நாளை மதியம் முதல் மழையென
நேற்றே அறிவித்தது அறிவியல்,
அறிந்தவுடன் அவரவர் அறிவிற்கேற்ப
வழக்கத்தை வசதிக்கேற்ப மாற்றியும்
உடை கொண்டும் குடை கொண்டும்
மழை தவிர்த்தது மனிதரினம்
மரத்தின் கிளைகளில் பதுங்கின பறப்பன
மரத்தின் கீழ் ஒதுங்கின நடப்பன
மண்ணுக்குள் ஒளிந்தன ஊர்வன
விண்ணிலிருந்து ஆவலோடிறங்கி
தொட்டுத் தழுவி உடல் நனைக்க
நகரும் உயிர் தேடித் தேடி
அலைந்து அலுத்து ஏமாந்து
தனித்துத் தவித்து அழும் மழை
- வாசு
வாசு - அனுமதியில்லாமல் உங்கள் கவிதையை இங்கு பதிவிட்டதற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteஇறகு போடு என்று மயிலை எத்தனை முறைதான் கேட்பது. அதுதான் மழைக்கு முன் மயில் நடனமாடும்போது ஆட்டைய போட்டாச்சு.
அருமையான கற்பனை. உமக்கென்று எப்படிதான் இப்படி எல்லாம் தோன்றுமோ? கடைசி இரண்டு வரிகளில் மழை சம்பந்தமான எல்லா வர்ணனைகளையும் கற்பனைகளையும் புரட்டிப் போட்டு விட்டீர்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள். நான் என் என்னால் முடிந்த வேலையை செய்கிறேன்.
ரசித்தேன்... வாசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமழை கவிதை அழகு!
ReplyDelete