Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு



-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா

10 comments:

  1. சதங்கா அவர்களே,வணக்கம்.

    வலைப் பதிவர் ஆத்திச்சூடி எழுதுவது மதியம் 4:33 க்கா, பிறகு ஓய்வா? அப்படி போடு அறுவாள. எந்த மன்னார் அண்ட் கோ -வில் வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு உதவிக்கு ஆள் வேண்டுமா? எனக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல பையன் இருக்கான், சொன்னீங்கன்னா நாளைக்கே அனுப்பிடறேன்.

    ஆத்திச்சூடி யை தொடர வேண்டுமானால், எனக்குத் தெரிந்த தமிழ் போதாது. ஆகவே கவிதை முற்று பெற வாழ்த்துக்கள்.

    பித்தன்.

    ReplyDelete
  2. கடைசி இரு வார்த்தைகள் தெரியவில்லை என்று சதங்காவும், பித்தனும் நாசுக்காகச் சொல்லியிருக்கிறார்கள் ;-)

    யாராவது தெரிஞ்சா சொல்லுங்க ....

    பித்தன்,

    சதங்கா 4:30க்கெல்லாம் ஓய்வு எடுக்கப் போராருனு ரொம்ப நொந்துக்காதீங்க. நானும் இப்ப ஒரு பதிவ போட்டுருக்கேன், இப்ப மதியம் 12:39. அடுத்து ஓய்வு தான். ;-)

    ReplyDelete
  3. ம்ம்ம்,
    மிகவும் சுவாரசியமான ஆத்திசூடி.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஔடதம் சாப்பிடு (நாலு மணிக்கு ஓய்வு எடுத்தா இப்படிதான்)அ
    ஃன்னாக்கு வழிதேடு

    ReplyDelete
  5. ஒளவியம் தவிருன்னு சேத்துக்கோங்க. ஒளவியம்ன்னா பொறாமை.

    ஃக்கு அஃகம் அறி. அஃகம்ன்னா முறையான வழி. வலைப்பதிவுகளுக்கென்றே இருக்கும் முறையை அறி.

    :-)

    ReplyDelete
  6. வெற்றி,

    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  7. பித்தன்,

    4:33க்கு ஓய்வுனு சொன்னது வலைக்குத் தானே. நீங்க சொல்றத பார்த்தா வேலைக்கே ஒலை வச்சிருவீங்க போல இருக்கே :(

    //உங்களுக்கு உதவிக்கு ஆள் வேண்டுமா? //

    ஓய்வுக்கே உதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்களா ? வியப்பாத் தான் இருக்கு. :)

    //கவிதை முற்று பெற வாழ்த்துக்கள//
    என்ன விட descent-ஆ சொல்லிட்டிங்க. தல ஏதோ லொள்ளு பண்ணியிருக்காரு, என்னனு பார்ப்போம் ...

    ReplyDelete
  8. நாகு,

    //ஔடதம் சாப்பிடு (நாலு மணிக்கு ஓய்வு எடுத்தா இப்படிதான்)//

    ஔடதமா ? அப்டீனா ?

    //அஃன்னாக்கு வழிதேடு//

    உங்கள் இயல்பான நகைச்சுவை. ரொம்ப நேரம் வாய்விட்டுச் சிரித்தேன். பக்கத்தில இருக்கவங்க ஒரு மாதிரி ஆயிட்டாங்க. அட tester இல்லீங்க ;-)

    ReplyDelete
  9. ஔடதம் - ஔஷதம் - மருந்து (அப்படின்னு நான் நினெச்சிக்கிட்டு இருக்கேன்).

    இப்படி ஔ, ஃ க்கு பக்கம் போனாதான் தமிழ்ல டிக்ஷ்னரி வேண்டியிருக்கு...

    ReplyDelete
  10. வாங்க குமரன்,

    உங்கள் பதில் வெகுவாக அசத்துகிறது. புது வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!