பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம
முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். உஷத் காலம்,
இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்த காலமாகும். மார்கழி மாதம், தேவர்களின் உஷத்
காலமாகும். இறைவழிபாட்டுக்கென்றே வைக்கப்பட்டிருப்பதால், இந்த மாதத்தில்
வேறு விசேஷங்கள் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் முழுவதும் கோவில்களில்
மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், மற்றும்
திருப்பள்ளியெழுச்சியும், பாடுவர். திருப்பதி திருமலையிலும் காலையில்
சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக திருப்பாவை பாடுவார்கள்.
அந்த நாட்களில் தமிழகத்தில் மார்கழித் திங்கள்... மாலே மணிவண்ணா... கேட்காமல் இருந்திருக்க சாத்தியமில்லை. அந்த அனுபவங்களை அனுபவிக்க இங்கும் ஒரு சந்தர்ப்பம்.
நம் ரிச்மண்ட் கோவிலிலும் மார்கழி மாதத்தில் (இந்த வருடம் டிசம்பர் 15 முதல்), வார
நாட்களில் தினமும் காலை 7:00 மணிக்கும் (சனி, ஞாயிறு காலை
9:30 மணிக்கும்) திருவெம்பாவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடப்
படுகிறது.
நானும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளாவது இதை அனுபவிக்க செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டு போகவே முடியவில்லை. இந்த முறையாவது செய்ய வேண்டும்...