Monday, November 26, 2007

எச்சரிக்கை

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
காலம் கடந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சமீபத்தில் சென்னை சென்று வந்த அனுபவத்தை 'பரணீதரன்' அளவுக்கு தரமாக இல்லாவிட்டாலும், 'மணியன்' அளவுக்காவது எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் அபிப்ராயங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், பின்னூட்டங்களைப் பொருத்து இதைச் செய்யலாம் என்று இருக்கிறேன். தேவையில்லை என்று நினைத்தால் தெரிவித்து விடுங்கள். நாகு இதை வெளியிடும் சமயம், தடயம் மர்ம நாவலையும் முடித்து வெளியிட்டு விடுகிறேன் எனவே அதைப் பற்றி பின்னூட்டத்தில் கேட்டு குடைய வேண்டாம்.

சதங்கா:
உங்கள் கவிதைகளை நேற்று படித்தேன், அருமை. பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது, வார்த்தைகள் நன்கு பண் பட்டிருக்கிறது. வாஷிங்டன் பற்றிய பதிவில் வார்த்தைகளின் எளிமை மிக அழகு.

பரதேசி: படம் பாரு கடி கேளு உங்களின் ஏக போக சொத்தாகி விட்டது. இனி உங்களைப் போல இதை யாரும் எழுத முடியாது என்று நினைக்கிறேன். செல்வி(நாய்)க்கு தாலி கட்டிய செல்வகுமாரின் பதிவு அருமை. இந்த மேட்டர் சீரியஸ்னெஸ் செல்விக்கு மட்டும் புரிஞ்சுது, செல்வகுமார் கதை கந்தல்தான்.

அன்புடன்,

முரளி.

4 comments:

  1. முரளி - தடயம் எங்க போச்சு? :-)

    ReplyDelete
  2. முரளி,

    வருக வருக! உங்களின் சென்னை சென்று வந்த "சூடான" அனுபவங்களை எதிர்பார்க்கிறோம் (படங்களுடன்).

    "படம் பாரு கடி கேளு" குறித்து உங்கள் பாராட்டு்களுக்கு நன்றி. "படம் பாரு கடி சொல்லு" என்று புது விதமாக ஒன்று ஆரம்பித்து உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் வெளிபடுத்த ஆசை. கூடிய விரைவில் செய்கிறேன்.

    ReplyDelete
  3. முரளி,

    Welcome Back & வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    தடயம்-னு நாகு கேக்கறாரே அது என்னாது ??

    ReplyDelete
  4. பரதேசி,

    //"படம் பாரு கடி சொல்லு" என்று புது விதமாக ஒன்று ஆரம்பித்து உங்கள் எல்லோருடைய எண்ணங்களையும் வெளிபடுத்த ஆசை. //

    இது சூப்பர். சீக்கிரம் ஆரம்பிங்க.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!