Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!

4 comments:

 1. சிவாஜி கூட தேவர்மகன் படபிடிப்பின்போது நாசரின் நடிப்பு குறித்து வெளிப்படையாக புகழ்ந்தார் என படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. நாகு சார் இப்போலாம் என் வலைப்பதிவின் பக்கம் தலைகாட்டுரதில்ல போலிருக்கு. சுகமாக உள்ளீரா?

  ReplyDelete
 3. வாங்க விக்னேஷ். தலைகாட்டுகிறேன். எதுவும் எழுதவில்லை கொஞ்சம் வேலைப்பளுவால். என்ன - மாயன் என்று பார்த்துவிட்டு இன்கா, மாயன் அந்த மாதிரி நினைத்துவிட்டீரா? மம்மிகள் ஆராய்ச்சியை முடித்துவிட்டு மாச்சு பிச்சு மாயன்கள் என்ன ஆனார்கள் என்று கொஞ்சம் கவனியுங்கள் :-)

  சரி - ஷான் கோபித்துக்கொள்ளப் போகிறார். நாம் இவர் கதையை விட்டு விட்டு அரட்டையடித்துக் கொண்டிருக்கிறோம். போற்றிப் பாரடி பெண்ணே...

  ReplyDelete
 4. அனைவரின் வருகைக்கும் நன்றி.

  நாகு, இதுக்குத் தான் சொல்றது ஏதாவுது பதிவ போடுங்க என்று. நாங்க சொன்னா எங்க கேக்க போறீங்க :)

  //ஷான் கோபித்துக்கொள்ளப் போகிறார்.//

  ஆமா, பின்னூட்ட எண்ணிக்கை எகிருதேனு கோபிச்சுக்கப்போறேன். நீங்க வேற ;-)

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!