நாளை மதியம் முதல் மழையென நேற்றே அறிவித்தது அறிவியல், அறிந்தவுடன் அவரவர் அறிவிற்கேற்ப வழக்கத்தை வசதிக்கேற்ப மாற்றியும் உடை கொண்டும் குடை கொண்டும் மழை தவிர்த்தது மனிதரினம் மரத்தின் கிளைகளில் பதுங்கின பறப்பன மரத்தின் கீழ் ஒதுங்கின நடப்பன மண்ணுக்குள் ஒளிந்தன ஊர்வன விண்ணிலிருந்து ஆவலோடிறங்கி தொட்டுத் தழுவி உடல் நனைக்க நகரும் உயிர் தேடித் தேடி அலைந்து அலுத்து ஏமாந்து தனித்துத் தவித்து அழும் மழை
அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் எந்த தொழில் செய்யலாம். இன்னார் இந்தத் தொழில் செய்தால் கேவலம் என்ற நிலையில்லை. அந்த மனப்பான்மை இந்தியாவிலும் ஆரம்பித்திருப்பது நல்லது. ஊரில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இனிய அதிர்ச்சி. நடிகைகள் காலங் காலமாக சோப், ஷாம்பூ, நகை விற்று வருகிறார்கள். இன்று நம் நடிகர்கள் பல விளம்பரங்களில் வருகிறார்கள். விஜய் அலைபேசி விளம்பரத்தில் வந்தார், ஷாருக் கான் சிமெண்ட் விற்கிறார், மம்முட்டி பனியன், வேட்டி விற்கிறார். இவர்கள் எல்லோரையும் விட சூப்பர் அப்பாஸின் டாய்லட் கழுவும் திரவம் விளம்பரம்.
என்னடா, மார்க்கெட் போனதால் டாய்லட் கழுவும் விளம்பரத்திலெல்லாம் வருகிறானே என்று கேலி செய்வார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக விளம்பரத்தில் வருகிறார்.
அடுத்து ______________________________ (மார்க்கெட் போன ஒரு நடிகர் பெயரை செருகவும்) நடிக்கும் தென்னந்தொடப்பம் விளம்பரத்தை எதிர்பார்க்கிறேன். என் பையன்கள் தென்னந்தொடப்பத்தின் அருமை பெருமைகளை ஒத்துக் கொள்ள மாட்டென்கிறார்கள். :-)
Saturday, July 20, 2013
படம் பாரு கடி கேளு - 59
ஒரு 5 நிமிடம் ட்ராபிக்கை பார்த்துக்கோ ஒரு டீ சாப்பிட்டு எனக்கும் ஒரு பன் வாங்கி வரேன்னு சொல்லிட்டு போனவரு போனவருதான். ஆளையே காணும். ஒரு யூனிபார்ம், தொப்பி, ஷூ கூட கிடையாது. வரட்டும் அந்த ஆளு கடிச்சு கொதரிடறேன் பார்,
சமீபத்தில் பதிந்த திருக்குறள் கணிணி மென்பொருள் பதிவின் தொடர்ச்சியாக, சில நண்பர்களின் வேண்டுகோளின் பேரில், சிறிது மேம்படுத்தப்பட்ட மென்பொருளைக் கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். மேல் விபரங்களுக்கு, மென்பொருளின் F1 விசையை அழுத்தினால், தகவல் பெறலாம்.
பார்வதி: என்னங்க அப்பவே சொன்னேன் பின்னால இன்னொரு ஸீட் இல்லேன்னா ஒரு ஸைட்கார் மாட்டுங்கன்னு. நீங்க தான் கேட்கல்லே, இப்போ பாருங்க முருகன் மயில்மேல தான் வருவேன்னு பறந்துட்டான்.
மறுகடி:
போன் பேசும் இன்ஸ்பெக்டர்: ஆமாம் சார் 6 பேர் போகக்கூடிய மோட்டார்பைக்கில் 3 பேர் தான் போறாங்க. ம்ம்ம்.. இல்ல சார். 2 பேர் தலையில தான் ஏதோ ஹெல்மெட் மாதிரி இருக்கு. ஓட்டுனர் தலையில தண்ணி கொட்டுது சார். முன்னால உள்ள குழந்தைக்கு யானை தலை சார்.