Wednesday, June 25, 2014

மூன்றாம் பதிவு

blog எழுதலாமா வேணாமா
எழுதலாமா வேணாமா blog
எழுதலாமா வேணாமா blog
வேணாமா எழுதலாமா blog
எழுதலாமா வேணாமா வேணாமா எழுதலாமா
blog எழுதலாமா வேணாமா

காலையில் எழுந்து பல் தேச்சிட்டேன்
குழந்தைய school'கு drop பண்ணிட்டேன்
காய்கறி cut பண்ணி கொடுத்துட்டேன்
வேலைய செய்யற மாதிரி நடிச்சிட்டேன்
ஆனா
இப்போ ஒரு யோசனை தோனுதுங்க…
மனசு ஏங்குதுங்க...

blog எழுதலாமா வேணாமா?

ஆளில்லா அங்காடிக்கு தேனீர் ஆற்றுவது போல்..
வளறாத பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போல்..
வேகாத இட்லியை தட்டில் போடுவது போல்..
balance ஏறாத account'கு bank account வைத்திருப்பது போல்..
குறையாத weight'கு Gym போவது போல்..
நம்ம பேச்ச ஒத்துகாத மனைவியிடம் argue செய்வது போல்...
யாருமே படிக்காத blog'கு மூளையை கசக்கி பிழிந்து அறிவு திறனை எல்லாம் பயன்படுத்தி பதிவு எழுதலாமா? இல்லை வெண்டாமா?

இந்த காரணத்துக்கு தான் என்னோட private blog'அ நான் offline செஞ்ஜேன்... ஆனா அதுவே பரவால்ல போலருக்கே... இன்னும் நிறைய பேர் படிப்பாங்களே... RTS தமிழ் blog'ல போடறதும் Kapteyn 'ல poster அடிச்சு ஒட்டறதும் ஒன்னு தான் போலருக்கு... ரெண்டையுமே யாரும் பாக்க மாட்டாங்க... நம்ம எழுதினா யாரும் படிக்கறதில்லைனா...யாரு எழுதினா படிப்பாங்க? ஒரு வேளை Cinema/Politics படிக்க விருப்பம் இருக்குமோ.... அப்படி ஒன்னும் படிக்கற வழக்கம் நம்ம கிட்டிருந்து போச்சுன்னு சொல்ல முடியாது.... 24 மணி நேரமும் news படிக்கற ஆட்கள் நம்மில் எத்தனை பேரு? எப்போ பாரு எதாவது ஒரு sport'ஒட score card'அ check பண்றது எத்தனை பேரு? வெட்டி பந்தா facebook messages படிக்கறது எத்தனை பேரு? இந்த ஓட்ட பந்தயத்துல ஜெயிக்கற அளவுக்கு என் blog post'கு influence இருக்கா? இல்லைனு தான் சொல்லனும்... அப்படியே இருந்தாலும் நமக்கு தெரிஞ்ச அறிஞ்ச 4 ஜீவன் தான் படிக்கும்...என்னோட post படிங்க..படிங்கனு எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பறதெல்லாம் ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு... என்னால அத செய்ய முடியறதில்ல...self appraisal மாதிரி இருக்கு...அப்படியே தெரிஞ்சாலும்...பல பேர் படிக்கவா போறாங்க? Genelia'விற்கு எத்தனை மாதம்? பிறக்க போவது ஆணா, பெண்ணா? இல்ல Preity Zinta case'இல் ஜெயிப்பாறா இல்லையா? George Clooney'ஒட Best Man கண்டுபிடிக்க பட்டார்? அப்படினு Yahoo.com, Rediff India மாதிரி article'கும் தலைப்புக்கும் சம்மந்தமே இல்லாம click count'காக தடபுடல் தலைப்பு வச்சா ஒரு வேலை படிப்பாங்களொ? நாம்ம ரொம்ப யோசிக்காம consecutive number'ல heading போடறது தான் காரணமா இருக்குமோ? பேசாம Fibonacci Series'ல தலைப்பு கொடுத்தா? அடுத்த பதிவுனு ஒன்னு இருந்தா அதுக்கு ஐந்தாம் பதிவுனு பேர் வச்சு...எத்தனை clicks வருதுனு பாக்கலாமா?

blog எழுதலாமா வேணாமா? வேணாமா எழுதலாமா?

-vgr

13 comments:

  1. ஐயோ சாமீ...! இங்கேயும் குழப்பமா...?

    ReplyDelete
  2. அம்மாடியோ. இத படிச்சிட்டு தாரை புலம்பல் படிச்சா அது நகைச்சுவை மாதிரி இருக்கு. அந்த புலம்பல்... :)

    ReplyDelete
  3. ஸ்ருதி சொல்லறமாதிரி உனக்கு எழுதனும்னா எழுது வேனாம்ன விட்டுடு உன் இஷ்டம் !!!

    shruthi ya opinion ketta ipdi thaan solluva...

    ReplyDelete
  4. ஏன் தனபாலன் Sir, வேற எங்கெல்லாம் குழப்பம்...

    நாகு Sir, You mean Thara as in Mrs.Vali?

    அனு, ஸ்ருதி சொல்றதும் சரி தான்..

    ReplyDelete
  5. Chimbu vin pattai vida idu hasyam! Pramadam.

    ReplyDelete
  6. நந்து, என்னடா சிம்பு பாட்டுனு யாருமே கண்டுபிடிக்கலையேனு பாத்தேன். Thanks!!!

    ReplyDelete
  7. ஐயா VGR அவர்களே,

    வணக்கம் ,
    உங்களின் புலம்பலை பார்த்தோம். எனக்கு நிறைய சொல்ல தோன்றுகிறது.
    அறிஞனுக்கும் கோமாளிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
    கோமாளிக்கு கை தட்டல் கிடைத்தால் தான் அவன் நிறைய வித்தைகள் செய்வான். அறிஞன் அப்படி இல்லை.
    நீங்கள் எந்த ராகம் என்று தெளிவாக சிந்திக்கவும். நன் உங்களை நிந்திக்க வில்லை.
    ரசிகர்கள் அனைவரும் மறுமொழி எழதினால் தான் ப்ளாக்கில் எழுதுவேன் என்பது என்ன பிடிவாதம்.

    உங்களின் கருத்துக்களை அனைவரும் படிக்கிறார்கள். நீங்களே ஒருவரும் படிக்க வில்லை என்று எண்ணுவது வடிவேலுவின் ".....பிள்ளை " தனமாக தெரிகிறது . தொடர்ந்து எழுதுங்கள். உங்களிடம் ஒரு புரட்சியை எதிர்பார்க்கிறோம்.

    இன்னும் சொல்ல வேண்டுமானால் திருவிளையாடலில் சொல்லுவது போல் மருமொழிக்க்காகவே எழுதும் அறிஞர்களும் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்

    உங்களுக்கு மறுமொழி வேண்டும் என்றால் என்னுடன் விவாதம் செய்ய வாருங்கள். உங்களுக்கு மறு மொழி உடனடியாக கிடைக்கும்.

    இப்படிக்கு,
    ரிச்மண்ட் வேதாந்தி

    ReplyDelete
  8. ஐயா VGR அவர்களே,

    வணக்கம் ,

    முதலில் முதல் பதிவு, இரண்டாம் பதிவு என்பதை மாற்றுங்கள். என்னவோ கிணற்றுக்கு பக்கத்தில் ஒருவன் நின்று கண்டு எண்ணுவது போல் உள்ளது.

    உங்களின் இர ண்டாம் பதிவில் உள்ள நண்பரின் முகவரியை கொடுக்கவும். பிழைக்கத் தெரியாத மனிதர் அவர்.
    எனக்கு ஒரு கதை சொல்லத் தோன்றுகிறது .

    சொர்க்கமும் நரகமும் நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது.
    ஒரு சிறுவன் கடவுளிடம் கேட்டான், சொர்க்கத்திற்கும் நரகத்தி ர்க்கும் என்ன வித்தியாசம் என்று,
    கடவுளஅவனை அழைத்து சென்றார்.

    நரகத்தில் உள்ளவர்களின் கைகள் இரண்டும் அகப்பை கரண்டியால் கட்டப் பட்டிருந்தது. கையை நீட்டவோ மடக்கவோ முடிய வில்லை. அவர்களின் முன்னால் அறுசுவை உணவும் வைக்க பட்டு இருந்தது.
    அவர்கள் அனைவரும் உணவை எடுக்க முயன்று தன் வாயில் போட இயலாமல் உணவை சிந்தினர்.
    அவர்களின் பசி அடங்காததால் வேகம் அதிகமானது. உணவை சாப்பிட முடியவில்லை.

    சொர்க்கத்திலும் அதே காட்சி தான். அவர்கள் கைகளும் கட்ட பட்டு இருந்தது. அனால், பரோபகாரியான மனிதர்கள், உணவை எடுத்து தான் சாப்பிடாமல் அடுத்தவரிக்கு ஊட்டினார்கள். இதனால் அனைவரின் பசியும் தீர்ந்தது.

    உங்கள் நண்பருக்கு இந்த கதையை சொல்லுங்கள். நண்பர்களை வீடிற்கு அழைக்க சொல்லுங்கள். இதனால் அவர் நண்பர்கள் வீட்டிற்கு சென்று விதவிதமான உணவுகளும் சாப்பிட முடியும்.
    இதை விட்டு, செடியை வெட்டுவேன் மரத்தை வெட்டுவேன் என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல் ஆகும்.

    உங்களின் நண்பரை என் வீட்டிற்கு வர சொல்லுங்கள். நல்ல சாப்பாடு போடுகிறேன். கத்திரிக்காய் இல்லாமல். நீங்களும் அவரை உங்கள் வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போடுங்கள்.


    இப்படிக்கு,
    ரிச்மண்ட் வேதாந்தி

    ReplyDelete
  9. அய்யா வேதாந்தியாரே,

    நீங்கள் கேட்கும் கேள்வி எல்லாம் நன்றாய்த்தான் இருக்கிறது. நானே மக்களை கையில் காலில் விழுந்து எழுத அழைத்துக் கொண்டிருக்கிறேன். துரத்தி விடாதீர்களய்யா... :-)

    //உங்களுக்கு மறுமொழி வேண்டும் என்றால் என்னுடன் விவாதம் செய்ய வாருங்கள். //
    இப்படி சொல்கிறீர்களா இது பேச்சு! என்ன விஜிஆர் - விவாதத்துக்கு ரெடியா?

    ReplyDelete
  10. //என்னவோ கிணற்றுக்கு பக்கத்தில் ஒருவன் நின்று கண்டு எண்ணுவது போல் உள்ளது//
    இது கொஞ்சம் ஓவர். :-)

    விஜிஆர் - உங்களுக்கு கிணற்றுக்குப் பக்கம் ஒருவன் நின்று கொண்டு எண்ணும் கதை தெரியுமா? :-)

    வேதாந்தியாரே - வேதாந்தம் கொஞ்சம் ஜாஸ்தியானால் அந்த கதிதான் :-)

    ReplyDelete
  11. நாகு,



    மன்னிக்கவும். சிங்கம் தூங்கி விட்டதோ என்று எண்ணி விட்டேன்.

    அது தான் திட்ட வில்லை என்று சொல்லி விட்டேனே.

    VGR அவர்களே

    நிறைய எழுதுங்கள். நாங்கள் படிக்கிறோம். தமிழன் மறுமொழி பேசி இருந்தால் தமிழ் நாட்டின் அரசியல் என்றோ மாறி இருந்திருக்கும். நானும் ஒரு தமிழன் தானே. அது தான்.



    வேதாந்தி

    ReplyDelete
  12. Oops... நிறைய நாள் கழிச்சு Login பண்ணி பார்த்தா...11 comments...என்னடா இது யாருமே படிக்காத இடமாச்சே'னு confirm பண்ணிக்க என் post'அ open செஞ்ஜா...revotes மாதிரி நிறைய எழுதறார் ஒருத்தர்...

    வேதாந்தி Sir, ஏன் இப்படி...why this கொலவெறி...ஏன் இத்தனை serious discussion, கருத்துக்கள்...ரொம்ப உணர்ச்சிப்பூர்வமானவர் போலருக்கு நீங்க....well..on a serious note உங்க point noted..மனசுல வச்சுக்கறேன்...மிக்க நன்றி...

    நாகு Sir, எனக்கு அந்த கதை தெரியாது...விவாதமா...அது செய்ய நேரம், காலம், இடம் இதெல்லம் என்னிடம் இப்போ இல்லையே...அதுவும் இல்லாம என்னத்த விவாதம் செஞ்சி என்ன செய்ய போறோம் :)

    -vgr

    ReplyDelete
  13. VGR அவர்களே,

    உங்கள் வருகைக்கு நன்றி. உங்களின் திறமைகள் மறைக்கப் படக் கூடாது எனபதே எனது வேண்டுகோள்.
    நான் ஒன்றும் மல்லுக் கட்ட அழைக்க வில்லை. சொல்லுக் கட்டத் தான் அழைக்கின்றேன்.

    வாருங்கள், உங்களின் பதிவுகளை பதிவு செய்யுங்கள்.

    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!