Friday, September 23, 2011
முதல் பெண் எழுத்தாளர்
Tuesday, September 20, 2011
மீனாவுடன் மிக்சர் - 24 {ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2}
என் அமெரிக்க பிரஜை பிரயாணத்தின் இரண்டாவது பாகத்தை கட்டுரைக்கு பதில் ஒரு நாடக வடிவில் எழுதி இருக்கிறேன். 99.9 % கற்பனை, 0.1 % மட்டுமே உண்மை. உங்க காதுல ஒரு அஞ்சு முழம் பூவுக்கு குறையாமல் இன்னிக்கு சுத்தறதுன்னு கங்கணம் கட்டி நான் எழுதிய நாடகம் இதோ. :-)
இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்புக் கூடம், அமெரிக்கா
Announcement:
Immigration Officer calling out loud: We now invite the following people to get ready for their interview next. Ti.....ti.....tizhu......tizhuvalvan, pen chali, mina san kaaren, Ambaajam, MLA (gives up after a while) and kunjamma. Please have all the necessary documentation ready and bring with you when your names are called again.
Translator - இப்பொழுது நாங்கள் டி டி டீழு ....டீழுவல்வன், பேன் சளி, மீனா சன் காரேன், அம்பாஜம், MLA (சொல்ல இயலாததால் விட்டு விட்டார்), மற்றும் குஞ்சம்மா - இவர்களை தேவையான பத்திரங்களோடு நேர்முகத் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டு கொள்கிறோம்.
திருவள்ளுவர் - டீழுவல்வனா? வாசுகியின் வாயில் அல்வாவாய் இனித்த என் பெயருக்கு உம்மோடு வாயில் இப்படி ஒரு இடியா? வயதில் முதியவனான எனக்கு இந்த நாட்டில் இவ்வளவு தான் மதிப்பா?
'பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.'
என்ற என் குறளை மறந்தே விட்டீரா?
குஞ்சம்மா - யோவ் பெருசு, உன்னோட ஆனாலும் ரோதனையா போச்சுய்யா. ஆ வூன்னா ஒரு ரெண்டு வரி அணு குண்டை நீ பாட்டுக்கு எங்க மண்டைல போட்டுட்டு போயிரு. உன்னால ஊர்ல சின்ன பசங்க கனவுல எல்லாம் ராத்திரி பல்லவன் பஸ்ஸோட பின் பக்கம் வந்து பயமுடுத்துதாம். சும்மா முறுக்கிக்காம அந்தம்மா கூப்பிட்டா போவியா, என்னமோ ரொம்ப தான்....
அம்புஜம் - வள்ளுவர் மாமா, இதுக்கெல்லாம் கோவிச்சுக்காதீங்கோ. வந்த காரியம் நல்ல படியா முடியணும், அது தானே இப்போ முக்கியம். இந்த நேர்முக பரிட்சைல பாஸ் பண்ணி நல்லபடியா அமெரிக்க பிரஜை ஆகணுமேன்னு ஒரு மாசமா தினமும் நான் சுந்தர காண்டம் படிச்சிண்டு இருக்கேன்..இருந்தாலும் இன்னிக்கு அந்த பகவான் எனன நினைக்கிறானோ, தெரியலையே. ஏம்மா பாஞ்சாலி, பிரஜை ஆயிடுவோம்னு நீ மனசுல நம்பிக்கையோட இருக்கியா? ஆமாம், அது எனன உன் தலையில பச்சையா அசிங்கமா ஏதோ பூசிண்டு வந்திருக்க? அச்சச்சோ, புருவம் பக்கத்துல வேற லேசா ஒழுகறதே!
பாஞ்சாலி - (புடவை நுனியில் துடைத்தபடியே) அது ஒன்றும் இல்லை அம்மா. கொஞ்சம் நாளாகவே தலையில் பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கு. அந்த துச்சாதனன் கம்னாட்டியின் ரத்தத்தை என் கூந்தலில் என்று பூசினேனோ அன்றிலிருந்தே இந்த தொல்லை தான். அதோடு இவ்வுலகம் மெச்ச ஒரு சபதம் எடுத்து வேறு கொஞ்சம் நாளாகி விட்டது. சரி ஒரே அம்பில் இரு கௌரவர்களாய் இருக்கட்டுமே என்று தான் 'அமெரிக்க பிரஜை ஆகாமல் இந்த கூந்தலை நீராட மாட்டேன்' என்று சபதம் போட்டு அதே கையோடு ஒரு பிடி வெந்தயத்தை வேப்பிலையோடு அரைத்து என் கூந்தலில் தடவிக்கொண்டேன். பிரஜை ஆகா விட்டாலும், பொடுகாவது தொலையுமே?
அம்புஜம்: ஆனாலும் நீ புத்திசாலி பாஞ்சாலி. இல்லேன்னா பாண்டவா மாதிரி ஒரு கூட்டு குடும்பத்துல வாக்கப்பட்டு உன்னால பிழைக்க முடியுமா? எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்மா. உங்க மாமியார் குந்தி தேவி..(மீனாவின் முறைப்பில் கேள்வியை நிறுத்துகிறார்)
மீனா: ஏம்மா பொடுகையும் குந்தி தேவியையும் பத்தி வாதம் பண்ண இது தான் நேரமா? அமெரிக்க வரலாறு பத்தின தேர்வுக்கு நீ ரெடியா? அமெரிக்காவோட கொடியில் ஏன் பதிமூணு கோடு போட்டிருக்கு, சொல்லு பார்ப்போம்?
அம்புஜம்: பத்து மாசம் சுமந்து பெத்த தாயை நிக்க வச்சு கேள்வி கேக்கறியே, இது சரியா மீனா? அதோட 13 ராசி இல்லாத நம்பர். பேசாம கொடியில 12 கோடு போட்டா போதும்னு நானே ஒபாமாவுக்கு எழுதி போடலாம்னு இருக்கேன். எப்படி என் ஐடியா? (மீனாவின் கண்ணில் கிலோ கணக்கில் நிராசை)
MLA அராஜகசத்ரு: இந்திய வரலாற்று பரிட்சைக்கே தில்லா கோனார் உரை நூல் கூட படிக்காம போய் எழுதி அஞ்சு மார்க் மட்டுமே எடுத்து பெயிலானவன் நான். அமெரிக்க வரலாறுன்னா மட்டும் என்ன கொம்பா? உடனே படிச்சிரணுமா? எவன்டா அவன் என்னை படிக்க சொல்லறது இங்கே? டாய்.................
அம்புஜம்: வேண்டாம்பா MLA! அமெரிக்காவுக்கு வந்த இடத்துல இப்படி வேட்டியை தூக்கி கட்டினா நல்லாவா இருக்கு. இறக்கி விட்டுடு. அது சரி, உள்ள போட்டிருக்கியே அழுக்கா ஒரு கட்டம் போட்ட அரை நிஜார், அது என்ன போன வருஷம் ஆளும் கட்சி உன்னை ஒரு மாசம் ஜெயிலுக்குள்ள போட்டாங்களே, அப்ப குடுத்ததா? சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்த கலர் ரொம்ப சுமாரா இருக்கு. அடுத்த முறை போனீன்னா நல்லா ராமர் நீலத்துல கேட்டு வாங்கி போட்டுக்கோப்பா. உன் நிறத்துக்கு அட்டகாசமா இருக்கும்.
மீனா: ஷ்....அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா.
-------------------------------
In the interview room:
Officer - Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today?
Translator - உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?
திருவள்ளுவர் -
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்"
என்று சொன்ன என் வாய்மையின் மேலா சந்தேகம்? (உக்ரமாக) நக்கீரா என்னை நன்றாக பார்!
Translator - Nakkeeraa, look at him.
Officer - Who, for the love of Mary and Joseph, is Nakkeeraa?
Translator - மேரி மற்றும் ஜோசப் மேல் உள்ள அன்பினால் கேட்கிறேன், யார் அந்த நக்கீரா?
திருவள்ளுவர் - அது ஒரு பெரிய கதை. வேண்டுமானால் 'திருவிளையாடல்' படம் வாங்கி தருகிறேன், போட்டு பார்த்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.
Translator - That is a big story. If you want..
Officer - No, no, no, no....... I don't want a big story. For that matter, I don't want a small story either. (groaning) Just 2 minutes in to the interview and I already have the mother of all headaches. ( at the translator) Please take this man outside and bring "Ambujam" in for the interview. (Looking at திருவள்ளுவர்) I will get back to you Mr. Theruvalvan. Please step outside and take a seat until you are called in again.
---------------------
(இந்த பிரஜையின் பிரயாணம் தொடரும்)
- மீனா சங்கரன்
Sunday, September 18, 2011
Tuesday, September 06, 2011
பஹாமாஸ் விஜயம் - 5
Monday, August 29, 2011
உத்தமன் பகுதி II
---------
Washington D.C., Feb 2015.
அமெரிக்காவுக்கு வந்து சில வருஷங்கள் ஆயிடுச்சுங்க. காலையில டீ குடிச்சிகிட்டே இண்டர்நெட்டை பாத்துகிட்டு இருக்கேன். அட! இன்னைக்கு அறிஞர் அண்ணாவுடைய இறந்தநாளாம். வோட்டுக்காக அவரை இன்னும் மறக்காமல், எல்லா கட்சியும் மாலை போட்டு போட்டோ எடுத்துக்கிறாங்க. எப்படிங்க மறக்கமுடியும்? இன்னும் ரெண்டு மாசத்துல election வருதுல!!! அறிஞர் அண்ணானோனே என்னையும் அறியாம இன்னொரு அன்னா நியாபகத்துக்கு வர்றாரு.
மறக்க முடியும்மாங்க அவர? அவரால என் வாழ்க்கையே வீணாபோயிருக்கும். அவர் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இணைஞ்சு பிணையும் அரசுக்கு எதிரா (ஊழழுக்கு எதிரான்னு அப்ப சொல்லிகிட்டங்க) சில வருஷம் முன்பு போராட்டம் நடத்தியபோது, நான் கூட முட்டாள்தனமா கலந்துகிட்டேன். என்னை கைது பண்ணி ஜெயில்ல போட்டுருபாங்க. அப்பாதான் யார்யார் கைகாலுல விழுந்து, என்னை காப்பாத்தி, இங்க அனுப்பிவச்சுட்டாருங்க.
இங்க வந்ததுக்கு அப்புறம் பொழப்ப பார்கணுமுல. சொந்த அண்ணனையே நினைக்க நேரம் இல்லாதபோது, இந்த அன்னா எல்லாம் எம்மாத்திரம். என்னங்க நான் சொல்லுறது சரிதானே? ஆரம்பத்துல ரொம்ப கஷ்டபட்டேங்க. ஏதோ ஒரு சின்ன ஊருல தான் வேலை கிடைச்சுது. ஒரு ஹிந்திக்காரன் கூடத்தான் தங்கவேண்டிய தலையெழுத்து. ஆனா, நான் நினைச்ச அளவுக்கு அவங்க மோசம் இல்லைங்க. எல்லா உதவியும் அவன்தாங்க செஞ்சான். நம்ப ஊருல சுயலாபத்துக்காக எல்லாத்தையும் தப்பு தப்பாவே சொல்லிகுடுத்துடான்களோ கூட தோணிச்சு. சரி சரி, அத விடுங்க, கோவபடாதிங்க.
மேற்கத்திய நாடுகள்ல ஊழல் இல்லன்னு நம்ப ஊரு பத்திரிக்கைல திரிபான்னுங்க. அத எல்லாம் நான் நம்பினதே இல்ல. சந்து கிடைச்சா சிந்து பாடுறது மனுஷ குணமுங்க. அதுல வெள்ளத்தோல் மட்டும் விதிவிலக்கா எனக்கு தோனும். அதுவும் facebook-ல, நடமாடும் economic times தோழர் சமா என்பவர், அமெரிக்காவில நடந்த housing scam, stock market scam பத்தி பிரிச்சி மேய்ஞ்ச்சிருக்காருங்க. அதுனால, காச குடுத்து காரியத்த சாதிக்க முடிஞ்சால் பண்ணிக்கவேண்டியதுதான்னு தீர்மானிச்சேனுங்க.
நம்ப ஊரு ரேஷன் கார்டு போல இங்க 'sso card' வாங்கணும். அந்த ஆபீசிக்கு போனா, அரைமணி நேரம் கூட ஆகலைங்க. form fill-up பண்ணிட்டு, document சரி பார்த்திட்டு, ஒரு வாரத்துல போஸ்ட்ல வரும்ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டாங்க. எனக்கு ஆச்சிரியமா இருந்திச்சு. bankலையும் அதே மாதிரி. ஒரு விஷயம் சொல்லனும்ங்க. இப்ப நினைச்சா கேவலமா இருக்கு. இருந்தாலும் சொல்லுறேன். இந்த சின்ன ஊருல மூணு மாசமோ, ஆறு மாசமோ. ஒரு credit card வாங்கி கண்டதையும் வாங்கிட்டு கண்ணுக்கு தெரியாம ஓடுற 'தில்லாலங்கடி திட்டத்த' அரங்கேற்றலாமன்னு நினைச்சு கேட்டு பார்த்தேன். 'credit history' இல்ல, குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். வேணும்னா ஐநூறு டாலர் deposit போட்டு அப்புறம் அதுலேர்ந்து எடுக்குற மாதிரி ஒரு கார்டு தர்றோமுன்னு சொன்னான். சரிதான் போடானுட்டேன்.
இதே கதை தாங்க எல்லா விசயத்திலும். கார் license குறுக்கு வழியில வாங்கலாமுன்னு பார்த்தா முடியல. Driving license கிடைச்ச பின்னே, கார் வாங்குறதுல sales tax ஏமாத்தலாமுன்னு பார்த்தா முடியல. கார் வாங்குனோனே, ஸ்பீடா ஓட்டி டிக்கெட் கிடைச்சு லஞ்சம் குடுத்து எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா முடியல. சரி, 'not guilty' ன்னு சொல்லி கோர்டுக்கு போயி கோக்குமாக்கு பண்ணலாமுன்னு பார்த்தா முடியல. ஸ்பீடிங் டிக்கெட் கிடைச்சதால இன்சூரன்ஸ் பிச்சுகிச்சு. அத சரிகட்ட, இன்சூரன்ஸ் agent-a தாஜா பண்ணலாமுன்னு பார்த்தா முடியல. முடியும்கிற வார்த்தையே இவனுகளுக்கு தெரியலன்னு தோணிச்சு. பிழைக்க தெரியாத கூட்டமா, இல்ல ரொம்ப நேர்மையானவன்களோன்னு முடிவு பண்ண முடியலங்க. அமெரிக்கா நல்ல மண்ணு, இந்தியா சாக்கடைன்னு தோணிச்சுங்க.
விஷயம் கொஞ்சமே தெரிஞ்சாலும், வாயால வண்ணம் பூசி, வாஷிங்டன் பக்கமா வந்து சேர்ந்தேங்க. அங்கே தான் 'self-mailee' என்று செல்லமாக அழைக்கப்படும் ஒருவரை சந்தித்தேன். அவர் பெயர் முத்து. வெளிய சொல்லாதிங்க. ரொம்ப போர் அடிச்சா அவருக்கு அவரே mail அனுப்புவாராம். அதான் அந்த பேரு! விளையாட்டு மனுசன் போங்க. அவர் மூலமாக 'சொல் கொல் வித்தகர்' சத்தியாவின் (அதாவது சொல்லில் விளையாடி, கொல்லென்று சிரிக்க வைப்பதில் வல்லவர்) அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதும் 'richmond blog'ன் தொடர்வாளனானேன். அன்னா ஹசாரே பற்றி அவர் எழுதிய பழைய பதிவு ஒன்று, எனக்குள்ளாற கேள்வியை எழுப்பியது. அதன் பிறகுத்தான் தெளிவு பிறந்தது. அன்னா ஹசாரேவின் தான்தோன்றிதனத்தை அவர் கண்டித்த பாங்கை படித்து, படிக்காத பாமரன்(அன்னா ஹசாரே) பின் நின்றேனேன்னு வெட்கபட்டேன்.
வாஷிங்டன்லயே செட்டில் ஆகலாமுன்னு முடிவுபண்ணி ஒரு 'foreclosure home' வாங்கி குடியேறினேன். 'foreclosure home' கிறது அமெரிக்காவின் ஊழல் கதைங்க. நான் முன்னாடி சொல்லல, மனுஷனாலே டகால்டி புத்தி உண்டுன்னு. கட்டுப்பாடு தளரும்போது எல்லாமே காத்துல்ல பறக்கும் போல. அப்புறம் அமெரிக்கா என்ன? இந்தியா என்ன? எல்லாம் ஒரே கருமம்தான். அதே சமயம் ஒரு சந்தேகமும் வந்திச்சுங்க. அப்ப அமெரிக்கா நல்ல பூமி இல்லையா? இங்கேயும் சில சாக்கடைகள் இருக்கும் போலிருக்கே? இந்தியாவில் இருக்கிற என் தாத்தாகிட்ட கேட்டா, எந்த பூமியா இருந்தாலும் சாக்கடை நீர் அதிகமாக சேர்ந்தால் சாக்கடைத்தானாரு பாருங்க! சாக்கடைகளை கட்டுபடுத்தினா எந்த பூமியிலயும் மாற்றம் வருமுன்னு வேற சொன்னாருங்க. சாக்கடையின்னு அவர் சொல்லுறது கொழுத்த அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளையும்மான்னு புரியலைங்க. அவர் கிடக்காரு விடுங்க. அன்னா ஹசாரே போல வயசான உலக நடப்பு புரியாத ஆளு.
வாஷிங்டன்ல பல நாட்டு நட்பு கிடைச்சுதுங்க. தமிழ்நாட்டுல உள்ள ஒரு 3,41,427 engineering கல்லூரில, ஒரு டப்பா டுபாக்கூர் கல்லூரில படிச்சிருந்தாலும், இப்ப எல்லாமே anna university என்பதால, என்னை கிண்டி எடுக்கும் கிண்டி கல்லூரி குழுமத்துல நம்ப முத்து சேத்துவிட்டாருங்க. கொடிகாத்த குமரனை போல் கொள்கை பிடிப்பான காந்தியவான் காளி, விஜயகாந்தே வெட்கப்படும் அளவிற்கு எண்களை சுழற்றும் புள்ளி விவர புலி நர்கி, எழுத்தின் காட்டத்தை பார்த்தால் சிங்கத்தின் சீற்றம் தூசு என்று எண்ணவைக்கும் சுதா, தண்ணீர் குடிப்பதைப்போல் தமிழோடு விளையாடும் சத்தியா, அவர் phoneல அவரையே கூப்பிட்டு பேசும் முத்து, எதற்கும் complex equation தயாரிக்கும் ஐன்ஸ்டீனின் இந்நாள் பிரதிபலிப்பு algerbra (angry) அம்ரி, மேற்கத்திய ஏகாபத்தியத்தை தனி ஆளாய் நின்று கருவறுக்கும் secular சமா, அவ்வப்போது வந்து அணுகுண்டாய் வெடித்து முழங்கும் சீர்திருத்தச்செம்மல் சிவா, பட்டென்று சொன்னாலும் பொட்டில் தெரித்தாற்போல் சொல்லும் செல்லு, தெளிவாக குழப்புவதில் தேர்ச்சிபெற்ற சிங்கி, தென்றலாய் பல நேரமும் புயலாய் சில நேரமும் மாறும் அஷ்வின், வடைக்கு இடமில்லா விஷயத்தை பற்றி வருந்தி அழைத்தாலும் எழுதாத கனகு, சாரா பாலின் இல்லையென்றால் நான் சேர மாட்டேன் போடா எனும் GT, iPhoneனுடன் குடும்பம் நடத்தும் multi-processor ரமேஷ், தங்கத்தலைவன் ரஜினியின் அமெரிக்க அச்சு வெங்கி, ஆயிரம் mailக்கு ஒரு mail அனுப்பும் அல்கி மற்றும் mail-a அனுப்பாத பலருடைய கருத்துகளால் என் சிந்தை சுடர்விட ஆரம்பிச்சுதுங்க.
கிழவன் (அதாங்க அன்னா) விஷயத்தில் குழும கருத்துக்களால் நான் தெளிவடஞ்செங்க. இந்திய அரசியலமைப்பு எதிரா போராட்டம் பண்றது தப்புதானுங்களே. ஆட்சி அமைக்க குதிரை பேரம் பேசுறது, MPகளை விலைக்கு வாங்குறது, அழிச்சாட்டியம் பண்ணி வேணும்கிற துறையை மிரட்டி வாங்குறது, வழக்குகளில் இருந்து தப்ப ஆட்சிய கவுக்கிறது, சமய வெறியை தூண்டி குளிர் காயிறது, இப்படி பல விஷயங்கள் நெருடுதேன்னு தோணலாம். ஆனா, மக்கள் தேர்ந்தெடுத்தாச்சு. அப்புறம் என்னங்க தப்பு?
மொத்ததுல, எந்த அதிகாரமும் இல்லாத வர்க்கம் தானா மாறுனாதானே எல்லா அதிகாரமும் இருக்கிற வர்க்கம் பயந்து நடுங்கி திருந்தும்? சரிதானுங்களே?
அத விடுங்க, கீழிருந்து மேலன்னு சொன்னோனதான் நியாபகம் வருது. நாளைக்கு புது team க்கு leader ஆகுறேன். சுத்தமா உதவாத கூட்டமாம். ஒரு நாள் வேலைய ஒன்பது நாள் இழுத்தடிபானுங்களாம். ஆரம்பத்திலேயே strict-a இருந்தாதான் வழிக்கு கொண்டுவரமுடியும். நான் பாட்டுக்க 'bottms-up' theory-a அங்க முயற்சி பண்ணினா, என் 'bottom' ல ஆப்பு தான் இறங்கும். theory-a சோதிக்கிற தேவையில்லாத வேல எனக்கு எதுக்கு?
அட! விஷயமே தெரியாத உங்களுக்கு? 2011 ல அன்னா போராடுனத்துக்கு பணியிற மாதிரி போக்கு காட்டிட்டு, 2014ல ரூபாய் 525 ஊழல் பண்ணிடாருன்னு தூக்கு தண்டனை விதிச்சிடாங்க. இன்னும் பத்து நாளுல தூக்கு. spectrum ஊழல்ல அப்பழுக்கற்றவருன்னு வெளிவந்த புடம் போட்ட தங்கம், ஆ.ராசாவுக்கு, இன்னைக்கு பாரதரத்னா விருது குடுக்கிறாங்க. அதுக்காக இந்திய பிரதமர் ராகுல் பெருந்தன்மையோட நேரம் ஒதுக்கி கொலம்பியாவிலிருந்து வந்திருக்கார். இப்ப விட்டா எப்ப வருவாருன்னுதான், சந்தர்பத்தவிடாம கர்மாவீரன் ஜெய் கத்திகிட்டு இருக்காரு போல. அந்த stretcherல வர்றது யாருன்னு பாக்குறிங்களா? நம்ப கலைஞர் அய்யா தான். 92 வயசாவுது. கோமாவுல இருக்காரு. ரெண்டு மாவட்டம் மாயமா போன ஊழல்ல ஜெயாதான் மாட்டிகிட்டு முழிக்கிறாங்களே. ராஜபக்சவுக்கு வித்துட்டாங்கன்னு ரகசியமா பேசிகிறாங்க. மக்கள் அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டி என்ன ஏதுன்னு தெரியாம கொதிபாங்கலே? அது போல கொதிச்சு போயிருக்காங்க. அதனால கட்டாயமா அடுத்த முதல்வர் அய்யா தான்.
சரி அப்புறம் பார்போமுங்க. அடடா! இதுவரைக்கும் என் பேர நீங்க கேட்கவே இல்லீங்கலே. நான் அன்னியனுங்கோ. officeல A.N.ன்னு சொன்னதான் தெரியும். இங்க வரும்போது ஏதோ ஒரு பேரு இருந்திச்சு. இப்ப நியாபகம் இல்லீங்க. பெயர் காரணம் கேக்குரீங்களா? இந்த ஊரின் முன்னோடிகள் பார்த்து பார்த்து வகுத்த வழிமுறைகள் பெருமளவிற்கு நடைமுறைபடுத்துவதை, அலுங்காமல் குலுங்காமல் அனுபவிக்கும் அயல்நாட்டில் (இந்தியாவில்) பிறந்த அந்நியன் நான். நல்லாருக்காங்க பேரு?
Saturday, August 27, 2011
ரிச்மண்ட் மகாத்மியம் - 1
தொலைபேசியில் நடந்த வேலைக்கான தேர்வில் நான் கேட்ட முதல் கேள்வி. அதுவும் சற்று வடக்கே மேரிலண்ட் மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு... அடுத்த பக்கத்தில் இருந்து ஒரு சிரிப்பு.
மேரிலண்டில் இருந்து தெற்கே எங்காவது போயிருக்கிறாயா?
போயிருக்கிறேனே. வட கரோலைனா சாபல் ஹில்லுக்கு.
அப்படியானால் நீ ரிச்மண்ட் வழியாகத்தான் போயிருப்பாய்.
மெய்யாலுமா?
அதுதான் ரிச்மண்ட், வர்ஜினியா குறித்து நான் முதலில் கேள்விப்பட்ட விதம். ரிச்மண்டில் இருக்கிறேன் என்று சொன்னவுடன் மற்றவர்கள் கேட்டவை:
"அப்படியா. மைக்ரோசாப்டிலா வேலை உனக்கு".
"அது ரெட்மண்ட்யா, ரிச்மண்ட் இல்லை"
கொஞ்சம் விவரம் தெரிந்த கலிபோர்னியா வளைகுடா மக்கள்:
"பரவாயில்லையே, இங்க ஈஸ்ட் பே-ல தான் இருக்கியா இப்போ"
"இது ரிச்மண்ட், வர்ஜினியாப்பா, ரிச்மண்ட கலிபோர்னியா இல்லை"
ரிச்மண்ட்,வர்ஜினியா!
இந்த ஊரிலிருக்கும் இந்தியர்கள் தவிர மற்ற இந்தியர்களுக்கு தெரியாத ஊர். ஜனத்தொகையிலோ, நிலப்பரப்பிலோ அமெரிக்க பெரிய நகரங்கள் பட்டியலில் வராத ஊர். வேறு ஊரிலிருக்கும் நண்பர்களும், சுற்றமும் ஊரைச் சுற்றிப் பார்க்க வராத ஊர். வந்தால் எங்களைப் பார்க்கத்தான் வரவேண்டும். ஆனால் அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெரும் பங்கு வகித்திருக்கின்றன ரிச்மண்டும் அருகில் இருக்கும் இடங்களும்.
நான் ரிச்மண்ட் பற்றி ஒன்றும் கேள்விப்படாமல், எந்த மடமும் சொந்த மடம் என்று வாழ்ந்த நாட்களில் இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். வந்த சில நாட்களில் அலுவலகத்தில் சக ஊழியனுடன் பேச்சு இப்படி போனது.
என்னய்யா, இந்த ஊர்ல என்ன ஃபேமஸ்?
என்ன அப்படி கேட்டு விட்டாய்? இரண்டு போர்களிலும் ரிச்மண்ட் எரிந்தது தெரியுமா?
அப்படியா? முதல் போரைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இரண்டாவது போரில் இந்த நாட்டில் ஹவாயில் மட்டும்தானே குண்டு போட்டார்கள். இது என்ன புதுக்கதையாக இருக்குதே?
ஹவாயா? நீ எந்தப் போர்களைப் பற்றி சொல்கிறாய்?
உலகப்போர்களைத்தானே சொல்கிறாய் நீ?
இல்லையப்பா. சுதந்திரப் புரட்சிப் போர், உள்நாட்டுப் போர் (civil war) இரண்டையும் பற்றித்தான் நான் சொன்னேன்.
சுதந்திரப் போர், உள்நாட்டுப் போர் - யாரவர்?
நான் சமச்சீர் கல்வி வராத நாட்களில் தமிழக அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் படித்தவன். எனக்கு மூவேந்தர்களும், சாளுக்கியர்கள், அசோகர், ஹர்ஷர், மௌரியர்கள் தவிர வேறு எந்த சரித்திரமும் தெரியாது. அப்படியாக ஆரம்பித்தது எனது ரிச்மண்ட் வரலாறு குறித்த ஆர்வம்.
அப்படி இருந்தவனிடம் பாண்டிச்சேரியில் ஒரு முதியவர் கேட்டார்: ரிச்மண்டா - வர்ஜினியா டொபாக்கோ! என்னையும் என் பிள்ளைகளையும் அப்படித்தான் அழைக்கிறார் அவர் இன்றும். அமெரிக்க மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் மாநில சுயாட்சிகளை காற்றில் பறக்கவிட்டு லூசியானாவை வாங்கிய கதையெல்லாம் புட்டு புட்டு வைத்தார். வெட்கமாகப் போய்விட்டது.
மேலும் தொடரும் என்று போட ரொம்ப யோசனையாக இருக்கிறது. நம்முடைய பதிவுகளுக்கும் தொடர்களுக்கும் பொருத்தமில்லையே? :-)
சமீபத்தில் நடந்த தமிழ்ச் சங்க வனபோஜனத்தில்(அதாங்க பிக்னிக்) தலைவர் முத்து ரிச்மண்ட் குறித்து எழுதுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். அதற்கான எனது ஆரம்பம் இது. நான் மேலே எழுதுவதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். அனைவரையும் தங்கள் ரிச்மண்ட் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இந்த ஊரைப் பற்றியோ, அருகில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியோ, இந்த ஊர் வாழ் தமிழர், இந்தியர் சமூக அனுபவங்களையோ எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். வெளியே ஐரீன் அம்மா வெளுத்து வாங்குகிறார். உங்களுக்கு வேறு என்ன வேலை. எழுதுங்கள்.
பித்தனின் கிறுக்கல்கள் - 44
கண்றாவி அரசியல்
உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்கள் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கேட்ட முதல் கேள்வி, "அன்னா ஹசாரேவோட உண்ணாவிரதம் முடிவுக்கு வருமா?" அடுத்த கேள்விகள் "அவர் கேக்கரமாதிரி லோக்பால் மசோதாவை மத்திய அரசாங்கம் ஒத்துக்குமா? எப்படியாவது ஊழல் குறையுமா?" தான். இது எப்படி இருக்குன்னா சத்யா அவரோட உத்தமன் பதிவுல சொன்னது போல், நாம் எல்லோரும் சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி நம் காரியம் நடக்க தவறு செய்யவும் லஞ்சம் கொடுக்கவும் தயாரா இருக்கோம், ஆனால் யாராவது வந்து எல்லாத்தையும் நிறுத்தனும் என்று எதிர் பார்க்கிறோம்.
அன்னாவுக்கும் அவரை சுத்தியிருக்கரவங்களுக்கும், ஊழல் தப்பு, ஊழல்வாதிகளை லோக்பால், ஆவின் பால், ஆட்டுப் பால், மாட்டுப்பால்ன்னு ஏதாவது ஒன்னுல பிடிச்சு போடனும், அதுல இந்தியாவில இருக்கர எவனாயிருந்தாலும், ஊழல் பண்ணினா தண்டனை சீக்கிரம் தரப் படனும். இதுக்கு தமிழ்நாடு உட்பட ஆயிரக்கணக்கானவங்க சேர்ந்து குரல் கொடுக்கராங்க அதை பத்தி யாராவது எதாச்சும் எவனாவது சொன்னான் செத்தான். நம்ம சத்யா அதை காரசாரமா விமர்சிக்க, குயில், நாகுன்னு ஆளாளுக்கு தர்ம அடி போட, அவர் பாவம் காமெடியா ஒரு பதிவு போட்டு ஒப்பேத்தியிருக்கார். அதையும் தாண்டி இந்தப் பதிவுக்காக யார் எம்மைத் திட்டினாலும் எமக்குக் கவலையில்லை.
இப்படிப் பட்ட காமெடி இந்தியா முழுக்க நடைபெறும் அதே சமயம், இந்தியாவில தமிழ்நாட்டுல இந்தியாவோட முன்னால் ப்ரதமரையும் இன்னும் பல பேரையும் குண்டு வெச்சு கொன்னவங்களுக்கு உதவியா இருந்தவங்கன்னு பல பேரை கைது பண்ணி பல வருஷங்களா அவங்களை விசாரணை பண்ணி கோர்ட் தூக்கு தண்டனை கொடுத்து அது பலப் பல வருஷங்களா கிடப்புல இருந்து சமீபத்துல அந்த முக்கிய மூன்று குத்தவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேத்த முடிவு எடுத்ததுக்கு தமிழ்நாட்டுல இருக்கர அத்தனை பைத்தியங்களும் எதிர்க்க ஆரம்பிச்சுருக்குங்க. இதுனால தமிழ்நாட்டு பேர் கெட்டுப் போயிடும்ன்னு பயமா, இல்லை தமிழ்காரன் என்ன வேணா செய்யலாம் ஆனா அவனை தூக்குல போடக் கூடாதுன்ற லாஜிக்கான்னு தெரியலை. அவங்க மூனு பேரும் தப்பே செய்யலைன்னு யாரும் வாதாடலை, அவங்க தவறா கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு தண்டனைத் தரப் படுகின்றனர் என்று அந்த மூன்று பேரைத் தவிர யாரும் சொல்லவில்லை. சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு குற்றம் என்பது மிக மிக சீரியஸான ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இலங்கையில் பலப் பலத் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இந்த மூன்று பேரையும் தமிழ்நாட்டில் தூக்குல போடக் கூடாதாம். இதில் என்ன லாஜிக் என்று நாம் கேட்கப் போவதில்லை. லாஜிக் என்ற ஒன்றை எதிர்பார்த்தால் இப்படிப் பட்ட பைத்தியங்களை பேச விடுவோமா? நேற்று, முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களை 'மறப்போம் மன்னிப்போம்' ரீதியில் மன்னிப்பதுதான் மனிதாபிமானம் என்று உளறியிருக்கிறார். இந்த விஷயத்தில் இதுவரை உளறாமல் இருப்பது செல்வி ஜெயலலிதா மட்டுமே. பத்தாயிரம் பயித்தியங்களுக்கு நடுவில் இவர் மட்டும் எத்தனை நாள் தெளிவாக பேசிக்கொண்டிருக்க முடியும் என்பது தெரியவில்லை.
ஊழலைத் தடுக்கரது மட்டும்தான் அன்னாவுக்கு முக்கியம். அதே சமயம் குண்டு வெச்சு மக்களைக் கொலை செஞ்சா வெறும ஆயுள் தண்டனைதான் கொடுக்கனும். பாராளுமன்றத்தைத் தாக்கினால் மன்னிக்கனும், தீவிரவாதம் செஞ்சுகிட்டே இருக்கரவங்களை பார்த்து பரிதாபப் படனும் காரணம் இவங்களுக்கு வேலையில்லை வேலையிருந்தா இதச் செய்ய மாட்டாங்கன்னு சால்ஜாப்பு மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்வார், அதையும் மீறி மாநிலங்கள்ல தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் செஞ்சா அது அந்த மாநிலத்தோட பொறுப்புன்னு அவரே பொறுப்பில்லாம பதில் சொல்வார். மும்பய்-ல ஒரு ஹோட்டல்ல தீவிரவாதிகள் தாக்கி பல வெளிநாட்டவர்கள் உட்பட பலர் இறந்த பிறகு பிடிபட்ட ஒருவனுக்கு தினமும் 1-3 கோடி ரூபாய் செலவு செஞ்சு அவனைத் தூக்குல போடாம இருப்போம் இந்த விஷயத்துல மக்களுக்கு மனிதாபிமானம் வேணும். இப்படிப் பட்ட கேணத்தனமான டயலாக்கை கேக்கனும், அன்னாவுக்கும் ஜே போடனும், இந்த ரெண்டுல எதை கேள்வி கேட்டாலும் அடிப்பாங்க.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்