Sunday, November 11, 2007

"நாய"கன்


நாய்க்கு தாலி கட்டிய செல்வகுமார்

கீழ்கண்ட செய்தி ஒரு பிரபல தினசரியில் வெளியானது.

மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.

மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு `உல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. `இறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. `செல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு `பன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், `நான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார்.

இச்செய்தியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அபத்தங்கள்:

1. மணமகன் பெயர் செல்வகுமார். மணமகள் பெயர் செல்வி. அப்பா என்ன பெயர் பொருத்தம்!
2. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு எல்லாம் நடந்திருக்கிறது.
3. பெண்ணுக்கு சேலை கட்டி கோவிலுக்கு வேறு கூட்டிச்சென்றிருக்கிறார்கள்
4. விருந்து நடத்தி மணமகளுக்கு "பன்" வேறு கொடுத்திருக்கிறாகள்
5. மணம் முடித்த மாப்பிள்ளை பெண்ணை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று சத்தியம் வேறு செய்திருக்கிறான்.

மாப்பிள்ளை அழைப்பு, ஊர்வலம், விருந்து இத்துடன் நிறுத்திவிட்டு "சாந்தி முகூர்த்தம்" நடத்தாதது ஒரு குறை. சம்மந்திகள் சண்டை வேறு போட்டிருப்பார்கள்.
இந்த கல்யாணம் நடத்தச்சொன்ன ஜோதிடரையும் கடித்துப்பிடுங்கியிருப்பார்கள்.

சாவி அவர்கள் "வாஷிங்டனில் திருமணம்" எழுதினார். யார் "விலாக்குளத்தில் திருமணம்" எழுதப்போறார்களோ!

அப்பா தாங்கலியேடா சாமி இந்த பைத்தியக்காரத்தனத்துக்கு.

6 comments:

 1. இந்த கேலிக்கூத்தை எப்படி இந்த ஊர் பத்திரிக்கைக்காரர்கள் விட்டார்கள்? எலிக்கோயில், பாம்புக்கு பாலாபிஷேகம் போன்ற சமாச்சாரங்களை முக்கியமாக காண்பிப்பார்களே?

  வாங்க பரதேசி - இப்பதான் சுதேசி நினைப்பு போனதா :-)

  ReplyDelete
 2. பரதேசி - நடத்தாத/நடக்காத சம்பவங்கள் குறித்து உங்கள் கற்பனை தமாஷ்.

  ReplyDelete
 3. நாய் எவ்வளவு பவ்யமாக தலைகுனிந்து நிற்கிறது பாருங்கள்... என்ன இருந்தாலும் பெண் நாயல்லவா:)

  ReplyDelete
 4. இந்தப் பயலும் சேர்ந்த்துதானா இந்திய அரசை தேர்ந்தெடுத்தான்? வாக்குரிமையைப் பறிக்கவேண்டும்!!!

  புள்ளிராஜா

  ReplyDelete
 5. தமிழ்நதி - சுற்றி அனைவரும் நின்று கழுத்தை அழுத்திப் பிடித்தால், நாயென்ன, சூர்ப்பனகைகூட 'பவ்யமாக தலை குனிந்து' நிற்பாள்.

  ReplyDelete
 6. Jahe வின் பின்னூட்டம் (தணிக்கை செய்தபின்)


  நாய்க்கு தாலி கட்டிய நாய்....

  இவனுங்கள திருத்தவே முடியாது... எனக்கு கேப்டனோட "சொக்கத்தங்கம்" படம் ஞாபகத்துக்கு வருது.... அதில ஊர் கட்டுபாட்டு படி கழுதைக்கும் செந்திலுக்கும் கவுண்டரு கலியாணம் செஞ்சி வப்பாரு.. அப்ப செந்தில் சாந்தி முகுர்த்த்த பத்தி கேப்பாரு...கவுண்டரு அதுக்கு.."நான் கழுதைக்கு கஷ்டம் வெக்க மாட்டேன்" ன்னு சொல்லுவாரு.... இங்கே என்ன நடந்ததோ...இன்னும் பத்து மாசத்திலே "லொள்ளு - குவா, லொள்ளு - குவா" தான் போலிருக்கு....

  ஆமாம்...நாயி இவருக்கு என்ன சமைச்சி போடும்.. #@$!## யா ? அல்லது...எலும்பு குருமாவா ??

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!