Saturday, August 23, 2014

யாரிடம் கற்றோம் ?மனிதன் யாரிடம் கற்றான் இந்த பேசும் மொழி தனை
என்று சதங்கன் யாரிடமோ கேட்டு விட்டார்

வாசித்த அனைவரும் வாழ்த்தியதோடு
யோசித்த பதிலை  சொல்லாமல் சென்று விட்டார்

நானும் அவ்வழி செல்லாது ஒரு பதிலை
சதங்கனுக்கு கொடுக்க வேண்டும் என்ற
திண்ணம் மனதில் ஒழிக்க இதோ எனது மொழி

மனிதன் விட்டு சென்ற குகை சித்திரம் தான்
இன்று மொழியாய் கண்ணுக்கு தெரிகிறது
நாம் என்றும் சூத்திரதாரி தான்
சுயநலத்தை தவிர நமக்கு என்ன தெரியும்
இதனால் தான் நம் காலடியை மட்டுமே தேடுகிறோம்
பின்னாளில் வரலாறு ஆகும் என்று

இயற்கை விட்டு சென்ற சுவடுகள் தான் எத்தனை
ஏன் அதனில் உங்கள் தேடல் இல்லை?

மனிதன் மொழி வெறும் ஒலி மட்டுமே.
இதனால் தான் ஊமைகளும் பேச முடிகிறது
யார் சொல்லியது பறவையும் விலங்கும் பேசவில்லை என்று
அவை பேசும் மொழி நமக்கு புரிய வில்லை

இயற்கையும் பேசுகிறது, இதனை புரிந்தவர்கள்
மனிதர்கள் அல்ல, தேவர்கள்

அனால் உங்களின் தேடல் அது அல்ல
விதண்டமாய், வினயமாய், நய வஞ்சகமாய்
பேச மனிதனுக்கு யார் தான் கற்று தந்தார்கள்?
அது கற்றதல்ல, விட்டு சென்றது
ஆம் கடவுளின் பகைவன் மனிதனுக்காக விட்டு சென்றது.

அதை பேசுபவர் எவரும் மனிதரும்  அல்ல .
ஐயா, நாத்திகர் ஆத்திகர் விவாதம் வேண்டாம்
இது வெறும் அரசியல் மட்டுமே.

வேதாந்தி


3 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. //அனால் உங்களின் தேடல் அது அல்ல
  விதண்டமாய், வினயமாய், நய வஞ்சகமாய்
  பேச மனிதனுக்கு யார் தான் கற்று தந்தார்கள்?
  அது கற்றதல்ல, விட்டு சென்றது
  ஆம் கடவுளின் பகைவன் மனிதனுக்காக விட்டு சென்றது.//

  ஏன் மொழி நீங்கள் சொல்வதற்கு மட்டும்தான் பயன்படுகிறதா? இல்லை மனிதன் அவற்றை மட்டும்தான் செய்கிறானா. மொழி மற்றவர்களை தூற்றவும், காலை வாரிவிட மட்டும்தான் பயன்படுகிறது என்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள். பகவத்கீதை மொழியில்லாமலா நம்மை வந்தடைகிறது? நல்ல கவிதை, கதை நம்மை வந்தடைகிறதும் மொழியால்தான்.

  நான் அப்போதே கிண்டல் செய்திருந்தேன். மொழிப் படத்தின் பாடல் குறித்து. மொழி தேவையில்லை என்று அழகாக விவரிக்கும் பாடல் என்று.

  மொழி சாத்தானின் படைப்பு என்பது எல்லாம் அவரவர் பிரயோகத்தில்தான் இருக்கிறது :-)

  எனக்கு என்னமோ மொழி மனிதனின் உன்னதமான படைப்பு என்றுதான் தோன்றுகிறது.

  //மனிதன் விட்டு சென்ற குகை சித்திரம் தான்
  இன்று மொழியாய் கண்ணுக்கு தெரிகிறது
  நாம் என்றும் சூத்திரதாரி தான்
  சுயநலத்தை தவிர நமக்கு என்ன தெரியும்
  இதனால் தான் நம் காலடியை மட்டுமே தேடுகிறோம்
  பின்னாளில் வரலாறு ஆகும் என்று//

  எங்கிருந்தோ எங்கேயோ பாய்கிறீர்கள் சம்பந்தமில்லாமல். நீங்கள் சொன்ன அத்தனை தேடல்களும் உங்களிடம் இருக்கும்போது மற்றவர்களிடம் இல்லை என்று ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்களும் எங்களில் ஒருவர்தானே. எங்கள் சார்பாக நீங்களே தேடுங்கள். :-)

  ReplyDelete
 3. நாகு,

  பின்னூட்டத்திற்கு நன்றி.
  மன்னிக்கவும். மனிதனில் நல்லவர் என்றும் தீயவர் என்றும் பாகுபாடு உண்டு.
  நல்லவன் நற்குணங்களை கொண்டுள்ளதால் நல்மொழியை பேசுகிறான். நல்லதையே சிந்திக்கிறான்.
  நான் புரிந்து கொண்ட வரையில் சதங்க்னின் தேடல் மனிதன் பேசும் நல் மொழியை அல்ல.
  மனிதன் கெட்ட நோக்கோடு சுய நலம், பொறாமை, பழி தீர்த்தல் என்று அவர்கள் பேசும் மொழியை மட்டுமே
  தேடுவதாக சித்தரித்துள்ளேன்.
  மொத்தத்தில் சாத்தான் கடவுளை பழி வாங்க மனிதனின் துர்குணங்களை காரணியாக பயன் படுத்துகிறது.
  கடவுளும் மனிதனின் நாக்கை மடித்ததால் தான் மொழியும் அவனுள் வேற்றுமையும் பிறந்தது என்று திடமாக நம்புகிறேன்.

  மேலும் தேடல் என்பது நீதியை தேடுவது போல். அனைத்து காரணிகளையும் தேட வேண்டும்.
  தான் நடந்து வந்த பாதையை தேடினால் அதில் தன்னுடைய காலடி மட்டும் தான் தெரியும்
  குகை சித்திரம் இருந்த காலத்தில் மனிதன் பேசுவதற்கு மொழி இல்லை என்பதற்கு எந்த சான்றும் கிடையாது.
  குகை சித்திரங்கள் , சங்கேத மொழியாக இருந்தது என்று வல்லுனர்கள் சொல்லுகின்றனர.
  அக்காலத்தில் பேசவில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும். இன்றைக்கும் எழுத்துக்கள் இல்லாமல் மொழிகள் பேசப் படுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வரலாறு பிற்காலத்தில் குகை சித்திரம் போல் தான் சித்தரிக்கப் படும்.  வேதாந்தி

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!