இவருக்கு Patio doors'அ திறந்து வச்சா பிடிக்காது
அந்த அம்மாவுக்கு Balcony கதவ மூடினா suffocating'அ இருக்கும்
இவருக்கு 75 degree ஆனா வேர்த்து கொட்டும்
அந்த அம்மாவுக்கு AC'அ on செஞ்சாலே குளிரும்
இவருக்கு நெனச்சத சாப்பிடனம்'னு ஆசை
அந்த அம்மாவுக்கு ஆரோக்யமா சாப்பிடனம்'னு குறிக்கோள்
இவருக்கு NFL'லும், Cricket'டும், Baseball'லும் ESPN'ல பாத்தா போதும்
அந்த அம்மாவுக்கு என் பிரியமுள்ள சினேகிதி நாடகம் பாக்கலேன்னா தூக்கமே வராது
இவருக்கு பொருள எடுத்த இடத்துல வக்க வராது
அந்த அம்மாவுக்கு அது அது அதோட இடத்துல இல்லேனா இருப்பு கொள்ளாது
இவருக்கு பிடிச்சது லெப்ரான்
அந்த அம்மாவுக்கு பிடிச்சது சல்மான்கான்
இவருக்கு விழுந்து விழுந்து படிக்கறதுனா அது அகிலத்தின் செய்திகள்
அந்த அம்மாவுக்கு அகிலமே இவரின் பார்வைகள்
இவருக்கு இஷ்டம் சப்பாத்தி சாவல்
அந்த அம்மாவுக்கு இஷ்டம் வெண்டைக்காய் வறுவல்
இவருக்கு அதிகம் பேசறதுங்கறதுனா 10 வார்த்தைகள்
அந்த அம்மாவுக்கு வாயில விளையாடும் கணக்கில்லா சொற்கள்
இவருக்கு பிடிச்சதெல்லம் டார்க் கலர்
அந்த அம்மாவுக்கு பிடிச்சதோ light rose மலர்
இவருக்கு gift'னா அகராதில அதிக பணம்
அந்த அம்மாவுக்கு gift'னா artistic மனம்
இப்படி எந்த விஷயத்திலுமே ஒரு சேர இருக்க முடியாத இரண்டு பேர ஒரு பெரிய Institution'னுக்குள்ள போட்டு சண்டை போட்டுக்கற இரண்டு பசங்கள ஒரே ரூமுக்குள்ள தள்ளற Teacher மாதிரி 4 சுவருக்குள்ள அடைக்கறது கல்யாணம்.
இந்த எல்லா odds'அயும் மீறி கால் சதமும், அரை சதமும் அடித்து ஆண்டுக்கொரு ஆளை கூட்டி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்'னு காமிக்கற அகிலம் முழுக்க இருக்கற அத்தனை அப்பாவி ஆண்களையும் அழகு பெண்களையும் தெய்வ பிறவிகள்'னு தான் சொல்லனம்.
வேறு எந்த விஷயத்துல ஒத்துக்காவிட்டாலும் 'அஹம் பிரம்மாஸ்மி'யை இந்த இடத்தில் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
-இப்படிக்கு
ரிச்மண்டில் வாழும் மணம் ஆகாத கன்னியர் மற்றும் காளைகளின் சார்பாக உங்கள்
vgr
மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.
This article on RTS is sponsored to you by writer/author Thiru. vedaanthi.

ReplyDeleteVery Good. Hilarious.
அனுபவமா? இல்லை,அனுதாபமா? சில விஷயங்கள்...என்னை படம் பிடிச்ச மாதிரி இருக்கு. இதில் ஒரு விஷயம் மனமாகதவர்களும் இப்படித்தான் அவரவர் நன்பர்களிடத்தில்; ஆனாலும் இவர்கல் friendship கொன்டாடுவார்கள்; மணமானவர்கள் அவரவர் பார்ட்னர்களிடம் மட்டும்தான் behave பண்ணுவார்கள்; மற்றவர்களிடம் அப்படியே மாற்றி, அவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள்.
ரங்கா
கண்ண கட்டுதே...
ReplyDeletevgr என்ன சொல்ல வருகிறார்னே புரியல. நடுவுல ஒரு சமஸ்கிருதம் வேற. அதன் அர்த்தம் பார்த்தால் எங்கேயோ போகுது. நம்முடைய ஆத்ம விசாரணை எல்லாம் கத்திரிக்காய் கொடியிலா செடியிலா என்பது வரைதான். இது எல்லாம் ஓவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷனா இருக்கு. முதல் கமெண்டும் சரியா புரியல.
அந்த வேதாந்தியால் வந்தது இவ்வளவு வினையும்.
ஆனால் ஒன்று. vgr என் வீட்டை bug செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு சில விஷயங்கள் தவிர எல்லாம் பொருந்துது. நடு நடுவே சில விஷயங்கள் க்ராஸ் டாக் ஆயிடிச்சி போல...
ரங்கா Sir,
ReplyDeleteரொம்ப நன்றி. படிச்சதற்க்கு...
I am glad you got the hilarious part of it.
நாகு Sir,
"ஆனால் ஒன்று. vgr என் வீட்டை bug செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். " - இத தான் சொல்ல வந்தேன். சரியா தான் பி(ப)டிச்சுடீங்க. படிக்கற ஒவ்வொருத்தரும் இது தன்னோட வீட்ட ஏதோ Detective Holmes'அ வச்சு bug செய்து யாரோ சொல்லியதா நினைக்கறது தான்... நான் எழுத எத்தனித்த கருத்து.
'அஹம் பிரம்மாஸ்மி'யா...அது நம்ம பாலா படத்தோடா title.. 'நான் கடவுள்'...அத தான் சொன்னேன்...spelling mistakes இல்லாம மொதல்ல எழுதி பழகறேன்...அப்பறம் ஆத்ம விசாரனை...நடந்தது என்ன...இதெல்லம் try பண்றேன்...
முதல் காமென்ட்'ல சொல்ல வர விஷயமும் ரொம்ப simple தான். உலகத்தில இருக்கற அத்தனை கணவன்மார்களும் மனைவிமார்களும் அவரவரிடம் மட்டும் தான் opinion/behavior conflicts எல்லாம் பண்ணுவாங்க...அதயே வெளி உலக நன்பர்களிடம் கொண்டு போகும் பொது நான் எல்லாத்தையும் adjust செய்ய கூடிய ஆளுனு சொல்லுவாங்கனு சொல்றார்..
இப்போ புரிஞ்சுதோ?
-vgr
VGR அவர்களே
ReplyDeleteவந்துட்டேன்.
நானும் நாகு கட்சி தான்.
இருக்குன்னா இருக்கு இல்லன்னா இல்லை தான். நம்ம மொழியில் உண்டு என்றால் உண்டு இல்லையென்றால் இல்லை.
ஒன்னும் இல்லையேன்னு நினைத்தால் ஒன்னும் விஷயமே இல்லை.
அட நான் ஒன்னும் கடவுளை பத்தி சொல்ல வில்லை.
உங்கள் பதிவு பற்றியும் சொல்ல வில்லை.
வீட்டுக்குள் நடக்கும் விவகாரங்கள் தான்.
இப்படியே எத்தனை பதிவுகள் தான் ஊட்டுவீங்கன்னு பார்க்கறேன்.
இதை படிச்சவுடன் நிறைய கேள்விகள் எனக்குள்?
நீங்கள் கல்யாணம் ஆனவரா ? இல்லை கல்யாணம் ஆகா தவரா?
ஆனவர் எப்படி ஆகாதவர் சார்பா எழுத முடியும்.
இது கல்யாணம் ஆனவர்களுக்கு அறிவுரையா அல்லது ஆகாதவருக்கு கூறும் அறிவுரையா?
சண்டையில் ஜெயிப்பது என்னவோ பெண்கள் மட்டுமே. அதை விட்டுட்டீங்களே .
ஆனா உண்மையிலே நீர் ஒரு வக்கிரமான ஆளு தான்.
இப்படியா ஒரு குடும்ப ரகசியத்தை புட்டு புட்டு வைக்குறது.
நாளைக்கு எவன் வெளியில மதிப்பான்?
சரி சரி விவாதத்துக்கு வரலைன்னு சொல்லி போட்டு, இப்படி வில்லங்கமா எழுதுனா எப்படி?
அடுத்த பதிவுல "அகம் ப்ரஹ்மாஷ்மி " என்பதற்கு ஒரு தெளிவு போட்டு விடுங்கள்.
வீட்டில் நடக்கும் பஞ்சாயத்து போட்டு விட்டு, நான் கடவுள் என்று உங்கள் மனைவியிடம் கூறிப் பாரும்.
அப்புறம் அவள் நான் தான் சக்தி, நான் தான் காளி என்று போட்டு துவைத்து எடுத்து விடுவாள்.
இதெல்லாம் உ மக்கு எதுக்கு வம்பு?
மொத்தத்தில் பொறுத்து போ என்று எனக்கு அறிவுரை கூறி உள்ளீர்கள்.
வேதாந்தி
வேதாந்தி Sir,
ReplyDeleteநீங்கள் என்னை திட்டுகிறீர்களா..இல்லை பாராட்டுகிறீர்களா?
-vgr
VGR அவர்களே,
ReplyDeleteமுதல் பாரா திட்டு
இரண்டாம் பாரா சந்தேகம்
மூன்றாம் பாரா பாராட்டு
நான்காம் பாரா வேண்டுகோள்
ஐந்தாம் பாரா சோதனை
ஆறாம் பாரா நிறைவு
வேதாந்தி
ஐயா வேதாந்தியாரே,
ReplyDeleteஇப்படி பாரா கட்டி வெளுத்து வாங்கறீங்களே - அடுத்தது உங்கள் கமெண்டுகள் அத்தியாய ரேஞ்சுக்கு போகப் போவுது. அப்புறம் உங்க கமெண்டுக்கு ஒரு கோனார் நோட்ஸ்தான் போடனும்.
vgr - எல்லாம் உங்கள் அடுத்த பதிவில்தான் தெரியும். ஆவலுடன் - நாகு.
வேதாந்தி Sir,
ReplyDeleteகதம்ப சாதம் மாதிரி ஒரு காமென்டில் இத்தனை உணர்ச்சிகளா? பலே பலே..
-vgr