Saturday, August 23, 2014

relax please




படம் பாரு கடி கேளு மாதிரியே ஒரு பதிவு
மிக அருமையாக இருந்தது



 "அதிக பிரசங்கி"   வேதாந்தி 


Friday, August 22, 2014

Blogs updates on Twitter

நாகு,
நம் தமிழ் சங்கத்தின் பெருந்தகை ஒருவரின் சிறிய வேண்டுகோள்.
நம் வலைதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் ஏன் "TWITTER" பண்ணக் கூடாது என்று கேட்கிறார். அவர் இதனை சோதனை செய்து வெற்றியும் கண்டு விட்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எந்த வகையில் சாத்தியம் என்று நீங்கள் கூறுவீர்கள் என எதிர் பார்க்கும்
உங்களின்
வேதாந்தி

Tuesday, August 12, 2014

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?



எனக்கு ஒன்று தெரிந்து விட்டது. மாற்றத்தை விரும்பாதவனே மறத் தமிழன்.
ரஜனி இருக்கும் வரை அவர் தான் சூப்பர் ஸ்டார்.
அடுத்தவரைப் பற்றி யோசிக்க கூட மாட்டோம் என்று பிடிவாதமாக இருகிறார்கள்.

ஒரு வேளை நடிகர்கள் வந்து கூடாரம் போட்டால் தான் நாம் முடிவு செய்வோமோ?

சென்ற மாதம் இங்கு நடிகை ஸ்ரேயா வந்து போனது யாருக்கும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை.
ஆனால் கூட்டம் தான் இல்லை. நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்ததே காரணம்.
இறுதியில் ஆட்கள் இல்லை என்ற காரணத்தால் , இலவசமாக ஆட்களை கையை, காலை பிடித்து வந்து உட்கார வைத்தார்கள்.

அது போல நாமும் ஒரு கட்டத்தில் யாரையோ ஒருவரை  அவர் உறவினர் என்று சூப்பர் ஸ்டார் ஆக
தேர்ந்து எடுத்து விடலாம்.

நமக்கு தான் பரம்பரை ஆளுமை ரொம்ப பழக்கம் ஆகி  விட்டதே. இது ஒன்றும் புதிது இல்லை,

வேதாந்தி 

Monday, August 11, 2014

ரிச்மண்டில் பிடித்த இடம்

கொஞ்ச நாட்களுக்கு முன் ரிச்மண்ட் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். உங்கள் அனைவருக்கும் ரிச்மண்டில் ஏதாவது ஒரு இடம் மிகவும் பிடித்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் ஒன்று இருக்கிறது. ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. என் வீட்டிலிருந்து சில நிமிடங்கள்தான் ஆகும் போவதற்கு.



எந்த இடம் என்று தெரிகிறதா?

 டீப் ரன் பார்க்!

சிறு குழந்தைகள் முதல் என்னைப் போன்ற முதியவர்கள்வரை அனைவரும் பொழுது போக்கலாம் இங்கே. இந்தப் பூங்காவில் பல மகிழ்ச்சியான நினைவுகள், நிகழ்ச்சிகள். தமிழ் சங்கப் பிக்னிக்குகள், பார்க்கில் இருக்கும்  அனைத்து விளையாட்டு இடங்கள், கால்பந்தாட்டம், கிரிக்கெட், நடைபாதைகள், சாரண முகாம், மீன்பிடிப்பு, குளத்தில் ஆமைகள், வாத்துகள், மீன்கள், துவக்கப் பள்ளி புத்தகப் போட்டி( Book Bowl),  கோடைகாலப் பசுமை, இலையுதிர் கால வண்ணக் கோலம், குளிர்காலத்தில் உறைந்த குளம்,  சைக்கிளோட்டம், சாரணர்களுடம் புதையல் தேடல்(Geocacahing), நாயுடன் நடை,  அங்கிருக்கும் கட்டிடத்தில் நண்பர்களுடன்  பேட்மிண்டன், நிறைய பார்ட்டிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனது அனுபவங்களை...

இத்தனை வருடங்களில் இந்தப் பூங்காவில் நிறைய மாறுதல்களைப் பார்த்திருக்கிறேன். பாதைகள் அகலமானது. சரிவான பாதையை மேடாக்கி குளக்கரையை பலப் படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டிடத்தில் நிறைய புது விளையாட்டு சாதனங்கள்.  காடாய் அழகாய் இருந்த பூங்காவை சிதைத்து நட்ட நடுவே ஒரு பூதாகரமான கட்டிடம்! ஆனால் அந்தக் கட்டிடமும் நிறைய உபயோகமாகத்தான் இருக்கிறது. சின்னதாக ஆரம்பித்த மூங்கில் புதர் இப்போது மூங்கில் காடாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் குளத்தின் பக்கத்தில் ஒரு இயற்கை மையம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இங்கு நடந்து போக எத்தனை பாதைகள் இருக்கின்றன தெரியுமா? நான் அகலமாக ரோடு மாதிரி இருக்கும் பாதைகள்களைச் சொல்லவில்லை. ஒற்றையடி பாதை மாதிரி நிறைய இருக்கின்றன... அடுத்த முறை போகும்போது கவனியுங்கள்.  அவற்றில் போய்ப் பாருங்கள். எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். மரங்களின் பெயர்கள், பறவைகள் வகைகள், ஆமை வகைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு இடத்திற்குப் போகும்போதும், ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் முதல் முதலாகப் போவது போல், சந்திப்பது போல் எண்ணிப் பாருங்கள். அந்த இடத்தைப் பற்றி, அந்த மனிதரைப் பற்றி புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பூங்காவில் எடுத்த சில படங்கள்.

நான்காம் பதிவு

இவருக்கு Patio doors'அ திறந்து வச்சா பிடிக்காது
அந்த அம்மாவுக்கு Balcony கதவ மூடினா suffocating'அ இருக்கும்

இவருக்கு 75 degree ஆனா வேர்த்து கொட்டும்
அந்த அம்மாவுக்கு AC'அ on செஞ்சாலே குளிரும்

இவருக்கு நெனச்சத சாப்பிடனம்'னு ஆசை
அந்த அம்மாவுக்கு ஆரோக்யமா சாப்பிடனம்'னு குறிக்கோள்

இவருக்கு NFL'லும், Cricket'டும், Baseball'லும் ESPN'ல பாத்தா போதும்
அந்த அம்மாவுக்கு என் பிரியமுள்ள சினேகிதி நாடகம் பாக்கலேன்னா தூக்கமே வராது

இவருக்கு பொருள எடுத்த இடத்துல வக்க வராது
அந்த அம்மாவுக்கு அது அது அதோட இடத்துல இல்லேனா இருப்பு கொள்ளாது

இவருக்கு பிடிச்சது லெப்ரான்
அந்த அம்மாவுக்கு பிடிச்சது சல்மான்கான்

இவருக்கு விழுந்து விழுந்து படிக்கறதுனா அது அகிலத்தின் செய்திகள்
அந்த அம்மாவுக்கு அகிலமே இவரின் பார்வைகள்

இவருக்கு இஷ்டம் சப்பாத்தி சாவல்
அந்த அம்மாவுக்கு இஷ்டம் வெண்டைக்காய் வறுவல்

இவருக்கு அதிகம் பேசறதுங்கறதுனா 10 வார்த்தைகள்
அந்த அம்மாவுக்கு வாயில விளையாடும் கணக்கில்லா சொற்கள்

இவருக்கு பிடிச்சதெல்லம் டார்க் கலர்
அந்த அம்மாவுக்கு பிடிச்சதோ light rose மலர்

இவருக்கு gift'னா அகராதில அதிக பணம்
அந்த அம்மாவுக்கு gift'னா artistic மனம்

இப்படி எந்த விஷயத்திலுமே ஒரு சேர இருக்க முடியாத இரண்டு பேர ஒரு பெரிய Institution'னுக்குள்ள போட்டு சண்டை போட்டுக்கற இரண்டு பசங்கள ஒரே ரூமுக்குள்ள தள்ளற Teacher மாதிரி 4 சுவருக்குள்ள அடைக்கறது கல்யாணம்.

இந்த எல்லா odds'அயும் மீறி கால் சதமும், அரை சதமும் அடித்து ஆண்டுக்கொரு ஆளை கூட்டி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்'னு காமிக்கற அகிலம் முழுக்க இருக்கற அத்தனை அப்பாவி ஆண்களையும் அழகு பெண்களையும் தெய்வ பிறவிகள்'னு தான் சொல்லனம்.

வேறு எந்த விஷயத்துல ஒத்துக்காவிட்டாலும் 'அஹம் பிரம்மாஸ்மி'யை இந்த இடத்தில் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

-இப்படிக்கு
ரிச்மண்டில் வாழும் மணம் ஆகாத கன்னியர் மற்றும் காளைகளின் சார்பாக உங்கள்
vgr

மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

This article on RTS is sponsored to you by writer/author Thiru. vedaanthi.

Thursday, August 07, 2014

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்

அருமை சகோதரிகளே,

முறத்தால் புலியை துரத்திய காலம் போய்  இப்பொழுது முரடர்களை துரத்தும் நிலையாக உள்ளது.
இது உங்களின் களம். நமக்கு நாமே தீர்வு காணும் உலகம்.

இன்றைய கால கட்டத்தில், செய்திகளைப் படித்தாலே மனம் பதறுகிறது. வயது வரம்பின்றி கொடுமைகள் நடக்கின்றன. இதற்க்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்.

பெண் குழந்தை பெற்ற எனது நண்பர்கள் சிலர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு  பயந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பற்ற நிலையை கண்டு அஞ்சுகிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற உங்களது தீர்வு என்ன? எந்த வகையில் பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு நிலை நாட்டப் படும்.

உங்களின் தீர்வை  இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வேதாந்தி

நாயோட்டு மந்திரம் ...


அனைத்தும் மறந்த‌ அவ‌ச‌ர‌ உல‌கில், ஒரு ந‌ண்ப‌ருக்குத் தொலைபேசி, க‌தைக்க‌லாம் என்றால் கூட‌ முடிவ‌தில்லை.  ஒன்று ந‌ம‌க்கு நேர‌மிருப்ப‌தில்லை, அப்படியே அழைத்தாலும் ம‌றுமுனையில் ந‌ண்ப‌ருக்கு நேர‌மிருப்ப‌தில்லை.  எங்கூருப் ப‌க்க‌ம் கிழ‌விக‌ள் கூறும் ஒரு ப‌ழ‌மொழி தான் நினைவிற்கு வ‌ருகிற‌து.  'நாய்க்கு நிற்க நேரமில்லை உட்கார இடமில்லை', என்ப‌து போன்ற‌ ஒன்று!  இன்றைய‌ வாழ்விற்கு இது எத்துனை பொருத்த‌ம்.  சமீபத்தில், வெகு நாள் க‌ழித்து அழைத்த‌ ந‌ண்ப‌ர், ரிச்ம‌ண்ட் மிடில் ஏஜ் மார்க‌ண்டேய‌ரிட‌ம் இது ப‌ற்றி பேசிய‌போது, 'அத‌ ஏன் ஓய் ஞாப‌க‌ப்ப‌டுத்தரீர், இதோ, இப்ப‌க் கூட‌ அங்க‌ இங்க‌னு ஓடிகிட்டு இருக்கேன், எதுவும் உருப்ப‌டியா இல்ல'னு அங்க‌லாய்த்துக் கொண்டார் :)

இது இப்ப‌டி இருக்க‌, இவ்வ‌ச‌ர‌த்தில் ந‌ம‌து ர‌சிப்புத் திற‌னும், சிந்தனைத் திற‌னும் எப்ப‌டித் தாக்குப் பிடித்து நீடிக்கும்?  ப‌த்தாத‌ற்கு, சித்த‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டுக்க‌ளில், 'இலை ம‌றை காய் மறை'யாக‌ப் பாடிச்சென்ற‌ க‌ருத்துக்க‌ள் தான் எத்த‌னை ?!  அவ‌ற்றை எல்லாம் ஆய்ந்து ப‌டித்து இன்புற‌ ந‌ம‌க்கெல்லாம் நேர‌மெங்கே ?  ந‌ம்ம‌ அவ‌ச‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் போன‌தே, ப‌டித்த‌வுட‌ன் புரிய‌ற‌மாதிரி எழுத‌ வேண்டாம் :)

ச‌மீப‌ கால‌மாக‌க் கேட்டுத் திளைக்கும் அரும‌ருந்து, திருமூல‌ரின் திரும‌ந்திர‌ம்.  'த‌ண்ணீர் வாளிக்குள் த‌லையைக் க‌விழ்த்து' பின்னாளில் ந‌ட‌க்க‌ப் போவதை முன்னாளில் க‌ண்ட‌தாக‌ நாஸ்ட்ர‌டாம‌ஸைச் சொல்வ‌ர் சில‌ர்.  அதுபோல‌ திருமூல‌ரும் ஏதாவ‌து டெக்னிக் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பாரோ ?  சாதார‌ண‌ ம‌னித‌ன் எழுதும் பாட‌ல்க‌ள் அன்று அவை.  மேலோட்ட‌மாக‌ ஒரு க‌ருத்தும், ஆழ்ந்து உட்செல்லச் செல்ல‌ ... இன்றைய அறிவிய‌ல் விய‌க்கும் வ‌ண்ண‌ம் அன்றே எழுதி அருளிய‌வ‌ர்.

நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.

என்ற பாட‌லை ப‌ல‌முறை கேட்டிருந்தாலும், 'நாயோட்டு ம‌ந்திர‌ம்' என்றால் என்ன‌ ?  இப்ப‌டி ஒரு திருமுறைப் பாட‌லில், கேவ‌ல‌ம் நாயின் ம‌ந்திர‌ம் என்று சொல்லியிருக்கிறாரே என்று விய‌ந்த‌துண்டு.  அது என்ன‌வென்று அறிந்து கொள்ள‌ நேர‌மின்றி, ப‌ல‌ நாட்க‌ள் சென்று, எப்ப‌டியோ நேர‌ம் ஒதுக்கி, இணைய‌க் க‌ட‌வுளிட‌ம் முறையிட்ட‌தில், இத‌ன் பொருள் கிட்டிய‌து.  அது,

"நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்."

இன்னும் சற்றே ஆழ்ந்து பொருள் கொள்ள மற்றொரு வலைத்தளம் தரும் தகவல்,



"மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது."

இது போல‌ ப‌ல‌ நுண் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கி ந‌ம்மை என்றும் வ‌சீக‌ரிக்கும் திரும‌ந்திர‌ம்.  நேர‌ம் விளைகையில், மேலும் சில பாடல்கள் பார்க்கலாம்!

Tuesday, August 05, 2014

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?


யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?
இந்த பதிவு ஒரு கருத்து கணிப்பு  மட்டுமே
வேட்பாளர்களின் பெயரை பார்க்கலாம் என்று விக்கி யை  சொடுக்க ஒரு பட்டியல் கிடைத்தது . எனக்கு தெரிந்த வரை அது முழுமையாக இல்லை. நம்ம நமீதா பேரை காணோமுண்ணா பார்த்துகோங்களேன் .
மக்களே தூங்கிரதீங்க. உங்கள் அபிமான சூப்பர் ஸ்டார் யார் என்று உலகுக்கு தெரிய படுத்துங்கள்.


முதலில் பெயர் ராசியை பார்ப்போம்
இப்ப உள்ள சூப்பர் ஸ்டார்  பெயர் மாதிர்யே உள்ளவர்கள்  விஜயகாந்த் ,   நளினிகாந்த மற்றும் ஸ்ரீகாந்த் 
ரஞ்சனி, ரஜினிப்ரியா 
பெயரின் அர்த்தம் பார்த்தால்
விஜய், விஜயகாந்த், ஜெய் , விஜய் சேதுபதி, விஜயகுமார், கே ஆர் விஜயா, விஜய நிர்மலா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் பச்சன்
பட்டம் வைத்துப் பார்த்தால்
லிட்டில்  சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , ஆக்சண் கிங் , இந்தியன் புருஷ் லீ ,
உலக நாயகன் , தல , பவர் ஸ்டார் , வைகை புயல்
தளபதி என்ற பட்டம் உள்ளவர்கள்  புரட்சி வந்தால் மட்டுமே ஆட்சியை புடிக்க முடியும்.
கேப்டன் பட்டம் வெறும் அணிக்கு தலைவன் மட்டுமே.
தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால்
சிவ கார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திர கனி, சூரிய, தனுஷ் , அஜித், விஜய் போன்றவர்கள் மட்டுமே
வெல்வதற்கு வாய்ப்பு உண்டு
உங்களின் சூப்பர் ஸ்டார் வாய்ப்பு எப்படி உள்ளது என்று எங்களுக்கு தெரியப் படுத்துங்கள்

வேதாந்தி

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை


இன்று வினவு என்ற வலைத்தளம் ஒன்றை பார்த்தேன். உங்களிடம் பகிர ஆசை.
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு என்றது எனது பதிவு.
இங்கு ஒவ்வொரு உழைப்பாளியும் என்ன நிலைமை என்று மிக அருமையாக விவரித்துள்ளனர் 

http://www.vinavu.com/2014/08/05/kolar-gold-fields-workers-2/#tab-comments

 

Monday, August 04, 2014

சூடா என்ன இருக்கு ?

அய்யா பார்த்து சாப்பிடுப்பா , ரொம்ப சூடா இருக்கு. இப்படித் தான் நிறைய எச்சரிக்கைகள் .
எழுதும் சமயம் கூட இப்படி நிறைய எச்சரிக்கைகள்.
இதெல்லாம் பார்க்க முடியுமா?

ஏன்னா சூடான விஷயமாச்சே.
நாட்டில் ஒரு பக்கம் common wealth games பற்றிய செய்திகள்.
ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் மண் சரிவு. ஒரு பக்கம் இலங்கை அரசு முதல்வரிடம் மன்னிப்பு கேட்குமா கேட்காதா? ஒரு பக்கம் மோடி அரசின் சாதனைகள். ஒரு பக்கம் டில்லியில் அடுத்த ஆட்சி அமைப்பது யாரு?
இப்படி பரபரப்பு இருக்க, இங்கே ரிச்மாண்ட்  தமிழ் சங்கத்தில் எழுதலாமா வேண்டாமா என்ற பரபரப்பு.

மக்களே! நீங்கள் மட்டும் பரபரப்பு இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?
உங்களுக்காக ஒரு கேள்வி. சூடான விஷயம் என்பதால் கொதித்து விடாதீர்கள்.
நாம் தமிழன் தானே, நமக்கு நடிகர்கள் தானே வழிகாட்டி . அதனால் 
அடுத்த  "சூப்பர் ஸ்டார்" யார்? என்பது தான் இப்ப சூடான செய்தி.

ஏன்னா அவர் தான் அடுத்த முதல்வரை நிர்னயீக்க போகிறவர் !!!!

ஆமாம், சூப்பர் ஸ்டார் ஆகா இருக்கணும்னா என்ன தகுதி வேண்டும்?
மனிதாபிமானமா? நடிப்பு திறமையா? மேடைப் பேச்சா? அழகா? இல்லை எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணுமா? இல்லை என்றால் மேக்கப் இல்லாமல் நடிக்கணுமா?

எனக்கு ஒன்னும் விளங்க வில்லையே. அது சரி தேர்தலில் தகுதி பார்த்தா வாக்கு அளிக்கிறோம். அது மாதிரி இதையும் தேர்ந்து எடுத்து விட்டால் சரியப் போய்  விடும் .

நன்றாக  வரும் வரை ரசிகர் மன்றம் வச்சுக்க வேண்டியது, அப்புறம் எனக்கு அது தேவை இல்லை என்பது.
எது எப்படியோ என் மண்டையை குடைவது யார் சூப்பர் ஸ்டார் என்பது தான்.

உங்களின் வாக்கு படி நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுப்போம்.

யார் யார் தகுதி ஆனவர்கள. எல்லா நடிகர்களும் தகுதி ஆனவர்கள்.
ஆமாம், இந்த மாதர் சங்கம் எல்லாம் எங்க போய்  விட்டது. இதில் பெண்களுக்கு உரிமை இல்லையோ ?
நாம் பெண்களை மதிப்பவர்கள். அதனால் நடிகைகளையும் களத்தில் இறக்கி விட வேண்டியது தான்.

மக்களே உங்கள் பொன்னான வாக்குகளையும், மறுமொழிகளின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.
இல்லை என்றால் நாங்களே ஒரு குத்து மதிப்பா ஒரு ஆளை தேர்ந்து எடுத்து விடுவோம்.

என்னுடைய முதல் வாக்கு யாருக்கு என்பது அடுத்த பதிவில் தெரிவிக்கின்றனே.

இப்படிக்கு
வேதாந்தி ( இது வதந்தி இல்லை வேதாந்தி)