I'm sorry I didn't inform you about my traveling. I am presently in Glasgow, Scotland, United Kingdom and I'm stuck here.
I was mugged on my way to the hotel and my money,credit cards,phone and other valuable things were taken off me at gun point.
I need you to lend me some money , I need to sort out my hotel bills and get my tickets straightened out .
I would be glad if you can help me and I promise to pay you back Immediately I get back home .
Waiting to hear from you.
Thanks
நேற்று (செவ்வாய்கிழமை) மதிய உணவிற்கு எனது நண்பருடன் ஒரு உணவகத்திற்கு செல்லும் வழியில் அவர் "என் ஃப்ரெண்டோட கசினோட கணவர், லண்டன்ல சஸ்ஸெக்ஸ் ங்ர ஒரு இடத்திற்கு பொயிருக்காரு அங்க அவரை அடிச்சு அவர் கிட்ட இருக்கரத எல்லாம் சுருட்டிட்டு ஓடிட்டாங்களாம், என் ஃப்ரெண்டுக்கு அவர் ஈ-மெயில் போட்டு பணம் கேட்டு இருக்கார், எப்படி எல்லாம் நடக்குது பாருங்கன்னு" சொன்னார். எனக்கு உடனே மேற்கண்ட மின்னஞ்சல் நினைவுக்கு வர, அவருக்கு அதைச் சொல்லி நண்பர் கிட்ட சொல்லி பணம் எதுவும் அனுப்ப வேண்டாம், அந்த உறவினரிடம் பேசிய பிறகு மத்ததை செய்யலாம்னு சொல்ல அவர் உடனே நண்பரை அணுகி பணம் அனுப்புவதை தடுத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு லண்டனில் இருந்த உறவினருடன் தொடர்பு கொண்டு அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதை உறுதிப் படுத்தி கொண்டுள்ளார்.
உங்கள் யாருக்கேனும் இப்படி ஒரு மின்னஞ்சல் வரும் பட்சத்தில், நன்கு விசாரித்த பிறகே செயலில் இறங்கவும்.
கடைசித் தகவல்: இந்த போலியான தகவலைத் தந்து பணம் கறப்பவர்கள் இந்தியாவில் மஹாராஷ்ட்டிரத்திலிருந்து இயங்குவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
பின்குறிப்பு: இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தவுடன் பணம் அனுப்பியே தீருவேன் எனறு குதிப்பவர்கள் பணம் அனுப்பிய கையோடு நமது தமிழ் சங்கத்திற்கும், நமது கோவிலின் கட்டுமானப் பணிக்கும் கொஞ்சம் பணம் அனுப்பினால் சந்தோஷம்.
முரளி.
எனக்கு சென்ற ஆண்டு இது மாதிரி வந்த அஞ்சல் இன்னும் தமாஷ். ஃபேஸ்புக்'கிலிருந்து வந்தது. அது முதல் தடவையாக இருந்ததால், நானும் விசாரிக்கலாம் என்று இந்தியா போயிருந்த அந்த நண்பர் குடும்பத்தினர், மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரித்தேன். யார் கண்டார்கள், உண்மையாக நடந்திருந்தால், அந்தக் குழப்பத்தில் ஃபேஸ்புக் கணக்கு மட்டும்தான் ஞாபகம் இருந்ததோ என்னவோ :-)
ReplyDeleteஇன்னொரு நண்பருக்கும் இதுமாதிரி ஆனது. இந்தியாவில் மற்றவர்கள் கணினியிலோ, ப்ரௌசிங் செண்டர் கணினியிலோ அவரது ஹாட்மெயில் கணக்கை பயன்படுத்தியதால் வந்த வினை. அவரது ஹாட்மெயில் கணக்கையே இழந்தார் அவர். முடிந்தவரை எங்கிருந்து கணினியை பயன்படுத்தினாலும் https: என்று ஆரம்பிக்கும் மின்னஞ்சல் தளங்களையே பயன்படுத்துங்கள். சீனத்து தொந்தரவுக்குப் பிறகு, கூகுளாண்டவர் https முறைக்கு முழுவதாக மாறி விட்டார்.
சில மாதங்களுக்கு முன் நமது நடராஜ மூர்த்தி அவர்களின் ஹாட்மெயிலில் இருந்து இது போல ஒன்று வந்தது. சென்ற வாரம் வெள்ளிகிழமை எனது நண்பர் ஒருவரின் ஜிமெயிலில் இருந்து வந்திருந்தது! அவருக்கு உதவ பலரும் அந்த ஐடிக்கு எப்படி பணம் அனுப்பலாம் என கேட்டு இருந்தனர். அது தவிர லண்டனில் இருந்த அவரது உறவினர் ஒருவர் ஹோட்டல் முகவரிக்கு நேராக சென்று விசாரிதிருந்தார்! நண்பர் இந்தியாவில் இருந்ததால் சரியான நேரத்திற்கு ஈமெயில் செக் செய்யவில்லை! சிலர் அவரது வீட்டிற்கு தொலைபேசி வழியாக அழைத்த பின் தான் இந்த விசயமே அவருக்கு தெரிந்தது! அவரது ஐடி/பாஸ்வோர்ட் கைப்பற்றப்பட்டு அவர் அதை மீட்டபின்னும், கைப்பற்றியவர்கள் மீண்டும் அந்த ஐடி யை வைத்து பாஸ்வோர்ட் மாற்றி லாகின் செய்துள்ளனர். அதை எப்படி தடுப்பது என்பதற்கு பல நல்ல உபயோகமுள்ள வழிகளை கூகிள் இங்கு கொடுத்துள்ளார்கள் : http://bit.ly/cAWqeT
ReplyDeleteஇது மாதிரியான மின் அஞ்சலுக்கு
ReplyDeleteஉடனடியாக செயல்படாமல்
தீர விசாரித்து செயல்படுவது நலம்
ஏன்னா திருடர்கள் உக்காந்து யோசிக்கிறாங்க
நாம யோசிக்காம ஏமாந்துடறோம்