Sunday, May 30, 2010

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்

செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்:
பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரி தமிழ்பாடலுக்கு ஆங்கிலப் பாணியில் இசையமைத்து ஒவ்வொரு கையிலும் இரண்டு, மூன்று விரல்களை நீட்டிக்கொண்டு பாடினால், தமிழே மறந்துவிடும் போலிருக்கிறது.  மீசைக்காரரே  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று சொல்லியிருக்கிறார், நீ என்னடா மடிசஞ்சி என்கிறீர்களா? அதுவும் சரிதான். இது மாதிரி எல்லாம் விரல் நீட்டிக்கொண்டு பாடுவார்கள் என்று தெரிந்திருந்தால், மீசைக்காரர் சேரநாட்டிளம் பெண்களுடன் நிப்பாட்டியிருப்பார் :-) அவர் சொன்னதுக்காத்தானோ கர்நாடக சங்கீதத்தில் சுந்தரத் தெலுங்கை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதெல்லாம் போகட்டும்... செம்மொழி என்றால் என்ன? :-)

மாநாட்டு தீம் சாங்'காம். தீம் சாங்குக்கு செம்மொழித் தமிழில் என்ன? கடைசியில் கலைஞரைக் காண்பிக்காமல் இருந்தால், விட்டிருப்பார்களா? :-)

ஒரு தமிழ் பில்ட்- அப்புக்காக சுடிதாரைத் தவிர்த்திருக்கக்கூடாதா?  (முரளிக்கு தமிழ் நுணுக்கமான மொழின்னு பின்னூட்டம் போட ஒரு பிட் இங்கே. மற்றவர்களுக்கு புரிகிறதோ?)

தாவணியில் போனால், கம்ப்யூட்டர் கம்பெனியில் உள்ளே விடுவார்களோ?? 

8 comments:

 1. செம்மை என்பதன் பொருள் செழுமை, பசுமை அல்லது பழமை என்று கொண்டால் விரலை நீட்டி பாடுவதால் அதன் தன்மை மாறப்போவதில்லை. தவிர ஒவ்வொன்றுக்கும் இப்போது விளம்பரம் தேவைப்படுகிறது! காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதில் தவறில்லை என்றே தோண்கிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும்.

  ReplyDelete
 2. தீம் சாங்கிற்கு மைய நோக்கு பாடல் என்று குறீப்பிட்டிருக்கிறார்கள். :-)

  ReplyDelete
 3. (முரளிக்கு தமிழ் நுணுக்கமான மொழின்னு பின்னூட்டம் போட ஒரு பிட் இங்கே. மற்றவர்களுக்கு புரிகிறதோ?)


  யாருங்க இந்த முரளி?

  ReplyDelete
 4. // யாருங்க இந்த முரளி?//
  இக்கட சூடண்டி.... எங்க தானைத்தலைவரை பத்தி இப்படி கேட்டுட்டீங்க.. :-)

  ReplyDelete
 5. //தீம் சாங்கிற்கு மைய நோக்கு பாடல் என்று குறீப்பிட்டிருக்கிறார்கள். :-)//

  அம்மாடியோ. இதுக்கு நீர்வீழ்ச்சி(water fall)யே பரவாயில்லை :-)

  ReplyDelete
 6. ரகுமானும் கவுதம்மேனனும் வந்தேமாதரம் பாடலின் மோஸ்தரை அப்படியே பின்பற்றியிருக்கிறார்கள். ரகுமான் இன்னும் சிறிது மெனக்கெட்டிருக்கலாம். வீடியோ நன்றாக இருந்தாலும் புதுமை ஒன்றும் இல்லை. இன்னும் சிலமுறை கேட்டுப்பார்க்கணும்.
  ப்ரபா

  ReplyDelete
 7. நானும் நமது தாய்மொழி தமிழ் மா நாட்டு மையக்கருத்து பாடலைக் ( தீம் ஸாங் ) கேட்டேன்.

  நாம் திரு ஏ.ஆர். ரஹ்மான் அபிமானி தான் எனினும் இந்தப்பாடல் புதிய மெட்டுடன் இருப்பதாகத் தோன்றவில்லை.
  வந்தே மாதரம், ஜெய் ஹோ போன்ற அவரது பிரபலமான் இசை அமைப்புகளின் பாதிப்பு இருக்கிறதோ !!

  பாடலில் இலக்கியம் நுட்பமாகத் தெரியும் அளவிற்கு இசை இருக்கிறதா ? தெரியவில்லை. அல்லது
  எனக்குப் புரியவில்லை.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 8. செம்மொழி பாடல் ஒரு கூட்டாஞ்சோறுதான்
  இலக்கிய வரிகளை போட்டு கலந்து அதை பாடல் என்று தன பெயரை போட்டுக்கொள்ளும் தானைத்தலைவர்
  பாடலை இசையமைக்க ஒரு பாதி மலையாளி ரஹ்மான் மற்றும் பாடகர்கள் அனைவரும் மலையாளிகள் TMS & ஒரு கடைசியாக நாட்டுப்புற தமிழ் பாடகி,இயக்கம் கௌதம மேனன் மலையாளி ,பாவம் கருணாநிதிக்கு தமிழர்கள் யாரும் கிடைக்கவில்லைபோலும்

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!