Saturday, August 27, 2011

பித்தனின் கிறுக்கல்கள் - 44

கண்றாவி அரசியல்


உலகம் முழுக்க இருக்கும் இந்தியர்கள் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கேட்ட முதல் கேள்வி, "அன்னா ஹசாரேவோட உண்ணாவிரதம் முடிவுக்கு வருமா?" அடுத்த கேள்விகள் "அவர் கேக்கரமாதிரி லோக்பால் மசோதாவை மத்திய அரசாங்கம் ஒத்துக்குமா? எப்படியாவது ஊழல் குறையுமா?" தான். இது எப்படி இருக்குன்னா சத்யா அவரோட உத்தமன் பதிவுல சொன்னது போல், நாம் எல்லோரும் சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி நம் காரியம் நடக்க தவறு செய்யவும் லஞ்சம் கொடுக்கவும் தயாரா இருக்கோம், ஆனால் யாராவது வந்து எல்லாத்தையும் நிறுத்தனும் என்று எதிர் பார்க்கிறோம்.


அன்னாவுக்கும் அவரை சுத்தியிருக்கரவங்களுக்கும், ஊழல் தப்பு, ஊழல்வாதிகளை லோக்பால், ஆவின் பால், ஆட்டுப் பால், மாட்டுப்பால்ன்னு ஏதாவது ஒன்னுல பிடிச்சு போடனும், அதுல இந்தியாவில இருக்கர எவனாயிருந்தாலும், ஊழல் பண்ணினா தண்டனை சீக்கிரம் தரப் படனும். இதுக்கு தமிழ்நாடு உட்பட ஆயிரக்கணக்கானவங்க சேர்ந்து குரல் கொடுக்கராங்க அதை பத்தி யாராவது எதாச்சும் எவனாவது சொன்னான் செத்தான். நம்ம சத்யா அதை காரசாரமா விமர்சிக்க, குயில், நாகுன்னு ஆளாளுக்கு தர்ம அடி போட, அவர் பாவம் காமெடியா ஒரு பதிவு போட்டு ஒப்பேத்தியிருக்கார். அதையும் தாண்டி இந்தப் பதிவுக்காக யார் எம்மைத் திட்டினாலும் எமக்குக் கவலையில்லை.


இப்படிப் பட்ட காமெடி இந்தியா முழுக்க நடைபெறும் அதே சமயம், இந்தியாவில தமிழ்நாட்டுல இந்தியாவோட முன்னால் ப்ரதமரையும் இன்னும் பல பேரையும் குண்டு வெச்சு கொன்னவங்களுக்கு உதவியா இருந்தவங்கன்னு பல பேரை கைது பண்ணி பல வருஷங்களா அவங்களை விசாரணை பண்ணி கோர்ட் தூக்கு தண்டனை கொடுத்து அது பலப் பல வருஷங்களா கிடப்புல இருந்து சமீபத்துல அந்த முக்கிய மூன்று குத்தவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேத்த முடிவு எடுத்ததுக்கு தமிழ்நாட்டுல இருக்கர அத்தனை பைத்தியங்களும் எதிர்க்க ஆரம்பிச்சுருக்குங்க. இதுனால தமிழ்நாட்டு பேர் கெட்டுப் போயிடும்ன்னு பயமா, இல்லை தமிழ்காரன் என்ன வேணா செய்யலாம் ஆனா அவனை தூக்குல போடக் கூடாதுன்ற லாஜிக்கான்னு தெரியலை. அவங்க மூனு பேரும் தப்பே செய்யலைன்னு யாரும் வாதாடலை, அவங்க தவறா கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு தண்டனைத் தரப் படுகின்றனர் என்று அந்த மூன்று பேரைத் தவிர யாரும் சொல்லவில்லை. சொன்னால் நீதி மன்ற அவமதிப்பு குற்றம் என்பது மிக மிக சீரியஸான ஒன்று என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இலங்கையில் பலப் பலத் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இந்த மூன்று பேரையும் தமிழ்நாட்டில் தூக்குல போடக் கூடாதாம். இதில் என்ன லாஜிக் என்று நாம் கேட்கப் போவதில்லை. லாஜிக் என்ற ஒன்றை எதிர்பார்த்தால் இப்படிப் பட்ட பைத்தியங்களை பேச விடுவோமா? நேற்று, முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களை 'மறப்போம் மன்னிப்போம்' ரீதியில் மன்னிப்பதுதான் மனிதாபிமானம் என்று உளறியிருக்கிறார். இந்த விஷயத்தில் இதுவரை உளறாமல் இருப்பது செல்வி ஜெயலலிதா மட்டுமே. பத்தாயிரம் பயித்தியங்களுக்கு நடுவில் இவர் மட்டும் எத்தனை நாள் தெளிவாக பேசிக்கொண்டிருக்க முடியும் என்பது தெரியவில்லை.


ஊழலைத் தடுக்கரது மட்டும்தான் அன்னாவுக்கு முக்கியம். அதே சமயம் குண்டு வெச்சு மக்களைக் கொலை செஞ்சா வெறும ஆயுள் தண்டனைதான் கொடுக்கனும். பாராளுமன்றத்தைத் தாக்கினால் மன்னிக்கனும், தீவிரவாதம் செஞ்சுகிட்டே இருக்கரவங்களை பார்த்து பரிதாபப் படனும் காரணம் இவங்களுக்கு வேலையில்லை வேலையிருந்தா இதச் செய்ய மாட்டாங்கன்னு சால்ஜாப்பு மத்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்வார், அதையும் மீறி மாநிலங்கள்ல தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் செஞ்சா அது அந்த மாநிலத்தோட பொறுப்புன்னு அவரே பொறுப்பில்லாம பதில் சொல்வார். மும்பய்-ல ஒரு ஹோட்டல்ல தீவிரவாதிகள் தாக்கி பல வெளிநாட்டவர்கள் உட்பட பலர் இறந்த பிறகு பிடிபட்ட ஒருவனுக்கு தினமும் 1-3 கோடி ரூபாய் செலவு செஞ்சு அவனைத் தூக்குல போடாம இருப்போம் இந்த விஷயத்துல மக்களுக்கு மனிதாபிமானம் வேணும். இப்படிப் பட்ட கேணத்தனமான டயலாக்கை கேக்கனும், அன்னாவுக்கும் ஜே போடனும், இந்த ரெண்டுல எதை கேள்வி கேட்டாலும் அடிப்பாங்க.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

5 comments:

  1. //இந்த ரெண்டுல எதை கேள்வி கேட்டாலும் அடிப்பாங்க.//
    முதல் கேள்வி பத்தி கேட்டா எனக்கு கவலயில்ல... ரெண்டாவது கேள்வி கேட்டாதான் அடிப்பேன் :-)

    நாங்க இன்ன தேதிக்கு இந்திய மத்திய அரசையே நடுங்க வெச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு சின்ன சங்கப்பதிவுல வரும் எதிர்ப்புப் பதிவு எந்த மூலைக்கு. வாழ்க ஜனநாயக உண்ணாவிரதம்!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பித்தன், உங்க கோபம் font size -ல இருந்தே தெரியுது. அன்னா ஹசாரேவை ஆதரிக்கவில்லை என்றால் தேச துரோகக் குற்றம் சாட்டப்படும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது. வருமான வரி காட்டாமல் கறுப்புப் பணத்தில் மட்டுமே புரண்டு ஓடும் திரைப்பட நடிகர்கள் வரை யோக்கியர்கள் வேஷம் போட்டு அன்னா உற்சவத்தில் குளிர் காய்கிறார்கள்.

    ReplyDelete
  4. //நம்ம சத்யா அதை காரசாரமா விமர்சிக்க, குயில், நாகுன்னு ஆளாளுக்கு தர்ம அடி போட, அவர் பாவம் காமெடியா ஒரு பதிவு போட்டு ஒப்பேத்தியிருக்கார்// அப்படியா? நான் படிச்ச வர எல்லோரும் காரா சாராமா விவாதம் செஞ்ச மாதிரி தான் இருந்தது.

    இந்தியர்களில் சிலருக்கு ஒரு குணம் உண்டு. யாராவது பொது காரியமாக முன் நின்று செய்தால், இவர்கள் ஆலமரத்தடியில் உக்காந்து அதை அக்குவேறு ஆனிவேராக பிரிச்சு மேஞ்சுகிட்டு இருப்பாங்க.

    இந்த சட்டம் மூலம் எதாவது நல்லது நடந்தால் உடனே அதே ஆலமரத்தடியில் உக்காந்து நான் அப்பவே சொன்னேன்ன்னு கருத்து சொல்லுவாங்க.

    எது எப்படியோ அன்னாவால இன்னும் கொஞ்ச நாளுக்கு ஆலமரத்தடி தொடரும்!

    ReplyDelete
  5. சத்யாவுக்கு இன்னும் கோபம் தணியல போல. கமெண்டு போடறார், அப்பறம் அவரே சென்ஸார் பண்ணிடறார். :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!