Sunday, December 02, 2007

படம் பார்த்து கடி சொல் - 2

8 comments:

  1. கடி 1:
    கோடி வீட்டு கோவிந்தன், தண்ணி பிடிக்க கொடம் எடுத்துகிட்டு கிளம்பிட்டான், நமக்கெல்லாம் இனி தண்ணி ஸ்பூன்லதான் கிடைக்கும் போல இருக்கு.

    கடி 2:
    ஹும் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை குளிக்க தண்ணி பிடிச்சிட்டு வரலாம், மாப்பிள்ளை குடும்பத்துக்கேவா தண்ணி பிடிக்கரது, எல்லாம் என் தலையெழுத்து

    ReplyDelete
  2. இவ்வளவு குடத்துலயும் தண்ணி வேணுமாம். காலியா இத்தனை கொண்டு போகலாம். தண்ணி ரொப்பி இத்தனையையும் எப்படி கொண்டு வருவான் மனுஷன்னு யோசிக்க வேணாம்....?

    ReplyDelete
  3. பரதேசியாரே - இப்படி பதிவு எழுதறதையும் அவுட்ஸோர்ஸ் பண்ணிட்டிங்களா - நல்ல ஐடியாதான் :-)

    ReplyDelete
  4. நாகு,

    கடியை கேட்டா(அ) பார்த்தா,
    அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.

    அந்த ஆள் தண்ணீர் பிடிக்கப் போறதாகத்தான் எழுதியிருக்கே தவிர, அவன் அப்படியே தண்ணீர் பிடிச்சு எடுத்துட்டு வரப்போறதா எழுதலையே?

    இது எப்படி இருக்கு!

    ReplyDelete
  5. என்ன பாக்குறீங்க இவ்ளோ குடம் ஏதுன்னா...அது ஒண்ணுமில்லீங்க ஊர்ல தண்ணி தட்டுப்பாடு இருக்குல்ல..அதான் குடத்துக்கு வேலை இல்லைன்னுட்டு பாதி விலைக்கு குடுத்துட்டாங்க...இன்னைக்கு யாரு கண்ணுல முழிச்சனோ...நல்ல வியாபாரம்.

    ReplyDelete
  6. முரளி

    அது நான் எழுதின கடி. நீங்க சொன்னப்பறம்தான் எனக்கே தோணிச்சி - உங்க கடிக்கு பதில் மாதிரி இருக்குன்னு...

    ReplyDelete
  7. நாகு,

    மன்சிக்கப்பா.

    பரதேசி: இப்படி கடி அவுட் ஸோர்ஸ் பண்ணினது நல்லா இருக்குது, ஒரு 5 அல்லது 6 கடி வந்த பிறகு உங்க கடியை எழுதுங்க.

    முரளி.

    ReplyDelete
  8. கடிகளை அவுட் ஸோர்ஸ் பண்ணி நல்ல டர்ன் ஓவர். என்னுடன் சேர்ந்து கடிக்கும் முரளி, நாகு, பிரதாப் குமார், சதங்கா அனைவருக்கும் நன்றி. மேலும் மேலும் கடிக்கவும். மற்ற ப்ளாகிகள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறார்களோ?
    முரளி, நாகு, பிரதாப் குமார மூவரும் இந்த படத்திற்கு செமையாக கடித்து விட்டீர்கள். உங்கள் ஒவ்வொரு கடியும் வெடி (சிரிப்பு). கடைசியாக என்னுடைய கடியையும் கடித்துவிட்டு அடுத்த படத்தை கடிக்கப்போவோமா?
    என் கடி இதோ:

    "யேம்மே, குடத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு வியாபாரத்துக்கு கிளம்பிட்டோம். வீட்டை பூட்டினியா?"

    "ஆமாங்க, வீட்டை பூட்டி சாவியை பத்திரமா ஒரு குடத்துக்குள்ளே போட்டேன். ஆனால் சனியன், எந்த குடம்னு தான் தெரியல்லே!"

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!