"அமைதி "
அமைதி
அதன் அர்த்தம் வெறும் 'நிசப்தம்'-அல்ல
'மனம்', 'சுற்றம்',
'சூழல்'
இவை ஒவ்வொன்றும் அதனதன்
ஒழுக்கத்தில்
அசைதலும்
ஓசைகள்
ஒலித்தலும்
ஆழ்ந்து
நனைந்தலும்
புறத்தாக்குதல்
துளியேனும்-இன்றி - பூற்ணமாய் செய்தொழில் செய்தலும்
சிந்தையில்
வேட்கையை சிற்பமாய்
செதுக்குதலும்
புன்னகையை
உள்ளிருந்து
பூத்தலும்
சுற்றத்தின்
சுயமில்லா
அன்பினையும், சூழலின் களங்கமில்லா இயற்கையையும்
இருப்பதை
இருப்பதுபோல்
ஏற்பதும் ஏற்று
ரசித்தலும்
சிதறாத சிந்தையும்
சீரான சுவாசமும்
மட்டுமே "அமைதி" என்பேன்
அருமையான கவிதை. சுரேஷ்.
ReplyDeleteமுதல் பதிவுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
ஆரவாரமான விளக்கம் அமைதிக்கு :)
அர்த்தம்
ReplyDeleteநிசப்தம்
பூற்ணமாய்
சுயமில்லா
சிந்தையும்
சுவாசமும்
- தமிழ்க் கவிதையில் ஊடுருவியுள்ள வடமொழிச் சொற்கள். :-(