இது இப்படி இருக்க, இவ்வசரத்தில் நமது ரசிப்புத் திறனும், சிந்தனைத் திறனும் எப்படித் தாக்குப் பிடித்து நீடிக்கும்? பத்தாதற்கு, சித்தர்கள் தங்கள் பாட்டுக்களில், 'இலை மறை காய் மறை'யாகப் பாடிச்சென்ற கருத்துக்கள் தான் எத்தனை ?! அவற்றை எல்லாம் ஆய்ந்து படித்து இன்புற நமக்கெல்லாம் நேரமெங்கே ? நம்ம அவசரம் அவர்களுக்கு தெரியாமல் போனதே, படித்தவுடன் புரியறமாதிரி எழுத வேண்டாம் :)
சமீப காலமாகக் கேட்டுத் திளைக்கும் அருமருந்து, திருமூலரின் திருமந்திரம். 'தண்ணீர் வாளிக்குள் தலையைக் கவிழ்த்து' பின்னாளில் நடக்கப் போவதை முன்னாளில் கண்டதாக நாஸ்ட்ரடாமஸைச் சொல்வர் சிலர். அதுபோல திருமூலரும் ஏதாவது டெக்னிக் பயன்படுத்தியிருப்பாரோ ? சாதாரண மனிதன் எழுதும் பாடல்கள் அன்று அவை. மேலோட்டமாக ஒரு கருத்தும், ஆழ்ந்து உட்செல்லச் செல்ல ... இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் அன்றே எழுதி அருளியவர்.
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.
என்ற பாடலை பலமுறை கேட்டிருந்தாலும், 'நாயோட்டு மந்திரம்' என்றால் என்ன ? இப்படி ஒரு திருமுறைப் பாடலில், கேவலம் நாயின் மந்திரம் என்று சொல்லியிருக்கிறாரே என்று வியந்ததுண்டு. அது என்னவென்று அறிந்து கொள்ள நேரமின்றி, பல நாட்கள் சென்று, எப்படியோ நேரம் ஒதுக்கி, இணையக் கடவுளிடம் முறையிட்டதில், இதன் பொருள் கிட்டியது. அது,
"நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்."
இன்னும் சற்றே ஆழ்ந்து பொருள் கொள்ள மற்றொரு வலைத்தளம் தரும் தகவல்,
"மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது."
இது போல பல நுண் கருத்துக்களை உள்ளடக்கி நம்மை என்றும் வசீகரிக்கும் திருமந்திரம். நேரம் விளைகையில், மேலும் சில பாடல்கள் பார்க்கலாம்!
மிடில் ஏஜ் போனபிறகு மார்க்கண்டேயன் என்ன வாழ்கிறது... :-)
ReplyDeleteஅருமையான பதிவு. நானும் கொஞ்சம் திருமந்திரம் கேட்கலாம் என்று பார்த்தால் நம்மை தான் ஒரு நாய் உட்பட எல்லோரும் அந்த ஓட்டு ஓட்டுகிறார்களே...
நீங்கள் போட்டிருக்கும் படத்தையும் கொஞ்சம் விளக்கினால், உய்வோம்.
சதங்கன்,
ReplyDeleteவணக்கம், நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
திரு மூலரின் திரு மந்திரம் விளக்கம் மிக அருமை.
சி என்பதனை குறிக்கும் பாடல் அறிந்தோம்.
இது தான் முதன் முறை சி என்பதே மந்திரம் என்று. சிவ என்ற மந்திரம் தான் நான் அறிந்த ஒன்று.
நன்றி .
பாட்டி பழமொழி - நான் அறிந்த வரை
நாய்க்கு வேலை இல்லை. உட்கார்ந்து திங்க நேரமில்லை.
உங்கள் பகுதி வழக்கம் வேறு மாதிரி இருக்கலாம்.
வேதாந்தி