Friday, May 30, 2014

இரண்டாம் பதிவு

போன முறை 'Breaking Bad'...இந்த முறை செல்வராகவன் பட தலைப்பு மாதிரியே ஒரு தலைப்பு. ஒரு வழியா முதல் post'க்கு 10 காமென்ட் கிடைச்சதால (உங்களில் சில பேர் 'அதுல 5 நீ போட்டதாச்சே'னு நக்கீரர் மாதிரி பொருள் குற்றம் கண்டுப்பிடிக்கறது காதுல விழுது...) ஆனால் அதை கண்டுகாமல் வெற்றி வெற்றி என்று சொல்லி....இரண்டாவது பதிவு எழுத முடிவு பண்ணிருக்கேன். இந்த முறை என்ன எழுத போறேன் தெரியுமா? நானும் என் நண்பரும் காய்கறி வாங்க போன அந்த சம்பவம்...’அந்த நாள் உன் calendar'ல குறிச்சு வச்சுகோ'னு சொல்ற அளவுக்கு ஒரு முக்யமான கதைய சொன்ன நாள்.

ஸ்ரீமன் நாராயணின் மனைவியின் பெயர் வைத்து ரிச்மன்ட்'ல் காய்கறி வியாபாரத்தில் monopoly செய்து வந்த அந்த கடையின் vote'களை இரண்டாக பிரித்த சிவனின் மனைவி பெயர் கொண்ட அந்த கடை இருக்கே....அங்க தான் நடந்தது அந்த சம்பவம்.

நானும் என் நண்பரும் சனிக்கிழமை காத்தால கறிகாய் வாங்க போனோம். அப்போ நான் வழக்கம் போல எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினேன். ஆனா அந்த நண்பர் மட்டும் Indian eggplant, Thailand eggplant, Japanese eggplant, வெள்ளை eggplant, குண்டு eggplant அப்படினு ஒரே கத்திரிக்காயா மட்டுமா வாங்கி தள்ளினார். எனக்கு ஏன்னு கேக்கனம்'னு துரு துரு'னு இருந்தது...ஆனா கேக்ககல...பேசாம ரெண்டு பேரும் சாமான்களை வாங்கிட்டு வெளியில் வந்தோம்...

"ஏன் நான் வெரும் கத்திரிக்காய மட்டும் வாங்கினேன்'னு தானே யோசிக்கற...?" அப்படினு அவரே என்ன கேட்டார்.

"ஆமாம்...அதான் கேக்கனம்'னு நெனச்சேன்...ஏன் அப்படி?" - இது நான்.

கூக்கூ - கூக்கூ - முதல் மரியாதை - BGMமை play செய்து மேலே படிக்கவும்...

அது ஒரு அழகிய நிலா காலம்'னு நானும் எல்லா காய்கறிகளையும் சாபிட்டு தான் வளர்ந்திருக்கேன்...ஆனா என் மனைவி சமையல என்னிக்கி சாப்பிட ஆரம்பிச்சேனோ...அன்னிலேருந்து ஆரம்பிச்சுது என் கஷ்டம்...

'என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல...மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல....' சிவாஜி acting'ஐ மனதில் நினைவுருத்தி மேல நண்பர் சொன்னதை மீண்டும் படிக்கவும்...

என் வீட்டு அம்மாவுக்கு....கத்திரிகாய் மட்டும் தான் செய்ய தெரியுமாம்....ஒரு நாள் கத்திரிகாய் வத்த குழம்பு...மறு நாள் கத்திரிகாய் கறி....அன்னிக்கி சாயங்காலமே...கத்திரிகாய் போட்ட வாங்கி பாத்...

இப்படி எல்லாம் கத்திரிகாய் மயம்...புவி மேல் இயற்கையினாலே விளையும் எழில் வண்ணம்...எல்லாம் கத்திரிகாய் மயம்.... அப்படி'னு என் நண்பர் சொன்னப்போ அவரோட நிலமைய நெனச்சு எனக்கு கண்ணுல ஒரு சொட்டு தண்ணியே வந்தாச்சு...

ஏன் யா அப்படி உனக்கு மட்டும்....ஒரு நாள் கூட வேற காய்கறி போட்டு எதுவும் பண்ணதில்லையா? 'I mean not even on a single day?' அப்படி'னு மேஜர் சுந்தரராஜன் பாணி'ல நான் கேட்டேன்.

அதுக்கு என் நண்பர்...

ஒரு நாள் வீட்டுக்குள்ள நுழையும் போது சுட சுட சப்பாத்தி செய்யும் மணம் மூக்கை துளைச்சுது...உடனே அடடா ஏதோ புது ஐடெம் கற்றுக்கொண்டாள் நம்மவள்'னு ஆசையா உள்ள நுழைஞ்சேன்... வாங்க சாப்பிடலாம்'னு கூப்டு தட்டை கையில கொடுத்தா...அதுல 4 சப்பாத்தியும் பக்கத்துல ஏதோ reddish brown கலர்'ல தொகையல் மாதிரி paste போல இருந்துது....தப்பிச்சோம் டா சாமி'னு ஒரு வாய் எடுத்து வாயில வச்சேன்...

"பைங்கன் கா பர்தா" எப்படிங்க இருக்கு'னு என் வீட்டு நளபாகம் கேட்க...
"என்னது பைங்கன் ஓட பர்தாவா... நான் உன்னோட பர்த்தாவாச்சே மா...யார கேக்கற.." அப்படினேன்...
"அட அது இல்லங்க சப்பாத்திக்கு தொட்டுக்க...பைங்கன் கா பர்த்தா... நீங்க வாங்கிட்டு வந்த பெரிய கத்திரிகாய தவா'ல போட்டு சுட்டு பண்ணினேன்..."
என்னவோ புதுசா இருக்குனு ஆசையா வந்த எனக்கு 'என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே...என் கதயை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடி கொள்ளும்..."னு பாடற நிலமைக்கு கொண்டு போய் சாப்பிட திறந்த வாய மூடி விட்டுட்டா... வாரத்துல 7 நாள் இருக்கு...இவங்களுக்கு தெரிஞ்ச கத்திரிகாய் ஐடெம் 4 தான் இருக்கு....எப்படி vgr என்னால முடியும்....? இதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு...ஒன்னு இந்த ரிச்மன்ட்'ல இருக்கற ரெண்டு இந்தியா பஜாருக்கும் whole sale கத்திரிகாய் supply வராம கட்டுப் படுத்தனம்...இல்லைன...
'எடுறா அரிவாள வெட்டுறா அந்த கத்திரிகாய் கொடிய...'னு வன்முறைய கைல எடுக்க வேண்டியது தான்..

என்று நண்பர் சொல்லி முடித்தார்...

இப்போ நம்ம பொறுப்புள்ள community'யா அவருக்கு செய்ய வேண்டியது என்னனா...உங்களோட நல் கருத்துக்களை இந்த பிரச்சனைக்கு முடிவா சொல்றது தான்....

சொன்னால் ஒரு உத்தமனின் வாழ்வில் விளக்கேற்றிய பெருமை உங்களை சாரும்.

கூடிய விரைவில் சந்திப்போம்

-vgr

11 comments:

  1. விஜிஆர்,
    முதல்ல உங்க நண்பருக்கு ஒரு உதவி, கத்திரிக்காய் பஜ்ஜி நல்லா இருக்கும். அதை டிரை பண்ண சொல்லுங்க.

    முரளி

    ReplyDelete

  2. http://www.arusuvai.com/tamil/recipes/237

    சுமார் 100+ கத்தரிக்காய் சமையல் வகைகள் இந்த சுட்டில இருக்கு. எதோ என்னால முடிஞ்சது.

    ReplyDelete
  3. சிவனின் மனைவியா? கண்ணனின் மனைவிதானே? :-)

    கடை விஷயத்தில் சைவ, வைஷ்ணவ சண்டையை நுழைச்சது - அபாரம்.

    VGR - உங்க நண்பர் ஏதோ அபூர்வமான ஊர்ல வளர்ந்தவருன்னு நினைக்கிறேன். அந்த ஊர்ல கத்திரிக்காய் கொடியில வளருது...

    நல்ல தமாஷ். அக்பர் பீர்பால் கதைல கத்திரிக்காய் வரும். அதுதான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  4. முரளி, கண்டிப்பா பஜ்ஜி போட்டுடலாம்... நிச்சயம் சொல்றேன்...உங்க மாமி ஸ்பெஷலா?


    ஜெயகாந்தன் - உங்க message hilarious...என் post'அ விட சிரிப்பா இருக்கு....

    நாகு sir, எந்த கண்ணனின் மனைவி? க்ரிஷ்ண பரமாத்மாவா..இல்ல எதாவது உங்களுக்கு தெரிஞ்ச கண்ணனா....எனக்கு தெரிஞ்ச க்ரிஷ்ணனுக்கு அப்படி ஒரு wife இல்லையே..i hope we are talking about the same கடை. கொடியா, செடியா? wikipedia'ல search எல்லாம் பண்ணி போட்டேனே...அப்படியுமா தப்பு?
    எதுவா இருந்தாலும் நண்பர சொல்லி குற்றம் இல்லை...போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் எனக்கே...

    -vgr

    ReplyDelete
  5. Kaththarikka puranam vishnu puranaththa vida neeeeelama irukku.puranaththiil illadhadhadhu ennakkaththirikka kuzhambu engaththu maami pannina supera irukkum. Unga nanbarai try panna sollungo

    ReplyDelete
  6. கண்டிப்பா சொல்றேன்...அந்த எண்ணெய் கத்திரிகாய் நானும் சாட்ருக்கேனே....extremely tasty..

    ReplyDelete
  7. ennadhu idhu ellarum kathrikka kathrikkangara? what do u mean? saivamo, vaishnavoma, mothathula kathrikka saivam thaane, besha saatuttu pongale. kathrika ki jai.

    ReplyDelete
  8. பானு, நீ ஒரு நல்ல point சொல்லிருக்க...எதுக்காக உணவு வகைக்கு மத வகையோட பெயர் கொடுத்துருக்கு...யோசிக்க வேண்டிய விஷயம்....

    -vgr

    ReplyDelete
  9. எல்லோருக்கும் வணக்கம்,
    இனிமேல் செம்மொழியாம் தமிழ் மொழியில் உரையாடுவோம் - அன்புடன் பானு.

    ReplyDelete
  10. கத்தரிக்காய் லேந்து விடுதலை கேட்டா எல்லாரும் கத்தரிக்காய் reciepes சொன்னா so boring ... அதனால உன் friendoda wife a cookery class ( crash course ) la சேர்த்து விட சொல்லலாம் ...சீக்கிரமே ஆத்துல more veggie menus ப்ராப்திரஸ்து !!!

    ReplyDelete
  11. அருமை... Good laugh for the day!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!