Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, March 25, 2008

என்று வருவான்?

கண்ணனுக்காக காத்திருக்கும் ராதைக்கு கொஞ்சம் வந்து ஆறுதல் சொல்லிட்டு போங்க :)

http://kavinaya.blogspot.com/2008/03/blog-post_25.html

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

பெண், அப்படி என்றாலே கவிதை தான் இல்லையா ? கவிதை மீது காதல் கொள்ளாமல் இருக்கவும் முடியுமா ? ஒரு வாலிபனின் கனவுகள், கற்பனைகளாகக் கவிதை வடிவில் இங்கே. படித்துப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் !

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_1832.html

Thursday, March 20, 2008

தோப்பு

காவல்காரர் தூங்கிக்கிட்டு இருக்காரு. சத்தம் போடாம வாங்க. தோப்புக்குள்ள போய் ஒரு சுத்து சுத்திப் பார்த்துட்டு வரலாம். மெதுவா, ஷ்ஷ்ஷ்... இங்க க்ளிக் பண்ணுங்க‌

தமிழ்மணத்தில் சதங்கா!

சதங்காவுடைய கவிதைகளை தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில பார்த்தேன். வாழ்த்துக்கள் சதங்கா!

http://thamizmanam.com/readers_choice.php

Saturday, March 15, 2008

கிராமத்து நடவு

கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு விழா போலத் தான் நடக்கும். உழவர்களும், மாடுகளும், சேறும், நாற்றும், நாற்று நடும் பெண்களும் ... அப்படியே ஒரு ரம்மியமான சூழல். அதைப் பற்றி ஒரு கவிதை "கிராமத்து நடவு".

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html

Friday, March 14, 2008

என் தமிழ்!

என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!


--கவிநயா

Thursday, March 13, 2008

அடி பெண்ணே !

டிஸ்கி: இது என் சொந்தக் கதை அல்ல. வெகு நாட்கள் முன் ஆ.வி.யில் படித்த ஒரு கதையும் (used at climax here), பின் நண்பர்கள், அவர்தம் நண்பர்களின் கதைகள் எல்லாம் கலந்து செய்து கலவை தான் அடி பெண்ணே ! படிச்சுப் பார்த்து புடிச்சிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க !!!

பி.கு.: எங்க ஊட்டுக்காரம்மா ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க, ஏன் இந்த மாதிரி விசயங்களில் பெண்கள் தான் தவறு செய்வார்களா ? பசங்க செய்றதில்லையா என்று ! ஏன் இல்லை, அது பற்றியும் ஒரு கவிதை எழுதி போட்டுறலாம் என்று சொல்லி, நல்ல வேளை கவிதையின் நாயகி யாரு என்று அவர்கள் கேட்கும் முன்னால எஸ்கேப்ப்ப்ப்ப் ....

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post.html

Tuesday, March 04, 2008

சின்னக் கண்மணி…

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பெற நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வன்னப் பிஞ்சுப் பாதத்துல
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோக்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பொண்ணே தங்கப் பொண்ணே
கொத்திக்கொத்தி என் மனச
கொள்ளை கொண்ட சின்னப் பொண்ணே

மோகமுல்லச் சிரிப்பக் கண்டு
சோகந் தொலஞ்சு போச்சுதடி
பால்நெலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

ஒன்னழகப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி ஒன்னக் கட்டிக்கத்தான்
வாஞ்ச மீற ஏங்குதடி


--கவிநயா

Tuesday, February 26, 2008

கிராமத்து ஊருணி


"ஊருணி நீர் நிறைந்தற்றே - உலகவாம்

பேரறி வாளன் திரு"

என்று ஊரே உண்ணும் ஊருணி பற்றி வள்ளுவர் பெருந்தகை அருமையாக ஈற்றடிகளில் சொல்லியிருப்பார். அவர் சொல்கிற ஊருணியில் கடல் அளவுக்கு விசயங்கள் அடங்கியிருக்கும். நாம என்னதான் வரி வரியா எழுதினாலும், அந்தக் காலத்து ஆட்களை கிட்ட கூட நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. இதோ எனது கவிதை.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_25.html

Friday, February 22, 2008

பதங்களின் சரசம்

அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!

இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!

காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!

கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!

சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!

நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!

ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!


--கவிநயா

Sunday, February 17, 2008

அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை

கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகிப்போச்சு என்று நினைக்கும்போது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என வியக்க வைக்கிறது. அதாங்க போன வருசம் பனி பற்றி ஒர் வெண்பா பதிவு போட்டோம். இந்த வருசம் பனி பத்தி யோசித்துக் கொண்டிருந்தபோது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று, அசையாப் பொருட்கள் எல்லாம் அரிதாரம் பூச ஆசைப்பட்டு, விழுந்த பனியை தம்மேல் பூசிக்கொள்வது போல எழுதியிருக்கிறேன். படித்துச் சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று ;-)

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_11.html

Wednesday, February 13, 2008

வேண்டும்!

நதியோடு ஜதிபோட்டு நான் ஆட வேண்டும் ;
நட்சத்திரப் பூப்பறித்து நான் சூட வேண்டும் !
வான் நிலவைக் கைவிளக்காய் நான் ஏந்த வேண்டும் ;
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும் !

கதிரவன்என் கவிதையில்தன் கனல் மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம் மயக்க வேண்டும் !
மணம்வீசும் மலராகி நான் சிரிக்க வேண்டும் - நான்
ரீங்கார வண்டாகித் தேன் குடிக்க வேண்டும் !

சின்னச்சிற் றோடையாய்ச் சிலுசிலுக்க வேண்டும் - நான்
புத்தம்புது வெள்ளமாய்ப் புவி தழுவ வேண்டும் !
வன்னச்சிட்டுக் குருவியாய்ச் சிறகடிக்க வேண்டும் - நான்
சிறகடித்து மனம்விரித்து வான் அளக்க வேண்டும் !

பாறைக்குள் பச்சையாய் நான் துளிர்க்க வேண்டும் - நான்
பாசமுடன் உயிர்கள் தமை நேசிக்க வேண்டும் !
அன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - நான்
ஆசைகளைக் கடந்துலகில் அறம் வளர்க்க வேண்டும் !

--கவிநயா

Monday, January 28, 2008

அப்பாவின் காகிதக் கப்பல்

என்னதான் டெக்னாலஜி வளர்ந்து ஆரைகமி, கிரைகமி (உச்சரிப்பு சரியா என்று தெரியவில்லை, ஆங்கிலத்தில் Origami, Kirigami) என்று காகிதப் படைப்புக்கள் சிறந்து விளங்கினாலும், அன்று நமக்கு அப்பா அன்பினால் செய்து கொடுத்த காகிதக் கப்பல் இன்றும் மறக்க முடியாத ஒரு inspiration தான்.

http://vazhakkampol.blogspot.com/2008/01/blog-post_27.html

Thursday, January 10, 2008

கிராமத்து முடிதிருத்தும் நிலையம்

சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை, விடுமுறையின் போது, கிராமத்துக்குப் போகும்போதெல்லாம் இந்த நிலையத்திற்கு செல்லாமல் இருந்ததில்லை. அதை ஒரு கவிதையாக்கி சேமித்து வைக்க எண்ணி எழுதியது. வாசித்துச் சொல்லுங்கள் உங்கள் அனுபவங்களையும்.

http://vazhakkampol.blogspot.com/2008/01/blog-post_08.html

Thursday, December 27, 2007

கிராமத்து மார்கழிக் காலை

மார்கழி என்றாலே நம்ம ஊர்ல குளிர், சங்கீதம், திருப்பள்ளி எழுச்சி தான். அத்தோடு நம்ம ஊர் பெண்கள் வண்ணக் கோலம் இடுவதும் சிறப்பு (இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை !). அதைப் பற்றின என் எண்ணங்கள் கவிதையாய், இங்கே க்ளிக்கவும்.


http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html

Thursday, December 13, 2007

பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)

பாரதி அவர்களின் அதிர்ச்சியான மறைவு எப்போதும் சிந்தனையில் இருக்க அதன் விளைவாய் வந்த கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html

Saturday, November 24, 2007

பதநீர் குடிக்க வாரீயளா ?

பதநீர் குடிக்க வாரீயளா ? .... மன்னிக்கவும், படிக்க வாரியளா ? சுட்டி கீழே :)

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_24.html

Thursday, November 22, 2007

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம் பற்றிய ஒரு கவிதை. படிக்க கீழே சுட்டியை அழுத்தவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_20.html

Thursday, November 15, 2007

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

சமீபத்தில இரண்டு கவிதைகள் என்னோட வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். சுட்டிகள் கீழே, படித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_15.html

மயில் - குழந்தைகள் கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_14.html

Monday, November 05, 2007

வாஷிங்டன் வீதி உலா

சமீபத்தில் தலைநகர் வாஷிங்டன் சென்று சுற்றி வந்தோம். அதை ஒரு கவிதை வடிவில் எனது வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post.html