Wednesday, July 08, 2009

ரிச்மண்டில் பூகம்பம்!

ஆறாம் தேதி நள்ளிரவில் வீட்டுப் பின்னால் ஏதோ மரம் விழுந்தது மாதிரி ஒரு சத்தம். தரையும் அதிர்ந்தது. பின்னால் எட்டிப் பார்த்தால் எந்த மரமும் விழுந்திருக்கவில்லை. இடியாய் இருக்கவும் வாய்ப்பில்லை. யோசனையுடன் தூங்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் வேலையில் பிரயாணம் செய்யவேண்டியிருந்ததால், தோட்டத்தை நன்றாகப் பார்த்துவிட்டு, கிளம்பிவிட்டேன்.

இன்று காலையில் நாராயணன் சென்னையில் இருந்து ஃபேஸ்புக்கில் விஷயம் அனுப்பியிருந்தார் நம்ம ஊரில் சின்ன்ன்னன நிலநடுக்கம் என்று. உள்ளூர் செய்தித்தாளில் விஷயத்தை நுனிப்புல் மேய்ந்து விட்டு அலுவலகம் செல்லும்போது இன்னொரு நண்பனின் வாய்ஸ்மெய்ல் வந்தது. உங்க தெருவில் பூகம்பமாமே - எல்லோரும் நலமா என்று...

பார்த்தால் என் வீட்டுக்கு நேர் பின்னால் பூகம்பம்! நல்லவேளை - ரிச்டர் கணக்கில் 2.3 அளவே ஆன நிலநடுக்கம். தப்பித்தோம்!
செய்தி விரிவாக இங்கே...  குல்லாவை கழட்டிவிட்டு பேட்டிக்கு வாங்கய்யா.. மூஞ்சே தெரியல... இந்த ஆளு எங்க தெருவான்னு சந்தேகமா இருக்கு.

இது தொடர்பான பக்கங்கள் இங்கே பார்க்கலாம்.... பிங் தேவர் இன்னும் நம் ஆண்டவர் கிட்ட கூட வரவில்லை இந்த விஷயத்தில்.

2 comments:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  2. இரவு படித்துக் கொண்டிருந்த போது சப்தம் கேட்டு நாகுவைப் போலவே வெளியே வந்து பார்த்த போது மரம் ஏதும் விழுந்திருக்கவில்லை. சரி என்று திரும்பும் போது அக்கம் பக்கத்து வீட்டிலும் லைட் எரிந்து அவர்களும் பதட்டத்துடன் வெளியே வந்து பார்த்துக் கோண்டிருந்தார்கள். சரி ஒன்றும் ஆபத்தில்லையே என்று படுத்து விட்டேன். மறுநாள் இணைய தளத்தில் பார்த்த போது சற்று அதிர்சியாகத்தான் இருந்தது.

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!