளந் தென்றல் மிதமாக
இன்னிசை பாடி வரும்
மண்ணில் கால் பதிக்க
எண்ணம் நடை திறக்கும்
-----
என்றும் அன்புடன்
சதங்கா
வைத்த கன்று பலவிருக்கும்
அவரை துவரை கொடியேறி
அழக ழகாய்ப் பூத்திருக்கும்
மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
மகரந்தத் தூள் பரப்பும்
கொய்யா மரத்து அணில்
குதித் தோடி விளையாடும்
மா மரத்து மைனா
மண்புழுவைத் தேடி நிற்கும்
வேப்ப மர நிழலடியில்
வெக்கை இன்றி குளுகுளுக்கும்
இளந் தென்றல் மிதமாக
இன்னிசை பாடி வரும்
மண்ணில் கால் பதிக்க
எண்ணம் நடை திறக்கும்
-----
என்றும் அன்புடன்
சதங்கா
Thursday, May 10, 2007
படம் பார்த்து கடி சொல்
வலையில் கண்ட சில படங்களும் என்னுடைய கற்பனை பின்னூட்டங்களும்
"அப்பாடி, ப்ளேனுக்கு உள்ளேயே போயி ஏத்திவிட்டுட்டு வந்தாச்சு. இனிமே சத்தியமா திரும்பி வரமாட்டான்/திரும்பி வரமாட்டாள்"
"படிச்சு படிச்சு சொன்னா பொஞ்சாதி நீ செய்யுற வேலைக்கு வைர மோதிரத்தை போட்டுக்கிட்டு போகாதே" ன்னு. நான் கேக்கலே! எந்த பாவிக்கு குடுத்து வெச்சிருக்கோ. ம்ஹூம்.
அப்பாடி. நல்ல வேளை யாரும் பாக்கலே! எல்லோரும் நிகழ்ச்சியை ரசிச்சு பாத்துக்கிட்டு இருக்காங்க.
"எங்களை கைது பண்ண போலீசாலே பக்கத்துல கூட வர முடியலே. Gas Mask போட்டு கூட பார்த்தங்க. அப்போ கூட தாங்க முடியல்லே (நாற்றம்). போராடுவோம் போராடுவோம். வியர்வை சிந்தி போராடுவோம்"
"அவ ஸ்கேட்டிங்குக்கு அடியிலே கப்புனு ஒரு சின்ன கல்லை போட வேண்டியது தான். அப்புறம் நான் தான் ரேஸ்லே first"
"டேய் மட மடன்னு குடிச்சிட்டு இந்த பாட்டிலையும் ரொப்பு. வண்டி கிளம்பிடிச்சுன்னா ட்யூப் இழுத்து பிச்சிக்கும்"
Subscribe to:
Posts (Atom)