Sunday, July 15, 2007

சட்டை



சட்டையின் கை குட்டை
காபி நிற பட்டை
அணிவது சின்ன மொட்டை
கால்சட்டை ஜோபியில் ஒரு ஓட்டை
அதன் வழியே விழுந்தது புளியாங் கொட்டை
கையிலொரு கைக்குட்டை
அதில் சுமப்பதொரு கொடுக்காப்புளிக்காய் மூட்டை
ஆற்றில் சிறுவன் கட்டுவது ஒரு மணல் கோட்டை

4 comments:

  1. இது ஏதும் லிமெரிக் முயற்ச்சியா?

    ReplyDelete
  2. இது கூட தொலைந்த காட்சிகள் வரிசையில் சேரும். பால்ய வயதை நினைவு படுத்தும் விசயங்களை 'சட்டை' மூலம் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. இதையும் சேர்த்துக்குங்க:

    சின்ன மொட்டை கையில் கிரிக்கெட் மட்டை
    பந்தை அடித்ததும் பட்டு விழுந்தது தாத்தா பொடி மட்டை

    ஸ்ரீலதா கவிதை அருமை. நிறைய எழுதவும்

    ReplyDelete
  4. Shan, பரதேசி - பாராட்டுக்கு நன்றி.

    பரதேசியாரே - உங்கள் ஊக்குவிப்புக்கும் அருமையான இரண்டு வரிகளுக்கும் நன்றி.

    முரளி - சும்மா ரைமிங்காக முயற்சி செய்தேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!