காஸ்ட்கோவில் போனவாரம் ஒரு சிறிய உரையாடல்:
ரவி திருவேங்கடத்தான்: "ஹேய் முரளி, என்னப்பா அலாஸ்காலாம் போயிட்டு வந்தாச்சா, இல்லை இனிமேதான் போகப் போறியா?"
நான்: "போயிட்டு வந்தாச்சுப்பா, ஏன் என்ன திடீர்ன்னு கேக்கர?"
ரவி: "என்னமோ இதோ அடுத்த வாரம் அதப் பத்தி எழுதப் போறேன்னு சொன்னியே, அப்படி சொல்லி 7-8 வாரம் ஓடி போச்சே, அதான் கேட்டேன். ஒரு சின்ன தடயம் கதையே 5-6 வருஷமா நம்ம ப்ளாகுல ஓடுது, இது என்ன ஜுஜுபி."
நான்: "இருப்பா ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, அதுக்குள்ள இப்படி பப்ளிக்கா மானத்தை வாங்காதே.."
ரவி: "உங்க ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை ஜாஸ்தியா, யார் கிட்ட காது குத்தரே, என் தம்பியும் அங்கதான் வேலை செய்யரான். இந்த சம்மர் லீவுல பாதி பேர் வேலைக்கே வரப்போரதில்லை. ஹூம் நீயும் நல்லா கதை விடர, நானும் நம்பறமாதிரி கேட்டுக்கரேன். "
நான்: "யப்பா இன்னும் ஒரு வாரத்துல ஆரம்பிச்சுடரேன். போதுமா?"
ரவி: "தடயம் கதை மாதிரி, ஆரம்பிச்சா மட்டும் போதாது ஒழுங்கா முடிக்கனும்."
ரவி அடுத்த விஷயம் பேச ஆரம்பிக்கரதுக்குள்ள வுடு ஜூட்.
பூர்வாங்க வேலைகளை பத்தி ரொம்ப சொல்லாம, டைரக்ட்டா அலாஸ்கா டிரிப் பத்தி சொன்னா க்விண்டின் டராண்டினோ படம் மாதிரி இருக்கும் அதனால ரவியோட நடந்த ஒரு சின்ன பேச்சை மொதல்ல போட்டுட்டேன், இப்ப மெயின் கதைக்கு வருவோம்.
அலாஸ்கா க்ரூய்ஸ் டிரிப் போகலாம்னு மொதல்ல ஒரு பிட்டை போன வருஷம் ஆகஸ்ட்-செப்டம்பர்ல போட்டது, என் வீட்டுக்காரம்மாவோட அம்மாவோட அக்காவோட ரெண்டாவது பையன்(அதாவது மாலதியோட கசின், சுருக்காமா சொன்னா சுவாரசியமா இருக்காதுன்னு கொஞ்சம் இளுத்து புடுச்சு எளுதிட்டேன்). அவன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன். வடிவேலு மாதிரி ஒரு பெரிய பிட்டை போட்டுட்டு, சும்மா இருந்த சங்கை நல்லா ஊதி விட்டு, அமெரிக்காவுல இந்தக் கோடியில எங்க வீடும், அடுத்த கோடி கலிஃபோர்னியாவுல ஒரு 7 வீட்டு மக்களும், சியாட்டில்ல ஒரு வீடும் சேர்ந்து பேசிப் பேசிப் பேசிப் பேசிப் (நிஜமாவே அவ்வளவு பேசியிருக்காங்க) பேசி ஒரு வழியா 44 பேர் சேர்ந்து க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினாங்க.
(நாகு: "என்னது முடிவு பண்ணினாங்கன்னு எழுதர அப்போ நீ முடிவு பண்ணலையா? "
நான்: "நானும் சேர்ந்து முடிவு பண்ணலா மா? சொல்லவே யில்லை!!!! அடுத்த வாரம் காஸ்ட்கோ போய் பால், தயிர் பர்ச்சேஸ் பண்ணும் போது நானே முடிவு பண்ணி ஒரு செட் சாக்ஸ் வாங்கிட்டு வரப்போறேன் அப்பதான் இவங்களுக்கு நம்ம பவர் என்னன்னு தெரியும், எப்ப்புடி?"
நாகு: "சூப்பர் இப்படியே இரு, வெளங்கிடும்.... " )
உடனே இருவர் குழுவை ஃபார்ம் பண்ணி அவங்க ரெண்டு பேர் மட்டும் காஸ்ட்கோ கிட்ட பேசி நல்லா திட்டம் போட்டு, தேவையான ரூமெல்லாம் புக் பண்ணி ஒரு வழியா புக்கிங் விஷயம் முடிச்சதும், எதிர்பாராத விதமா சில பேர் வரமுடியாத சூழ்நிலை உருவாகி, கடைசியா 18 பேர் மட்டும் க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினோம். இதுல காமெடி என்னன்னா, க்ரூய்ஸ் போகலாம்னு பிட்டை போட்ட மகானுபாவன் ஜகாவாங்கிட்டு, பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான், அவனை அப்பால பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். (வேற வழி).
காஸ்ட்கோ நல்லாவே டிரிப்பை மேனேஜ் பண்ணினாங்க. அப்பப்போ என்ன கேள்வி கேட்டாலும், டக்குன்னு பதில் சொல்லி, தேவையானதை தேவையான நேரத்துல செஞ்சு கொடுத்தாங்க. மொதல்ல புக் பண்ணும் போது ஒருத்தருக்கு 100$ ந்னு வாங்கிட்டு இந்த வருஷம் ஏப்ரல் மாசம் மொத வாரம் மொத்த பணத்தையும் கட்டினா போதும்னு சொல்லிட்டாங்க. இது ரொம்ப சவுகரியமா இருந்தது, மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சுட்டு அதை ஏப்ரல் மாசம் கட்டிட்டோம்.
க்ரூய்ஸ் ஸ்டார்ட் பண்றது சியாடில்லருந்து அதுக்கு நாலு பேருக்கு டிக்கெட் போட்டு அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணினா, ரிச்மண்ட் ஏர்போர்ட் போனதும் அதுக்கு ஒரு கேட்டை போட்டுடானுவ. எங்க டிரிப் ரிச்மண்ட் - சார்லேட் - சியாடில், அதுல ரிச்மண்ட் - சார்லேட் ஃப்ளைட் சார்லேட்லயிருந்து வரும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதுன்னு ப்ளைட் கிளம்பர டைமுக்கு 5 நிமிஷம் முன்னாடி சொன்னானுவ, சொல்லிட்டு, இங்க வாங்க நாங்க நாளைக்கு ஃப்ளைட்டுக்கு டிக்கெட் போட்டு கொடுக்கறோம்ன்னு சொல்லி ஒரு லைன் ஃபார்ம் பண்ண சொன்னாங்க. குடும்பமே கெளண்டர் முன்னாடி லைன்ல நின்னுகிட்டே மெதுவா ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல ஆரம்பிச்சோம். 5 நிமிஷம் கூட சொல்லியிருக்க மாட்டோம், நம்ம நாட்டுகாரர் ஒருத்தர் திடீர்ன்னு வந்து "நான் யு.எஸ் ஏர்வேஸ்லதான் வேலை செய்யரேன், வாங்க நான் ஏற்பாடு பண்றேன்" சொல்லி யார் யாரையோ பிடிச்சு 15 நிமிஷத்துல ஃபிலடெல்ஃபியா வழியா சியாட்டில் போக ஏற்பாடு செஞ்சு தந்தார். மஹா மந்திரத்துக்கு பலன் உண்டுன்னு மனப்பூர்வமா நம்பர ஆளுங்க நாங்க, ஆனா இப்படி சொன்ன 5 நிமிஷத்துல பலன் கை மேல கிடைச்சதும், ஏர்போர்ட்ல டான்ஸ் ஆடாத குறைதான். டிக்கெட் போட்டு கொடுத்ததும், அவருக்கு தாங்க்ஸ் சொன்னா, "முரளி என்னை தெரியலையா, நான் உன்னை நிறைய தடவை நம்ம கோவில்ல பாத்திருக்கேன். உனக்கு என்னை நியாபகம் இல்லை போல இருக்குன்னு" போற போக்குல ஹிந்தில அடிச்சு விட்டார்.
ஒருவழியா ஃபிலி வழியா சியாட்டில்ல மாலதியோட கஸின் (சிஸ்டர்) வீட்டுக்கு ராத்ரி 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம். காலைல 10:30 மணிக்கு கிளம்பி சியாட்டில் ஹார்பர் போய் நாங்க போக வேண்டிய நார்வேஜியன் க்ரூய்ஸ் கப்பல்ல ஏறினோம்.
மஹிமா இழுத்து பிடிச்சு கட்றாளே இந்த கப்பல்தான் அது. இந்தக் கப்பல மொத்தம் 14 மாடி அதுல 13, 14 மாடி கொஞ்சம் பெருந்தனக்காரங்களுக்காம், என்னைய மாதிரி ஏழை பாழைங்களுக்கு கிடையாதாம், சீசீ அலாஸ்கா குளிர்ல 14ம் மாடில போயி எவன் இருப்பான்னு நாங்களும் போகல.
ஆக, அலாஸ்கா கப்பல்ல ஏறியாச்சு. அடுத்து, அலாஸ்காவோட காபிடல் ஜுனு போன கதை அடுத்த பாகத்துல பாக்கலாம்.
முரளி இராமச்சந்திரன்.

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
நம்ம பதிவுல யாரும் எழுதறதில்ல. எனக்கு இப்பதான் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு. கப்பல்ல கால் அடி எடுத்து வைக்கரதுக்கே ஒரு பதிவுன்னா, கொஞ்சம் மெகா சீரியல் சைஸுக்கு போகும்னு நினைக்கிறேன். ஹைய்யா ஜாலி....
ReplyDeleteநீங்க முடிவெடுக்கற திறமையதான் நேத்து பேசினப்போ உங்க பொண்ணு வெளுத்து வாங்கினாளே? :-)
இந்த தடயம் தடயம்ன்றாங்களே எல்லாரும், அது என்ன மேட்டர்?