Saturday, January 23, 2016

பனிக்காலப் பகல்



விழித்தெழ விடியும் நேரம்
இருளைத் தழுவி மயக்கும் ஒளி
மேகச் சுறுக்கமின்றித் திரையென வான்
பறந்து பறந்து இறங்கும் பனி
விண்ணும் மண்ணும் ஒரே நிறம்
படிந்தவற்றை வாரிவாரி இறைக்கும் காற்று
நடுங்கும் குளிரில் நிமிர்ந்த மரங்கள்
கிளைவிட்டு கிளை மாறும் ஓரிரு பறவைகள்
இயற்கையின் பகல்காட்சி இனிதே ஆரம்பம்

1 comment:

  1. மென்மையான சொற்கள்
    சிக்கென வார்த்தைபிரயோகம்
    வரிக்குவரி அழகான சொல்லடைவு
    வசனகவிதை மனதுக்கு ரொம்பவும்
    இதம் தரும் வகையில் அமைந்து
    புத்தாண்டின் தொடக்கத்தில்
    நம்பிக்கையூட்டும் சொற்கோவை
    நாகுவுக்கும் வாசுவுக்கும் மனம் திறந்த பாராட்டுகள் - மு.கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!