தமிழ்
எண்களை disguised form'ல வேற மாதிரி எழுதி
தலைப்பு தந்திருக்கிறேன்.... But ஏன் பழைய பஞ்சாங்கம்'னு கேக்கிறீங்க இல்லையா...இந்த முறை
முன்னொரு காலத்துல என்னோட blog'ல எழுதின ஒரு series... அத இங்க கொஞ்சம் தமிழ் சங்க
audience'காக update பண்ணி எழுதி இருக்கேன்... மேலே படிக்கவும்...இது சாம்பு'னு சொல்லப்படற
ஒரு அதிபுத்திசாலியோட நேர்காணல்கள்...சாம்புவ ஒருத்தர் பேட்டி காண்கிறார்...Q&A
session மாதிரி'னு சொல்லலாம்... ஒருத்தர் சாம்புவ கேள்வி கேக்கறார்...அதுக்கு அவர் என்ன பதில்
சொல்றார்ங்கற மாதிரி அமைச்சு எழுதினது...satire'னு கூட வச்சுக்கலாம்..
சாம்புவும்
ஒருத்தனும்
ஒரு
மாலை இள வெயில் நேரம் கடலோரமா வேர்கடலைய சாப்டுண்டே நடந்துண்ட்ருந்தார் நம்ம சாம்பு.
அப்போ அந்த பக்கமா போன ஒரு ஆள் ஒரு நிமிஷம் இவர பாத்து நின்னுட்டு...
(கேள்வி): "உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"னு சொன்னான்.
நம்ப
சாம்புவும் தலை ஆட்டினார்.
முட்டாள்தனமாய் பேசுபவர்கள்...என்ன பேசுகிறோம் என்று புரியாமல் உளறுபவர்கள்..
தனக்கு துளி கூட தெரியாத ஒரு விஷயத்தை பற்றி அபரிவிதமான தன்னம்பிக்கையுடன் வாதாடுபவர்கள்...எவனோ எங்கேயோ சொன்னதை தன் சொந்த கண்டுப்பிடிப்பு போல் காண்பித்து பிதற்றுபவர்கள்...சிரிக்க வைப்பதாக எண்ணி மொக்கை வம்படிப்பவர்கள்...
சுய புகழ்ச்சியே மையப் புள்ளியாகக் கொண்டு சுற்றி சுற்றி பேசுபவர்கள்...
சம்பந்ததாசம்பந்தம் இல்லாமல் வாயடிப்பவர்கள்...
இது போன்றவர்கள் இந்த உலகில்
உண்டா? னு சாம்பு கிட்ட அந்த ஒருத்தன் கேட்டான்.
அதுக்கு சாம்பு சொன்னார்.
"அடேய் முட்டாளே...போய் 'என்ன_பெயர்வேன்னா_வைக்கலாம்.blogspot.com' மயும் 'உலகத்தின்_கடைசி_ப்லாக்.wordpress.com' மயும், ‘www.Facebook.com’ மயும் பாருடா...தெரியும்...".
(கேள்வி): Sir, கவிதை எழுதி கொல்லும்
மக்களை பற்றி தங்கள் கருத்து என்ன?
சாம்பு : அட! அதை ஏன்யா கேக்கற?...இப்படி தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்..."நானும் எழுதுவேன்"னு ஒரு தலைப்பில எழுதினான்...
காவன்னாவில் கவிதை எழுதச் சொல்லி
கண்மணி நீ கட்டளை இட்டாய்.
கேள்வியாய் ஏன் காவன்னா? என்றால்
கவிதா என் பெயர் என்றாய்.
கண்கள் இரண்டால் நீ பார்த்தால்
கடற்கறை செல்ல ஆவல் பெருகுதடி.
கால் கடுக்க நடந்த பின்னும்
கால் கிலொ கூட குறையலடி
படிச்சப்றம் தான் தெரிஞ்சுது தமிழ் இலக்கணத்துல இந்த மாதிரி கவிதை எழுதுதரவனுக்கு பிடித்தது எதுகையும், மோனையும் மட்டும் தான் போலருக்கு'னு...
(கேள்வி): Sir,வெளி
நாட்டு வாழ் இந்தியர்களை பாத்தா உங்களுக்கு என்ன கேக்கத்தோணும்?
சாம்பு
: பெட்டி படுக்கய கட்டி வந்த வழியே எப்போ திரும்ப போறீங்கன்னு தான்...
"Declaration
of Independence"அ கண்ணுல தண்ணி வச்சுண்டு பாக்கும் இந்த பிறவிகள், அவனோட
சுதந்திர தினத்துக்கு "ஜன கன மன" பாட மறந்துடரானாம். சொல்லி நிறைய கவலை
படறான் எனக்கு தெரிஞ்ச Vandalur Viswanathan...இப்போ இருக்கறது Wisconsin'ல...
சரி
திரும்ப போயேன்டா உன்ன யாரு தடுக்கறானாக்கா.. 'போறத்த பத்தி இல்ல
Sir...கொழந்தைகளுக்கு ஒத்து வரல...ஊரோட ஒத்து போற stigma இருக்கு..அதனால நாங்க போக
முடியல'னான்.
ஆனா நிஜமென்ன தெரியுமோ...நம்ம ஊருக்கு போய் பணத்த லட்சத்துல செலவு பண்ணி பத்மா சேஷாத்ரி-ல போடறத்துக்கு
பதில்..அந்த பணத்த ஒரு state of art Garden-ல
invest பண்ணினா...வந்து போர guests கணேசனும், செல்வியும் நிறைய பாராடடுவளோன்னோ' அதான்.
(கேள்வி): உலக தலைவர்களெல்லாம்
இப்பொ எந்த ப்ரச்சனைய resolve பண்ணறதுல கவனம் செலுத்தனம்? 100 நாட்கள்ல மோடி எத செய்யல…என்ன
செஞ்சிருக்கனம்'னு நீங்க நினைக்கிறீங்க?
சாம்பு
: What I want them to do is to empower the women in the country, to unleash the
power of these women, I mean we talk about being a superpower...
(கேள்வி): Let me be
very specific Mr.Sambu. What should the
world leaders do to resolve the current issues?
சாம்பு
: I think women are the backbone of any country and women need to be empowered.
(கேள்வி): இது முடியாத தொடர்
கதை Sir. கடைசியா உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யாருனு சொன்னீங்கன்ன...
சாம்பு
: இத நான் சொல்றதுனாலே உலகில் வன்முறை ஒழியும்-னா சொல்லுங்க... இல்ல ebola'வுக்கு
vaccine கிடைக்கும்னா...சொல்லுங்க...
சொல்றேன்...
(கேள்வி): ?@$#?!!!!?? ?@$#?!!!!??
மீண்டும்
சாம்புவுடன் சந்திக்கிறேன். நன்றி. வண்க்கம்.
-vgr
இந்த பதிவில் வரும் கதாப்பாத்திரங்கள், நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே. எந்த ஒரு தனிபட்ட நபரையும் குறிப்பிட வாய்ப்பில்லை. ஒரு ஒட்டு மொத்த சமுதாயமுமே இதற்க்கு பொருந்தும். இது யார் மனதயும் புண் படுத்தும் நோக்கத்தில் எழுத பட்டதல்ல. அடையும் மீறி உங்கள் மனது புண்பட்டிருந்தால் am fundamentally basically sorry.
ReplyDeleteyours faithfully,
vgr
//எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்//
ReplyDeleteஎனக்கென்னவோ அந்த கவிதைகளின் படைப்பாளி நீங்கள்தான் என்று தோன்றுகிறது... :-)
அடா அடா அடா... நிச்சயமாக ரூம் போட்டு யோசித்து எழுதிய வரிகள்...
சாம்பு பெரிய ஆளா இருப்பார் போல இருக்கு. என்ன ஒரு ரேஞ்ச் of tipics கும் பதில் சொல்றார்...
ஹலோ VGR,
ReplyDeleteவந்தோரை வரவேற்கும் பண்பாடு தமிழ் பண்பாடு. தங்களின் மறு வருகைக்கு நன்றி.
உங்களின் பதிவை பார்த்ததும் அந்த 7 நாட்கள் பாட்டு "எண்ணி இருந்தது ஈடேற " பாட்டைத் தான் பாடினேன்,
முதல் வரியை பார்த்தவுடன் கஜினி பாட்டு தான் நினைவுக்கு வந்தது. நீங்கள் சூர்யாவின் விசிறியோ.
எனக்கும் உங்களுக்கும் கொஞ்சம் ஒற்றுமை உண்டு. எனக்கும் சூரியாவை பிடிக்கும்.
எனக்கும் துப்பறியும் சாம்புவை ரொம்ப புடிக்கும். உங்களுக்கு பழைய பஞ்சாங்கம் சாம்புவை பிடித்துள்ளது .
அதனால் தான் ரொம்ப வித்தியாசமான கேள்விகளுக்கும், அட்டகாசமான பதில் கொடுத்திற்கிறார் .
கவிதையில் நிறைய வகை உண்டு. இலக்கணக் கவிதைக்கு தான் யாப்பிலக்கணம் தேவை.
அனால் நம்ம வைரமுத்து தான் புது கவிதையும் கவிதையாக வேண்டும் என்று ஒரு கருத்து சுதந்திரத்தை
முன் வைத்தார். அதற்க்கு எந்த ஒரு இலக்கணமும் தேவை இல்ல. ஆனாலும் உங்கள் கவிதை நன்றாகத் தன் உள்ளது.
(நீ )கண்கள் இரண்டால் பார்த்தால் ( இதுவும் சுப்ரமணியபுரம் வரிகள் தான்)
(உன்னுடன் )கடற்கரை செல்ல ஆவல் பெருகுதடி
நன்றாகத் தான் இருக்கிறது உங்கள் கற்பனை. உங்களின் கவிதையில் எதுகை மோனை கூட காணோம் (மிஸ்ஸிங்)
உங்கள் வண்டலூர் விஸ்வநாதன் (V V ) ஒரு தேசப் பற்று உள்ளவர் போல் இருக்கிறது.
நீங்கள் சொன்ன மாதிரி பத்மா சேஷாத்ரியிடம் போட்டால் தப்பு தான். ஆனால் பத்மா சேஷலயாவில் போட்டால் தப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது.
பெண்கள் புரியாத புதிர் என்பதால் உங்கள் கேள்வி பதிலும் புரியாத ஆங்கிலத்தில் மாறியதோ?
உங்கள் சாம்பு தான் சொல்லிட்டாரே, சூர்யாவை தான் புடிக்கும்ன்னு. அப்புறம் எதற்கு எந்த நடிகரைப் புடிக்கும் என்ற கேள்வி.
மொத்தத்தில் உங்கள் பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி.
சுரூக்கமா சொன்னால், மணல் கயிறில் சொல்லுவது போல் எனக்கு கொஞ்சம் காது கேக் காது . ஆனால நீங்கள் ரொம்ப கோபமாக உள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது.நீங்கள் சொல்வது ஒன்றும் கேட்க வில்லை.
ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு. அதனால் கோபப் படாதீர்கள்.
பஞ்சாங்கம் ஒரு கணிதம். அதில் பழையது மட்டுமே இருக்கும். ஆனால துல்லியமாக இருக்கும்.
ஆமாம், அந்த ஒருத்தன் யாரு. சரியான அரை வேக்காடு ஆக இருப்பான் போல. கேள்விகள் எல்லாம் ரொம்ப வித்தியாசமா கேட்குறான்.
அதனால் இதற்க்கு அரை வேக்காடு என்று தலைப்பு மிகப் போருத்த்தமாக இருக்கும்.
வேதாந்தி
ReplyDeleteஅன்பார்ந்த vgr
சாம்பு மிகவும் பொறுமைசாலி முட்டாள் கேட்ட கேள்விகளுக்கு புத்திசாலியாய் பதில்
சொல்லயிருக்கிறார் , கேள்வியும் நீங்கள் பதிலும் நீங்கள் என்றால் நீங்கள் யார் என்று
நான் ஏன் சொல்லவேண்டும் . ஏன் எனில் நான் ஒரு புத்திசாலி --
ரங்கமணி
சென்னை
தமிழ்நாடு
Thanks நாகு Sir. சாம்பு ஒரு self-proclaimed கவிஞன்.
ReplyDeleteவணக்கம் வேதாந்தி. நன்றி. சூர்யா வா? நான் எப்பொ சொன்னேன். இல்ல சாம்பு தான் எப்போ சொன்னார்?
ரங்கமணி Sir. "அசையும் பொருளில் இசையும் நானே. ஆடும் கலையில் நாயகன் நானே."
கொஞ்ச நாளா மறந்திருந்த ராகுல் காந்தியை நியாபக படுத்தி சிரிக்க வச்சதுக்கு Thanks. சாம்பு is hilarious.
ReplyDelete