Monday, August 29, 2011

உத்தமன் பகுதி II

எழுதியவர் s .நாகேந்திரன் , கனடா. (அவர் சார்பில் வெளியிடுபவர் - சத்யா ரிச்மன்ட் )
---------
Washington D.C., Feb 2015.


அமெரிக்காவுக்கு வந்து சில வருஷங்கள் ஆயிடுச்சுங்க. காலையில டீ குடிச்சிகிட்டே இண்டர்நெட்டை பாத்துகிட்டு இருக்கேன். அட! இன்னைக்கு அறிஞர் அண்ணாவுடைய இறந்தநாளாம். வோட்டுக்காக அவரை இன்னும் மறக்காமல், எல்லா கட்சியும் மாலை போட்டு போட்டோ எடுத்துக்கிறாங்க. எப்படிங்க மறக்கமுடியும்? இன்னும் ரெண்டு மாசத்துல election வருதுல!!! அறிஞர் அண்ணானோனே என்னையும் அறியாம இன்னொரு அன்னா நியாபகத்துக்கு வர்றாரு.

மறக்க முடியும்மாங்க அவர? அவரால என் வாழ்க்கையே வீணாபோயிருக்கும். அவர் அரசியல்வாதிகள், அதிகாரிகள் இணைஞ்சு பிணையும் அரசுக்கு எதிரா (ஊழழுக்கு எதிரான்னு அப்ப சொல்லிகிட்டங்க) சில வருஷம் முன்பு போராட்டம் நடத்தியபோது, நான் கூட முட்டாள்தனமா கலந்துகிட்டேன். என்னை கைது பண்ணி ஜெயில்ல போட்டுருபாங்க. அப்பாதான் யார்யார் கைகாலுல விழுந்து, என்னை காப்பாத்தி, இங்க அனுப்பிவச்சுட்டாருங்க.

இங்க வந்ததுக்கு அப்புறம் பொழப்ப பார்கணுமுல. சொந்த அண்ணனையே நினைக்க நேரம் இல்லாதபோது, இந்த அன்னா எல்லாம் எம்மாத்திரம். என்னங்க நான் சொல்லுறது சரிதானே? ஆரம்பத்துல ரொம்ப கஷ்டபட்டேங்க. ஏதோ ஒரு சின்ன ஊருல தான் வேலை கிடைச்சுது. ஒரு ஹிந்திக்காரன் கூடத்தான் தங்கவேண்டிய தலையெழுத்து. ஆனா, நான் நினைச்ச அளவுக்கு அவங்க மோசம் இல்லைங்க. எல்லா உதவியும் அவன்தாங்க செஞ்சான். நம்ப ஊருல சுயலாபத்துக்காக எல்லாத்தையும் தப்பு தப்பாவே சொல்லிகுடுத்துடான்களோ கூட தோணிச்சு. சரி சரி, அத விடுங்க, கோவபடாதிங்க.

மேற்கத்திய நாடுகள்ல ஊழல் இல்லன்னு நம்ப ஊரு பத்திரிக்கைல திரிபான்னுங்க. அத எல்லாம் நான் நம்பினதே இல்ல. சந்து கிடைச்சா சிந்து பாடுறது மனுஷ குணமுங்க. அதுல வெள்ளத்தோல் மட்டும் விதிவிலக்கா எனக்கு தோனும். அதுவும் facebook-ல, நடமாடும் economic times தோழர் சமா என்பவர், அமெரிக்காவில நடந்த housing scam, stock market scam பத்தி பிரிச்சி மேய்ஞ்ச்சிருக்காருங்க. அதுனால, காச குடுத்து காரியத்த சாதிக்க முடிஞ்சால் பண்ணிக்கவேண்டியதுதான்னு தீர்மானிச்சேனுங்க.

நம்ப ஊரு ரேஷன் கார்டு போல இங்க 'sso card' வாங்கணும். அந்த ஆபீசிக்கு போனா, அரைமணி நேரம் கூட ஆகலைங்க. form fill-up பண்ணிட்டு, document சரி பார்த்திட்டு, ஒரு வாரத்துல போஸ்ட்ல வரும்ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டாங்க. எனக்கு ஆச்சிரியமா இருந்திச்சு. bankலையும் அதே மாதிரி. ஒரு விஷயம் சொல்லனும்ங்க. இப்ப நினைச்சா கேவலமா இருக்கு. இருந்தாலும் சொல்லுறேன். இந்த சின்ன ஊருல மூணு மாசமோ, ஆறு மாசமோ. ஒரு credit card வாங்கி கண்டதையும் வாங்கிட்டு கண்ணுக்கு தெரியாம ஓடுற 'தில்லாலங்கடி திட்டத்த' அரங்கேற்றலாமன்னு நினைச்சு கேட்டு பார்த்தேன். 'credit history' இல்ல, குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான். வேணும்னா ஐநூறு டாலர் deposit போட்டு அப்புறம் அதுலேர்ந்து எடுக்குற மாதிரி ஒரு கார்டு தர்றோமுன்னு சொன்னான். சரிதான் போடானுட்டேன்.

இதே கதை தாங்க எல்லா விசயத்திலும். கார் license குறுக்கு வழியில வாங்கலாமுன்னு பார்த்தா முடியல. Driving license கிடைச்ச பின்னே, கார் வாங்குறதுல sales tax ஏமாத்தலாமுன்னு பார்த்தா முடியல. கார் வாங்குனோனே, ஸ்பீடா ஓட்டி டிக்கெட் கிடைச்சு லஞ்சம் குடுத்து எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா முடியல. சரி, 'not guilty' ன்னு சொல்லி கோர்டுக்கு போயி கோக்குமாக்கு பண்ணலாமுன்னு பார்த்தா முடியல. ஸ்பீடிங் டிக்கெட் கிடைச்சதால இன்சூரன்ஸ் பிச்சுகிச்சு. அத சரிகட்ட, இன்சூரன்ஸ் agent-a தாஜா பண்ணலாமுன்னு பார்த்தா முடியல. முடியும்கிற வார்த்தையே இவனுகளுக்கு தெரியலன்னு தோணிச்சு. பிழைக்க தெரியாத கூட்டமா, இல்ல ரொம்ப நேர்மையானவன்களோன்னு முடிவு பண்ண முடியலங்க. அமெரிக்கா நல்ல மண்ணு, இந்தியா சாக்கடைன்னு தோணிச்சுங்க.

விஷயம் கொஞ்சமே தெரிஞ்சாலும், வாயால வண்ணம் பூசி, வாஷிங்டன் பக்கமா வந்து சேர்ந்தேங்க. அங்கே தான் 'self-mailee' என்று செல்லமாக அழைக்கப்படும் ஒருவரை சந்தித்தேன். அவர் பெயர் முத்து. வெளிய சொல்லாதிங்க. ரொம்ப போர் அடிச்சா அவருக்கு அவரே mail அனுப்புவாராம். அதான் அந்த பேரு! விளையாட்டு மனுசன் போங்க. அவர் மூலமாக 'சொல் கொல் வித்தகர்' சத்தியாவின் (அதாவது சொல்லில் விளையாடி, கொல்லென்று சிரிக்க வைப்பதில் வல்லவர்) அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதும் 'richmond blog'ன் தொடர்வாளனானேன். அன்னா ஹசாரே பற்றி அவர் எழுதிய பழைய பதிவு ஒன்று, எனக்குள்ளாற கேள்வியை எழுப்பியது. அதன் பிறகுத்தான் தெளிவு பிறந்தது. அன்னா ஹசாரேவின் தான்தோன்றிதனத்தை அவர் கண்டித்த பாங்கை படித்து, படிக்காத பாமரன்(அன்னா ஹசாரே) பின் நின்றேனேன்னு வெட்கபட்டேன்.

வாஷிங்டன்லயே செட்டில் ஆகலாமுன்னு முடிவுபண்ணி ஒரு 'foreclosure home' வாங்கி குடியேறினேன். 'foreclosure home' கிறது அமெரிக்காவின் ஊழல் கதைங்க. நான் முன்னாடி சொல்லல, மனுஷனாலே டகால்டி புத்தி உண்டுன்னு. கட்டுப்பாடு தளரும்போது எல்லாமே காத்துல்ல பறக்கும் போல. அப்புறம் அமெரிக்கா என்ன? இந்தியா என்ன? எல்லாம் ஒரே கருமம்தான். அதே சமயம் ஒரு சந்தேகமும் வந்திச்சுங்க. அப்ப அமெரிக்கா நல்ல பூமி இல்லையா? இங்கேயும் சில சாக்கடைகள் இருக்கும் போலிருக்கே? இந்தியாவில் இருக்கிற என் தாத்தாகிட்ட கேட்டா, எந்த பூமியா இருந்தாலும் சாக்கடை நீர் அதிகமாக சேர்ந்தால் சாக்கடைத்தானாரு பாருங்க! சாக்கடைகளை கட்டுபடுத்தினா எந்த பூமியிலயும் மாற்றம் வருமுன்னு வேற சொன்னாருங்க. சாக்கடையின்னு அவர் சொல்லுறது கொழுத்த அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளையும்மான்னு புரியலைங்க. அவர் கிடக்காரு விடுங்க. அன்னா ஹசாரே போல வயசான உலக நடப்பு புரியாத ஆளு.

வாஷிங்டன்ல பல நாட்டு நட்பு கிடைச்சுதுங்க. தமிழ்நாட்டுல உள்ள ஒரு 3,41,427 engineering கல்லூரில, ஒரு டப்பா டுபாக்கூர் கல்லூரில படிச்சிருந்தாலும், இப்ப எல்லாமே anna university என்பதால, என்னை கிண்டி எடுக்கும் கிண்டி கல்லூரி குழுமத்துல நம்ப முத்து சேத்துவிட்டாருங்க. கொடிகாத்த குமரனை போல் கொள்கை பிடிப்பான காந்தியவான் காளி, விஜயகாந்தே வெட்கப்படும் அளவிற்கு எண்களை சுழற்றும் புள்ளி விவர புலி நர்கி, எழுத்தின் காட்டத்தை பார்த்தால் சிங்கத்தின் சீற்றம் தூசு என்று எண்ணவைக்கும் சுதா,
தண்ணீர் குடிப்பதைப்போல் தமிழோடு விளையாடும் சத்தியா, அவர் phoneல அவரையே கூப்பிட்டு பேசும் முத்து, எதற்கும் complex equation தயாரிக்கும் ஐன்ஸ்டீனின் இந்நாள் பிரதிபலிப்பு algerbra (angry) அம்ரி, மேற்கத்திய ஏகாபத்தியத்தை தனி ஆளாய் நின்று கருவறுக்கும் secular சமா, அவ்வப்போது வந்து அணுகுண்டாய் வெடித்து முழங்கும் சீர்திருத்தச்செம்மல் சிவா, பட்டென்று சொன்னாலும் பொட்டில் தெரித்தாற்போல் சொல்லும் செல்லு, தெளிவாக குழப்புவதில் தேர்ச்சிபெற்ற சிங்கி, தென்றலாய் பல நேரமும் புயலாய் சில நேரமும் மாறும் அஷ்வின், வடைக்கு இடமில்லா விஷயத்தை பற்றி வருந்தி அழைத்தாலும் எழுதாத கனகு, சாரா பாலின் இல்லையென்றால் நான் சேர மாட்டேன் போடா எனும் GT, iPhoneனுடன் குடும்பம் நடத்தும் multi-processor ரமேஷ், தங்கத்தலைவன் ரஜினியின் அமெரிக்க அச்சு வெங்கி, ஆயிரம் mailக்கு ஒரு mail அனுப்பும் அல்கி மற்றும் mail-a அனுப்பாத பலருடைய கருத்துகளால் என் சிந்தை சுடர்விட ஆரம்பிச்சுதுங்க.

கிழவன் (அதாங்க அன்னா) விஷயத்தில் குழும கருத்துக்களால் நான் தெளிவடஞ்செங்க. இந்திய அரசியலமைப்பு எதிரா போராட்டம் பண்றது தப்புதானுங்களே. ஆட்சி அமைக்க குதிரை பேரம் பேசுறது, MPகளை விலைக்கு வாங்குறது, அழிச்சாட்டியம் பண்ணி வேணும்கிற துறையை மிரட்டி வாங்குறது, வழக்குகளில் இருந்து தப்ப ஆட்சிய கவுக்கிறது, சமய வெறியை தூண்டி குளிர் காயிறது, இப்படி பல விஷயங்கள் நெருடுதேன்னு தோணலாம். ஆனா, மக்கள் தேர்ந்தெடுத்தாச்சு. அப்புறம் என்னங்க தப்பு?

ஹிப்பி கிராப்போ, hypocrite ன்னு சொன்னாங்க. ஆங்.. இப்பத்தான் நியாபகம் வருது. ஒரு வேடிக்கையான character-a மறந்துட்டேங்க. நாகின்னு கனடா பக்கம் ஒரு ஆளு இருக்காராம். 2011ல அன்னாவ ஆதரிச்சாராம்.
"வேற எந்த விஷயத்துக்கு அன்னா போராடுனாரு?"ன்னு கிடுக்கிபிடி போட்டா, "பெரியார் ஜாதி வேறுப்பாட்ட களையதானே போராடுனாரு, பீகாருல பஸ்சு வரலைன்னு போராடுனாரா?"ன்னு கேட்டாராம்.

"இந்திய இறையாண்மைக்கு எதிரான போராட்டம்" ன்னு சொன்னா, "தனி நாடு வேண்டி போராட்டம், நக்சல் போராட்டம், சமய சண்டைக்கு போராட்டம், ஜாதி ஒதுக்கீடு வேண்டி போராட்டம், ஜாதி ஒதுக்கீடு வேண்டாமுன்னு போராட்டம், ஈராக், பாலஸ்தீன பிரச்சனைக்கு இங்கே போராட்டம், இப்படி பல போராட்டங்கள் மட்டும் இந்திய இறையாண்மைக்கு நல்லதா?"னாராம். "சுதந்திரத்துக்காக காந்தி நடத்திய போராட்டமும், பகுத்தறிவிற்காக பெரியார் நடத்திய போராட்டமும் அந்தந்த காலத்தில் இறையாண்மைக்கு உட்பட்டதா?"ன்னு வேற கேட்டாராம்.

"கீழிருந்து எல்லாரும் திருந்துனா, மேல தானா எல்லாம் மாறும்"ன்னு நிர்வாக படிப்பு படிச்சவங்க சொன்னா, "அதிகாரவர்க்கத்தையும் அரசியல்வாதிகளையும் கொஞ்சம் ஒழுங்குப்படுத்தினால் முன்னேற்றம் தெரியும், அது வரைக்கும் லஞ்சம் குடுக்கனும்னா குடுக்கத்தான் செய்வேன்!" என்றாராம்.

"சாமான்னிய மக்கள் உறுதியா இருந்தா போராட்டம் எதற்கு?"ன்னு கேட்டா, "உலகத்தில் நடந்துள்ள அனைத்து புரட்சிகளிலும் தலைவனில்லாமல் வென்ற போராட்டம் ஒன்றை சொல்லு?"ன்னு எதிர் கேள்வி போட்டாராம்.

"அன்னா கூட நிக்கிற சில பேர் காவி போட்டிருக்கானே? அறுந்த ராய் கூட ஆதரிக்கலையே?"ன்னு சந்தேகம் எழுப்பினா, "எல்லாத்துக்கும் ரிஷிமுலம் நதிமூலம் பார்த்தா, தப்பாத்தான் இருக்கும். கலர் கண்ணாடிய கழட்டிட்டு நல்லா பாரு, ஆர்ச் பிஷப்பும் அமீர்கானும் தான் ஆதரவளிச்சாங்க, அது கண்ணுக்கு தெரியல?"ன்னு மடக்கினாராம்.

"சரிய்யா, அன்னா போராட்டத்தால் எல்லாம் உடனே சரியாயிடுமா?"ன்னு கேட்டால், "இப்ப இருக்கிற சீரழிந்த நிலமைக்கு வர முப்பது நாப்பது வருஷம் ஆச்சு, சரியாகிறது மட்டும் ஒரே மாசத்துல நடக்குமா?"ன்னு திருப்பி கேட்டாராம்.
"நீ சொல்லுறது எல்லாம் ஒரு பேச்சுக்கு நம்புரோமுன்னே வசிக்கிக்க, ஆனா லோக்பால் committeeல வர்றவன் எல்லாம் கயவனா இருந்தா?"ன்னு மடுக்குனா, "election commission ஒழுங்கா செயல்படலையா? இவ்வளவு கட்டுப்பாட்டிலும் CBI மற்றும் பல துறையில நல்ல, நேர்மையான அதிகாரிகள் இல்லையா?" அப்படின்னு கேட்டுட்டு, "அதையும் மீறி இந்தியாவோட தலையெழுத்து அதுதான்னா யாரால என்ன பண்ண முடியும்?"ன்னு escape ஆயிட்டாராம்!
ரொம்ப லொள்ளு புடிச்ச ஆளு போல. குண்டக்க மண்டக்க பேசுறதுல சோவே சிதறி ஓடனும் போலிருக்கே! சந்தேகமே வேண்டாம். சுத்த ஹிப்பிகிராப்பு (hypocrite) தாங்க அந்த ஆளு. நல்லவேளை. இப்பலாம் அந்தாளு சத்தத்தையே காணோம்.

மொத்ததுல, எந்த அதிகாரமும் இல்லாத வர்க்கம் தானா மாறுனாதானே எல்லா அதிகாரமும் இருக்கிற வர்க்கம் பயந்து நடுங்கி திருந்தும்? சரிதானுங்களே?


அத விடுங்க, கீழிருந்து மேலன்னு சொன்னோனதான் நியாபகம் வருது. நாளைக்கு புது team க்கு leader ஆகுறேன். சுத்தமா உதவாத கூட்டமாம். ஒரு நாள் வேலைய ஒன்பது நாள் இழுத்தடிபானுங்களாம். ஆரம்பத்திலேயே strict-a இருந்தாதான் வழிக்கு கொண்டுவரமுடியும். நான் பாட்டுக்க 'bottms-up' theory-a அங்க முயற்சி பண்ணினா, என் 'bottom' ல ஆப்பு தான் இறங்கும். theory-a சோதிக்கிற தேவையில்லாத வேல எனக்கு எதுக்கு?

ஹோ.. ஏதோ flash நியூஸ் ndtvல. காவிநாயகன் கர்மாவீரன் ஜெயப்ரகாஷ் மாதிரி இருக்கு? அவரேதாங்க!!! இந்தியாவுக்கு குடும்பத்த அனுப்பிச்சிட்டு, 2011 ல அன்னாவுக்கு ஆதரவா bostonல கொடி பிடிச்சாரே. அவரேதான். இப்பவும் அன்னாவ தூக்குல போட கூடாதுன்னு இந்தியாவில போராடிகிட்டு இருக்கார்.

அட! விஷயமே தெரியாத உங்களுக்கு? 2011 ல அன்னா போராடுனத்துக்கு பணியிற மாதிரி போக்கு காட்டிட்டு, 2014ல ரூபாய் 525 ஊழல் பண்ணிடாருன்னு தூக்கு தண்டனை விதிச்சிடாங்க. இன்னும் பத்து நாளுல தூக்கு. spectrum ஊழல்ல அப்பழுக்கற்றவருன்னு வெளிவந்த புடம் போட்ட தங்கம், ஆ.ராசாவுக்கு, இன்னைக்கு பாரதரத்னா விருது குடுக்கிறாங்க. அதுக்காக இந்திய பிரதமர் ராகுல் பெருந்தன்மையோட நேரம் ஒதுக்கி கொலம்பியாவிலிருந்து வந்திருக்கார். இப்ப விட்டா எப்ப வருவாருன்னுதான், சந்தர்பத்தவிடாம கர்மாவீரன் ஜெய் கத்திகிட்டு இருக்காரு போல. அந்த stretcherல வர்றது யாருன்னு பாக்குறிங்களா? நம்ப கலைஞர் அய்யா தான். 92 வயசாவுது. கோமாவுல இருக்காரு. ரெண்டு மாவட்டம் மாயமா போன ஊழல்ல ஜெயாதான் மாட்டிகிட்டு முழிக்கிறாங்களே. ராஜபக்சவுக்கு வித்துட்டாங்கன்னு ரகசியமா பேசிகிறாங்க. மக்கள் அஞ்சு வருஷத்துக்கு ஒருவாட்டி என்ன ஏதுன்னு தெரியாம கொதிபாங்கலே? அது போல கொதிச்சு போயிருக்காங்க. அதனால கட்டாயமா அடுத்த முதல்வர் அய்யா தான்.

சரி அப்புறம் பார்போமுங்க. அடடா! இதுவரைக்கும் என் பேர நீங்க கேட்கவே இல்லீங்கலே. நான் அன்னியனுங்கோ. officeல A.N.ன்னு சொன்னதான் தெரியும். இங்க வரும்போது ஏதோ ஒரு பேரு இருந்திச்சு. இப்ப நியாபகம் இல்லீங்க. பெயர் காரணம் கேக்குரீங்களா? இந்த ஊரின் முன்னோடிகள் பார்த்து பார்த்து வகுத்த வழிமுறைகள் பெருமளவிற்கு நடைமுறைபடுத்துவதை, அலுங்காமல் குலுங்காமல் அனுபவிக்கும் அயல்நாட்டில் (இந்தியாவில்) பிறந்த அந்நியன் நான். நல்லாருக்காங்க பேரு?

கொஞ்சம் இருங்க. குழுமத்துக்கு ஒரு செய்தி வந்துருக்கு. நம்ப சத்தியாதான் அனுப்பியிருக்காரு. யாரோ இந்தியாவிலிருந்து வர்றானாம். அத பத்தி இங்க http://blog.richmondtamilsangam.org/2011/08/blog-post_25.html எழுதியிருக்காரு. அவன் பேருகூட உத்தமனாம்.

2 comments:

  1. //எழுதியவர் s .நாகேந்திரன் , கனடா.//

    என்னிய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே...

    அன்னா நாமம் வாழ்க!

    ReplyDelete
  2. வேதாந்தி எழுதறதே இப்பதேன் புரியமாதிரி இருக்கு... அதுக்குள்ள கெளம்பிட்டாய்ங்கய்யா, கெளம்பிட்டாய்ங்க...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!