Saturday, September 13, 2014

என்னமோ நடக்குது?

சமீபத்துல ஊர்ல நாட்ல கேக்கர இல்லைன்னா நான் பார்க்கர விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் ஏறு மாறாத்தான் இருக்கு.  உங்க எல்லோருக்குமே அப்படியான்னு தெரியலை.  அதனால கொஞ்சம் இங்க வந்து சொல்லிப் பார்ப்போமேன்னு ஒரு முயற்சி.

சங்கர்ராமன் கொலைவழக்கு
இந்த விவகாரம் பலப் பல வருஷங்கள் இழுத்து கிட்டு போய் கடைசியா குத்தம் சாற்றப் பட்ட 'எல்லோரும்' விடுவிக்கப் பட்ட பின்னாடி, மேல் முறையீடு வரும்னு சொல்லப்பட்டது.  இப்போஇந்த கேஸ்ல மேல் முறையீடு இல்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கரதா தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறதுன்னு செய்தி போட்டிருக்காங்க.  இந்த கேஸ்ல தீர்ப்பு வந்ததும் பலர் சொல்ல ஆரம்பிச்சது, சங்கர்ராமனை ஆள் வெச்சு காஞ்சி ஆச்சார்யர்கள் கொலை செய்யலைன்னா அவரை அவரே ஆள் வெச்சு தற்கொலை செஞ்சுகிட்டாரா, இல்லை தானே ஒரு நாலு அரிவாளை எடுத்து வெட்டிகிட்டு செத்து போயிட்டாரான்னு கேள்வி கேட்டிருந்தாங்க.  அவங்க எல்லோரும் திருப்பி அதே உலக மகா அறிவுப் பூர்வமான கேள்வியை கேக்க ஆரம்பிச்சிருக்காங்க.  தமிழ்நாட்டுல உணர்ச்சி வசப்படாம யாரும் எதுவும் செய்யரதோ இல்லை  பேசரதோ இல்லை.  ஆனா இப்படிப் பட்ட கேள்விகள் உணர்ச்சி வசப்படுதல்ல உச்ச கட்டம்ன்னு நினைக்கரேன்.  ஒரு கொலை நடக்குது, கொலைக்கு முக்கிய குற்றவாளிகள்ன்னு சந்தேகத்தின் அடிப்படையில சிலரை கைது செய்யராங்க, சந்தர்ப்பமும், சாட்சியங்களும் வெச்சு அவங்க குற்றவாளிகள் இல்லைன்னு தீர்ப்பு வந்த உடனே சரியான குற்றவாளிகள் யாருன்னு யோசிக்காம, எப்படியாவது குற்றம் சாட்டப் பட்டவங்களுக்கு ஏதாவது தண்டனை தரனும்னு யோசிச்சா அதை என்ன சொல்றது.  இந்திய தண்டனைச் சட்டம் சொல்வது (நிஜமான வக்கீல்கள் யாராவது இந்தப் பதிவைப் படிக்கவேண்டிய கஷ்டம் வந்தா இது சரியா இல்லை தப்பான்னு சொல்லலாம்), ஒரு குற்றவாளி குற்றம் செய்திருக்கிறார் என்பது சந்தேகத்து இடமில்லாமல் தெளிவாக்கப் படவேண்டும்ன்னு, நாம எல்லாம் தீர்ப்பு வரதுக்கு முன்னாடியே தீர்ப்பு எழுதர ஆசாமிகள்.  அவர் அரெஸ்ட் ஆனவுடனே அவர்தான் குற்றவாளின்னு தீர்ப்பு எழுதிட்டோம், இப்போ அப்படி இல்லைன்னு கோர்ட் சொன்னதும் ஒத்துக்க முடியலை.  ஆனா இதே விஷயம் அரசியல்வாதிகிட்ட சொல்லுபடியாகாது.

சங்கர்ராமன் தானே தன் கழுத்தை அறுத்து கிட்டு செத்தார்ன்னு கோர்ட் சொல்லலை, அவரை காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆள்வெச்சு கொலை செஞ்சாங்கன்னு சொல்லப்பட்டது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப் படலைன்னுதான் சொல்லியிருக்கு.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு
ஒரு அரசியல் தலைவர் வரம்புக்கு மீறி சொத்து குவிச்சு வெச்சிருக்காருன்னு ஒரு கேஸ், அது ஒரு 19 வருஷமா நடக்குது, இதுல எது சரி, யார் சரி, எது தப்பு, யார் தப்புன்னு யாருக்கு தெரியும்னு எனக்கு தெரியலை.  20 கேஸ் போட்டு, 19 கேஸ்ல ஜெ நிரபராதின்னு வெளில வந்துட்டாங்க.  ஒரே ஒரு கேஸ்ல அதாவது இந்த சொத்து குவிப்பு கேஸ்ல மட்டும் இன்னும் வெளில வரலை.  இதுல ஒரு விஷேஷம் என்னன்னா இவங்க வெளில வந்த 19 கேஸ்ல பெரிவாரியான கேஸ்களோட தீர்ப்பு வந்த போது ஆட்சியில இருந்தது தி.மு.க.  அதனால இவங்க தன்னோட பவரை யூஸ் பண்ணி வெளில வந்துட்டாங்கன்னு சொல்ல முடியலை.  இப்போ என்ன நடக்கும்ங்கரது 20ம் தேதி தெரிஞ்சுடும்.


நித்தியானந்தா
சில வருஷங்களுக்கு முன்னாடி நான் டெல்லியில வேலை செய்திட்டு இருந்த போது ஒரு சாமியாரைப் பத்தி சொல்லும் போது என்னோட நண்பர் அந்த சாமியாரை 'ஜில்காட்' சாமியார்ன்னு சொல்வார்.  அதோட அர்த்தம் தெரிஞ்ச போது சிரிப்பா இருந்தது.  அதனோட ரியல் அர்த்தத்துக்கு சரியான சாமியார் இந்த நித்தி.  இதுக்கு மேல இவரப்பத்தி நான் எழுத எனக்கு கேவலமா இருக்கு அதனால அதைப் பத்தி நீங்களே பத்திரிகைகள்ல படிச்சுக்கங்க.

கத்தி படம்
படம் என்ன படம், கதை என்ன கதை, இதெல்லாம் யாருக்கு தெரியும்னு தெரியலை ஆனா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கள்ல ஒருத்தர் இலங்கை அதிபரோட தொடர்புடையவர் அதனால இந்தப் படத்தை தமிழ்நாட்டுல வெளியிடக் கூடாதுன்னு முடக்கி வெச்சிருக்காங்க.  தமிழ் படத்தை தயாரிக்கரவர் இன்னரோட தொடபுடையவரா இருக்கக் கூடாதுன்னு எந்த சட்டத்துல இருக்குன்னு தெரியலை, ஆனா, தமிழ்நாட்டுல தமிழ் தமிழ்னு வெத்துக்கு கத்தி அரசியல் பண்ணும் ஒரு கட்சி (தி.மு.க ந்னு நான் வெளிப்படையா சொல்ல மாட்டேன்)யில பெரிய போஸ்ட இருக்கரவரோட அண்ணன் (கலாநிதி ந்னும் நான் சொல்ல மாட்டேன்) தமிழ்நாட்டுல தொலைக்காட்சி சானல்கள் வெச்சு கோடிக்கோடிக்கோடியா சம்பாதிச்சுட்டு ஒரு விமான சேவையை துவக்கி இலங்கைக்கு விமானம் விடலாம், இலங்கை கிரிக்கெட் வீரர்களை வெச்சு ஒரு டீம் வாங்கி IPL ல கிரிக்கேட் விளையாடலாம் ஆனா இலங்கைல அதிபரோட தொடர்பில இருக்கரவங்க யாரும் படம் தயாரிக்கக் கூடாது.  என்ன கூத்து இதுன்னு தெரியலை.

பாபநாசம்
கமல் மலையாளத்துல மோகன்லால் நடிச்சு வந்த த்ரிஷ்யம் படத்தோட தமிழ் பதிப்பான பாபநாசத்துல நடிக்கரதுக்கு நெத்தில விபூதி பூசி நடிக்கரது தப்பு, அதே கெட்டப்போட ஒரு மடாதிபதியைப் பார்த்தது தப்பு.  காரணம் அவர், தான் ஒரு நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு வாதின்னு அவரே பல பேட்டிகள்ல உளறி கொட்டினதுனாலன்னாலும் அவர் நெத்தில விபூதி வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்றது கொஞ்சம் அழிச்சாட்டியம்தான்.  பகுத்தறிவு பகுத்தறிவுன்னு ஜல்லியடிக்கும் ஒரு கூட்டம் (திமுக) தன்னோட மனைவி, துணைவி, இணைவிகளோட கோவிலுக்கு போகலாம், நெத்தி நிறைய குங்குமம் வெச்சுக்கலாம், தேர்தல்ல ஜெயிக்கனும்னு சிறப்பு ஆராதனை செய்யலாம் ஆனா விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து மட்டும் சொல்லக்கூடாது.  இது சரியான்னு யாரும் கேக்கக்கூடாது.

இப்போ கமல் சொன்னது ஏன் உளறிக் கொட்டினதுன்னு சொல்லிட்டேன்னா பின்னூட்டத்துல யாரும் திட்ட மாட்டாங்க.

ஒரு இண்டர்வ்யூல (கார்டூனிஸ்ட் மதன்) அவரே சொன்னது, எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, நான் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் இருப்பவன், நான் ஒரு அக்மார்க் நாஸ்திகவாதி.  இது தப்புன்னு எங்க குடும்பத்துல இருக்கரவங்க எல்லோரும் சொல்லும் போது நான் சொல்றது இதுதான், கடவுள்ங்கரது ஒரு க்ருபா சமுத்ரம்ன்னு சொல்றாங்க அப்படி அவர் க்ருபா சமுத்திரம்னா என்னை ஒன்னும் செய்யாம இப்படியே ஏத்துக்கட்டுமேன்னார்.  ஆக இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனா அப்படி இருக்கரதுனால எந்த ப்ரச்சனையும் வராம இருக்க அதே க்ருபா சமுத்திரம் காப்பாற்றட்டும்னு வேண்டிக்கரார்.  இது உளறல் இல்லைன்னா என்னன்னு யாராவது சொல்லுங்க.

முரளி இராமச்சந்திரன்.

2 comments:

 1. செய்திகளுக்கு நன்றி முரளி!

  சாமியாரில் ஆரம்பித்து, அரசியல் தொட்டு, சினிமா
  பற்றிய ஒரு ஜனரஞ்சகமான பதிவு.

  கமலையும் நாத்திகத்தையும் விடமாட்டீர்களே?! :)

  நன்றி!!!

  ReplyDelete
 2. முரளி,

  உங்களை மாதிர்யே எனக்கும் நிறைய கேள்விகள் உண்டு.
  ஜெயாவின் சொத்து வழக்கு மாதிரி, ஒரு வீடியோ கடை வச்சு மதுரையிலே நிறைய சொத்து வச்சு இருக்காரு.
  அது எப்படி?

  RTI ல கூட யாரும் கேட்க மாட்டாங்களா.

  கொலை கேசுல பதிவான , சல்மான்கான் எப்படி பிரதமரை சுலபமா சந்திக்கலாம்?
  நடிகர்களுக்கு, விளையாட்டு வீரனுக்கு கிடைக்கும் அந்தஸ்து ஒரு படித்த சாதனையாளனுக்கு கிடைப்பதில்லை.
  பணம் சம்பாதித்தவன் தான் சாதனையாளனாக கருதப் படுகிறான் .

  தமிழ் படத் தலைப்பிற்கு வரி விலக்கு அறிவித்தவர், தமிழ் அறிஞனுக்கு ஒரு பரிசும் தர வில்லையே.
  அட ஒரு தமிழ் துறைக்கு ஒரு மந்திரி என்று கூட சிந்திக்க வில்லையே.
  பின் எப்படி தமிழ் வளரும்.

  ஆர்னால்டை சந்திக்க போட்டி. அயல் நாட்டவனை சந்திக்க போட்டி.
  ஆனால தமிழனை மட்டும் நசுக்கவும் மிதிக்கவும் தான் போட்டி.

  இன்னும் சில வருடங்களில் நதியும், ஏரியும் காணமல் போய் விடும்.
  அதுக்கு ஒரு வழியும் காணோம்.
  கங்கையை சுத்தம் செய்வதில் பகுதி பட்ஜெட் தான் நதி இணைப்பு.
  அது முடிந்தால் அணைக் கட்டு பிரச்னையே வராது.

  மவுலி வாக்கம் என்னாச்சு.
  நித்தியின் பரிசோதனை என்ன ஆச்சு.

  வேதாந்தி


  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!