Tuesday, July 03, 2007

ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...



வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்

மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்

வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்

இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)

அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்

பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்

-----

இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)

என்றும் அன்புடன்
சதங்கா

8 comments:

  1. சதங்கா,

    அப்படி போட்டு தாக்குங்க. சூப்பர்.

    நாகு: ஆச்சு நம்ம கதை கந்தலாயிடுச்சு. இதுக்கு மேல நான் என்ன எழுதினாலும், யாரும் படிக்க மாட்டாங்க. எனக்கு ஒரு தொழில புடிச்சு வெச்சுட்டேன். பொளப்பு நடக்கனுமில்ல.

    'யெடாப்பி, யெடாப்பி, யெடாப்பி, யெடாப்பி, யெடாப்பியோ"

    ஒன்னும் பயப்படாதீங்க, இட்லி வடை காப்பி வேகமா வித்துகிட்டிருந்தேன்.

    அன்புடன்,

    முரளி.

    பி.கு: அட இன்னொரு தொழில், பின்னூட்ட பாவலராயிடுவோம் இது கொஞ்சம் பரவாயில்லையா?

    ReplyDelete
  2. சதங்கா - எங்கியோ போயிட்டீங்க. சூப்பர் கிளுகிளு...

    முரளி - நான் கொஞ்சம் வெயிட் பண்ணினேன். அப்பறம் என்னா ஏதாவது பொட்டி, _ட்டி வாங்கினிங்களான்னு கேப்பிங்கன்னுதான்.

    அமைதிப்படை மாதிரி நாம ஆரம்பிச்சிருக்கற பின்னூட்டப்படை பலமாகுமான்னு பார்ப்போம்.

    கவுஜக்கி வருவோம். சதங்கா ஒவ்வொரு படைப்பிலயும் எங்கியாவது கூட்டிட்டுப் போயிருவீங்க. இந்த தடவை அப்படியே அலைகள் ஓய்வதில்லை பாக்கற மாதிரி இருக்கு.

    வேணும்னா இன்னொரு வாட்டி படிச்சி பாருங்க. பின்னாடி 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' கேக்கல?

    ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பாடல்:

    ஆனிப்பொன் கட்டில் உண்டு
    கட்டில் மேல் மெத்தை உண்டு
    மெத்தைக்கோர் வித்தை உண்டு
    வித்தைக்கோர் தத்தை உண்டு
    தத்தைக்கோர் முத்தம் உண்டு
    முத்தங்கள் நித்தம் உண்டு

    அப்படியே உமர்கயாம் 'கெட்டப்'பில் மதுக்கோப்பையுடன் சதங்கா!

    எங்கியோ போயிட்டிங்க!

    ReplyDelete
  3. முரளி,

    //அப்படி போட்டு தாக்குங்க. சூப்பர்.//

    நன்றி.

    //ஒன்னும் பயப்படாதீங்க, இட்லி வடை காப்பி வேகமா வித்துகிட்டிருந்தேன்.//

    இந்த வார சனிக்கிழமை முதற்கொண்டு bussiness ஆரம்பிக்கிறீங்களா ? கோயிலுக்கு வந்தால் உங்களைப் பார்க்கலாம் !

    ReplyDelete
  4. நாகு,

    முதலில் நன்றி.

    //பின்னாடி 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' கேக்கல?

    ஞாபகத்துக்கு வரும் இன்னொரு பாடல்:

    ஆனிப்பொன் கட்டில் உண்டு...//

    இந்தப் பாடல்கள் கேட்டிருந்தாலும், இந்தக் கவிதை எழுத தலையாய inspiration நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஒரு பிரபலமான பாட்டு தான். என்ன பாட்டுனு உங்கள் இருவரில் யாராவது சொல்ல முடியுமா ?

    //அப்படியே உமர்கயாம் 'கெட்டப்'பில் மதுக்கோப்பையுடன் சதங்கா!//

    old wine in a new bottle. அதைத் தானே சொல்லவருகிறீர்கள் நாகு ?

    ReplyDelete
  5. பார்த்தேன்;சிரித்தேன்;பக்கம்வரத்துடித்தேன்
    மலைத்தேன் இதுவென மலைத்தேன்..

    ReplyDelete
  6. சிவஞானம்ஜி,

    வருகைக்கு நன்றி.

    'தேன்' னு முடியற பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள். இதையே தான் தல 'நாகு' அவர்களும் சொன்னார்.

    இன்னும் detailஆ வேற ஒரு பாட்டுல கவியரசர் சொல்லியிருக்கிறார். கண்டுபிடிக்க முடியுதா ?

    ReplyDelete
  7. சதங்கா,

    அட போனா போவுதுன்னு மன்னாப்பு கொடுத்து வுட்டா இன்னா சொம்மா கேள்வி கேட்னுக்ர. ஆராச்சும் மேட்னி மல்யாள படம் கண்கா கவுஜ, கத எய்திகினா, போட்டு தாக்ரத் வுட்டு, சும்மா சூப்பர்ன்டு கமிண்ட் போட்டுகினா, நீ பாட்டுக்கு கேள்வி கேக்ரது வுட்டு போட்டு இன்னா பாட்டுன்டு சொல்லிக. தெர்தா, அக்காங்.

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!