Friday, July 06, 2012

ஜீவன் முக்தி


"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியோம் பராபரமே"
                                                              - தாயுமானவர்

ஒரு கோடீஸ்வரர் பழ மரங்கள் வைத்தார்.  ஏழைகள் ஃப்ரீயா சாப்பிடட்டும்னு.  கொய்யாப்பழம், மாம்பழம், பலாப்பலம், வாழைப்பழம், திராட்சைப்பழம், மாதுளம்பழம். இந்தப் பழங்களை யார் வேண்டுமானாலும் அருந்தலாம்.  இலவசம் !

நாளாக நாளாக இந்த உண்மையை மக்கள் உணரவில்லை.  உண்மைக்கு மாறாகப் பேசுவது சிலருடைய வழக்கம்.  'உள்ளே பேய் பிசாசு இருக்குதுடா'ன்னான் ஒருத்தன்.  கருப்பா ஒன்னு உலாத்துதுடான்னான்.  அந்தப் பக்கமே போறதில்லை.  கடைசியில் ஒரு துணிந்த ஆளு, 'என்ன இருக்கிறது பார்க்கலாம்' என்று பாதி மதில் மேல ஏறினான்.  வழுக்கி விழுந்துட்டான்.  யாரோ புடிச்சு தள்ளுறாங்கன்னான்.

முக்கால் பாகம் ஏறி வழுக்கி விழுந்தார்கள் சிலர்.  முக்காலே மூனு வீசம் ஏறி வழுக்கி விழுந்தார்கள் சிலர்.  ஒருவர் முழுவதும் ஏறிவிட்டார்.  உள்ளே, பெரிய பெரிய பலாப்பழம் வெடிச்சு மஞ்சளா.  இவ்வளவு பெரிய மாதுளம் பழம், ராஜா வாழை, செவ்வாழை, ஆரஞ்சுப் பழம் உதிர்ந்திருக்கு.  அநேகம் பேர் உண்ணுகிறார்கள்.  இவர் மதில் மேல இருந்த படியே, 'அண்ணா, என்ன விலை?'ன்னார்.  'இல்ல இலவசம்'.  உள்ளே குதிச்சுட்டார்.  இந்த உண்மை தெரியாது போச்சேனு பழமா சாப்பிடறார்.

அப்புறம் ஒருவர் மதில் மேல ஏறினார்.  'என்ன விலை'ன்னார்.  'ஒரு புண்ணியவான் இலவசமா வச்சது'.  உள்ளே குதிச்சுட்டார்.  இறுதியில் ஒருவர் ஏறினார்.  'ஐயா, இது விலையா?'ன்னார்.  'இல்ல இல்ல இலவசம்'.  ரெண்டு பழம் சாப்பிட்டார்.  தித்திப்பா இருந்தது.  வெளியே குதிச்சார்.  உள்ளே குதிக்கலை.  'ஐயா வாருங்கள், ஏக உருவாய் கிடக்குது ஐயோ.  சிவானந்த போகமென்னும் பேரின்பம் ...' தாயுமானார் அழைக்கிறார்.  ஏன் அழைக்கின்றேன்.  காகம் கறைந்து உண்ணக் கண்டீர்.  காக்கைக்கு இருக்கிற நல்ல குணம் எனக்கில்லையா?'  கா கா என்று அழைத்து தன் இனத்தை ஒறுங்கு சேர்த்து உண்ணுவதில்லையா.

'காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்; அகண்டாகார சிவ போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜகத்தீரே !'

கொள்வாரற்றுக் கிடக்கிறது.  மதில் மேல ஏறி உள்ளே குதித்தவர்கள் எல்லாம் ஜீவன் முக்தர்கள்.  வெளியில் குதித்தவர் அவதார புருஷர்.  ஜீவன் முக்தர்கள் தான் தானே அருள் பெற்றவர்கள்.  அவதார புருஷர்களை நமக்காக இறைவன் அனுப்பினார்.

சுவாரஸ்யமான இக்கருத்துக்கள் வாரியார் அவர்களுடையது.  இன்றைக்கு நித்தி போன்ற போலிகளின் கையில் ஞானசம்பந்தர் தோற்றுவித்த மடமும், ஜீவன் முக்தியும், இதை நம்பி அவரிடம் சென்ற அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணும்.  என்ன கொடுமை சார் ....



1 comment:

  1. சதங்கா,
    உங்க ஆதங்கம் பளிச்சுன்னு தெரியரமாதிரி ஒரு அருமையான பதிவு. சமீபத்துல ஒரு ஆணும் நித்தியின் மேல குற்றச்சாட்டு அமெரிக்காவுல பதிவு பண்ணியிருக்கார். இன்னமும் நித்தியை நம்பிக்கிட்டு பல பேர் இருக்கரதா என் நண்பர் ஒருத்தர் அடிச்சு சொல்றார். அப்படி இருக்கரவங்களுக்கும் ரஜனி, விஜய், அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணி, கிடா வெட்டி, மொட்டை போடர ஜனங்களுக்கும் என்ன வித்தியாசம்.

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!