Thursday, February 24, 2011

பஹாமாஸ் பயணம்

முரளி: "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த கதை தெரியுமா?
தெரியாதா, எனக்கும் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சமீபத்தில் க்ரூஸ் அதாங்க சொகுசு சுற்றுலா (தப்பா படிச்சுட்டு "என்னாது, சொகுசு சுந்தரியா"ன்னு கேக்கக் கூடாது) பஹாமாஸ் போய் வந்த கதை நாளைக்கு வெளியிடப் போறேன்".

நாகு: "நாளைக்கா!"

முரளி: "உடனே நாளைக்குன்னா நாளைக்கா, ம்ம்ம்ம் நாளான்னிக்கு, ஹும்ம்ம் அதுக்கு மக்கா நாள்ன்னு வெச்சுக்கங்க எழுதி ஒரு ரெண்டு பதிவு, போட்டு வாங்கிடலாம்னு இருக்கேன். உடனே ஊருக்கு போகனும், ஆஃபீஸ்ல ஆணி புடுங்கணும், தமிழ் சங்க விழாவில தட்டி தட்டி கைவலிக்குது, விசிலடிச்சு வாய் வலிக்குது, சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு சொல்லாம, மருவாதையா படிங்க, ரசிங்க, பின்னூட்டமிடுங்க சரியா".

-முரளி இராமச்சந்திரன்.

9 comments:

  1. வர வர நாட்டுல ஒரு சர்ப்ரைஸுக்கே வாய்ப்பு இல்லாம போகுது. கதாபி என்ன பேசப்போகிறார்னும், ஓபாமா இன்னைக்கு சாயந்திரம் என்ன அறிவிப்பு கொடுக்கப் போறார்னும் முன்னயே சொல்லிட மாதிரி இருக்கு.

    அது தவிர, சின்ன வயசுல பண்ருட்டில அரசியல் கூட்டங்களில் அறிவிப்பு விடுவார்கள். பேச்சாளர் சென்னையில் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இங்கே கூட்டத்தில் - தலைவர் விழுப்புரத்தை தாண்டிவிட்டா, பண்ருட்டி எல்லைக்கு அருகே வந்துவிட்டார், என்று அறிவிப்ப் விட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுபோல இருக்கு....
    அதுவும்... பதிவு விடாமலே அதுக்கு பின்னூட்டம் போட ரெடியா இருங்கன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லை? :-)

    ஆமா - பஹாமாஸ்ன்ன உடனே ஒரு டபுட்டு... என்னிய வச்சு காமெடி கீமெடி பண்ணலயே?

    ReplyDelete
  2. நாகு,
    இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் எனக்கே எழுத முடியும் போல இருக்கு, அதான். ஹி ஹி.

    ஓ நீங்களும் பஹாமாஸ் ரிட்டனா, அப்ப சரி எளுதிட்டா போவுது.

    முரளி.

    ReplyDelete
  3. நாளக்கும் முடிஞ்சு, மக்கா நாளும் முடிஞ்சு.... அதுக்கு மக்கா நாளும் முடிஞ்சிருச்சே!

    ReplyDelete
  4. அப்படி சொன்னாலாவது ஒண்ணு ரெண்டு பேர் (பஹமாஸ் போனவங்க) நம்ம கதையோன்னு நெனச்சு இங்க வந்து பாப்பாங்க! ஆனாலும் இத்தனை பில்ட்-அப் கொஞ்சம் ஓவர் தான். அவரு வீறாப்பா சொல்லிட்டு வேலை பாக்க (பஹமாஸ்) போய்ட்டாரோ என்னவோ.. உங்க கவிதை (சுடச்சுட எழுதியது) நல்லா இருந்தது!

    ReplyDelete
  5. முரளி - என் பின்னூட்டம்கூட ரெடி. உங்க பதிவுதான் இன்னும் பஹாமாஸ் பீச்சுல காத்து வாங்கிக்கிட்டு இருக்கு...

    ஒபாமா முபாரக் பேச்சுக்கு முன்னால சரித்திரம் உங்க கண்ணு முன்னாடி நடக்கப் போகுதுன்னு பில்ட்-அப் குடுத்து, முபாரக் அத புஸ்வாணம் ஆக்கன மாதிரி இருக்கு. உங்க வீட்டு மிலிட்டரி தயவால கொஞ்சம் சரித்திரம் நடக்குதான்னு பாக்கலாம் :-)

    ReplyDelete
  6. நாகு, மீனா, புது அப்பாஸ் ஜெயகாந்தன்,

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. அது என்ன அப்பாஸ்ன்னு நோண்டாதீங்க. ரெட்டையா சிங்கக் குட்டிகள் வந்திருக்கே அப்போ அப்பாஸ் (பன்மை) சரிதானே. இது எப்ப்புடிடி.

    எனக்கு 5 ராசியான நம்பர், 5 பின்னூட்டம் வந்திடுச்சு, அப்போ இன்னிக்கு பதிவை போட்டுடுவோம்.

    முரளி.

    ReplyDelete
  7. //உங்க கவிதை (சுடச்சுட எழுதியது) நல்லா இருந்தது!//

    நன்றி ஜெயகாந்தன். உங்க கவிதை(கள்) நலம்தானே? :)

    ReplyDelete
  8. பதிவு போடுமுன் 5 பேர் எழுதியது பின்னூட்டம் இல்லை முன்னூட்டம்.
    பஹாமாஸ் பற்றியா? எழுதுங்க. நான் இரண்டு முறை "ப்ஃரீபோர்ட்" சென்று வந்திருக்கிறேன். எந்த தீவைப்பற்றி எழுதப்போறீங்க? கண்டிப்பாக பின்னூட்டங்கள் வரும்.

    ReplyDelete
  9. @கவிநயா :-) எங்க கவிதை(கள்) நலமே! நன்றி!

    @முரளி - ஒரு வழியா பதிவு வந்திருச்சு!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!