Tuesday, July 31, 2012

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு அராஜகம்

'சோ' வை நிறைய பேருக்கு புடிக்காது, எவ்வளவு கேவலமா திட்டனுமோ திட்டுவாங்க, போன வார துக்ளக்ல ஒரு கேள்வி பதிலுக்கு அவரோட பதிலைப் படிங்க அது எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருக்குன்னு தெரியும்.

கே: ‘பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்வார்’ என்று ப. சிதம்பரம் கூறியுள்ளாரே? 

ப: ஒரு குறிப்பிட்ட அமைச்சரை, வேட்டி கட்டுபவரை, தென்னகத்திலிருந்து வருபவரை, நிதியமைச்சராக இப்போது நியமித்தால், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், அந்த நியமனம் உதவும். அதுதான் சரியான நடவடிக்கை. அதைப் பிரதமர் எடுப்பார் - என்று சிதம்பரம் நம்புகிறார். அது நடக்கிறதா, பார்ப்போம். 


நேத்திக்கு ப.சிதம்பரத்தை மறுபடி நிதி அமைச்சரா நியமிச்சுட்டதா தகவல்.


எவ்வளவுதான் அரசியலைப் பத்தி எதுவும் எழுதாதேன்னு ஆளாளுக்கு மதிச்சும்,  சில சமயம் மிதிச்சும் சொன்னாலும், எதோட வாலையோ நிமிர்த்த முடியாதுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி தான் இதுவும்.  கவுண்ட மணி சொல்ற மாதிரி "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா".


முரளி.

3 comments:

  1. முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும். ரகுவரன் நிதியமைச்சரை கேட்பார் - யோவ், ஒரு நாளுக்கு எவ்வளவுய்யா வருமானம்?

    நிதியமைச்சர்: நாட்டுக்கா, கட்சிக்கா, தலைவரே?

    அதுமாதிரி, யாருடைய பொருளாதார வளர்ச்சின்னு ப.சி. சொல்லலையே?

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான கேள்வி பதில்களை
    அடுத்து அடுத்துக் கொடுத்து
    சுவாரஸ்யம் கூட்டியதுசிறப்பாக இருந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சோ வைத்திருக்கும் தொடர்புகள் அளவில் அவருக்கு மத்திய அரசின் முடிவுகள் இத்திசையில் இருக்கும் என்பதை அனுமானிக்க முடியும் என்று நினைக்கிறேன்.


    சிதம்பரத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இந்த மறு நியமனம் வியக்க வைக்கிறது..

    இந்த வர்ட் வெரிபிகேஷனை நீக்கினால் இன்னும் பலர் உங்கள் தளத்தில் கமெண்ட'க் கூடும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!