Thursday, November 01, 2007

நானும் படம் காமிப்பனே...

இந்த படங்களைப் பாருங்கள். (படங்களைப் பெரிசாக்குவதற்கு படங்களின் மேல் க்ளிக்குங்கள் என்று நான் சொல்லாவிட்டாலும் சும்மாவா இருப்பீர்கள் - க்ளிக் அண்ட் என்ஜாய் மாடி)மும்பையில் விமான நிறுவனங்களின் விளம்பரப் பலகை சண்டை இப்படி ஆரம்பித்தது. முதலில் ஜெட் ஏர்வேஸ்காரர்கள் இந்த பலகையை வைத்தார்கள்.




அடுத்தது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்காரர்கள் ஜெட் ஏர்வேஸ்காரர்களை இப்படி கலாய்த்தார்கள்...



அதைப் பார்த்தவுடன் கோ ஏர் கோதாவில் இறங்கினார்கள்....(பெயர் கேள்விப்பட்டதே இல்லை இதுவரை - நாம்தான் குகைவாசியாயிற்றே?).





உடனே நான் இவர்களுக்கு சளைத்தவனில்லை என்று லல்லு வந்து விட்டார்....




இந்த விளம்பரங்கள் நிஜமாக இப்படி அடுக்கப்பட்டனவா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
லல்லுவைப் பற்றி என்னதான் ஜோக் அடியுங்கள். ஆனால் மனுஷன் இந்திய ரயில்வேவை லாபகரமாக நடத்துவது மிகவும் மெச்சப்படவேண்டிய விஷயம்....


இனி அடுத்த விளம்பரம் - மிகவும் ஆச்சரியப்படவைத்தது... இது ஒரு ஸ்வீடன் நாட்டு பத்திரிக்கையில் வந்ததாம்.



ABB நிறுவனத்தாரின் வேலைவாய்ப்பு விளம்பரமாம். (சொன்னால் சரி - நமக்கெங்கே ஸ்வீடிஷ் மொழி தெரியப்போகிறது? அது ஸ்வீடிஷ் என்றே தெரியாது)
இந்த விளம்பரத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வி:
உங்கள் எதிர்காலம் எந்த ஊரில் - பெய்ஜிங்(சீனமொழியில்), வாஸ்டெரஸ்(ஸ்வீடிஷ் ஊர்) அல்லது பெங்களூரு(கன்னடத்தில்)? இதைப்பார்த்தவுடன் இங்கே லோக்கல் கன்னடியர்கள் சிலிர்த்து விட்டார்கள். இப்படி ஒரு மடல் வந்தது எனக்கு.

What is this?

Its a ad in a swedish magazine, about job openings in ABB

What does it say?

Is your future in Bejing(written in chinese), Västerås(sewdish city) or BENGALURU

KANNADIGARE IDU NIJAAKU HEMME PADABEKADA VISHYA.

தும்பா சரி. இருக்காதா பின்னே?

ஆமேலே நோடோனா. பர்த்தினி.

5 comments:

  1. That was a bit old ad...later Mumbai Corporation removed everything issuing a warning notice...

    So, Advt industry is catching up in India.... (Indian ads have been the best all the times)


    -- GEM

    ReplyDelete
  2. //So, Advt industry is catching up in India....//

    catching up-ஆ ... already our ads. are great for decades.

    'கலக்கறேல் சந்துரூ' ... மறக்க முடியுமா இந்த ad ???

    ReplyDelete
  3. வாங்க Jahe... எவ்வளவு பழசு இந்த செய்தி? இந்திய விளம்பரங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு பதிவில் நிறைய விளம்பர வீடியோக்கள் பார்த்தேன். அசத்துகிறார்கள்.

    ReplyDelete
  4. நாகு,

    அடீஸ்மெண்டு அல்லாம் படா டக்கர்பா. பதிவும் தூள்.ஆனா கடசீ வரில கன்னடத்துல மாட்லாடினது தும்பா சன்னா கீது.

    கட்சீல எய்தின "நோடோனா" அப்டீன்னா "கண்டுக்கலாம்" தானே? "பர்த்தினி" அப்டீன்னா "வரடா" தானே. அல்லாம் சரி வாத்யாரே - "ஆமேலே" ன்னா இன்னா நைனா?

    ReplyDelete
  5. ஆமேலேன்னா அப்பால :-)
    மத்ததெல்லாம் கரீக்டா சொல்லிக்கினே வாத்யாரே...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!