Monday, November 20, 2006

ரிச்மண்டில் பரத நாட்டியம் ..ஒரு அறிவிலியின் கண்ணோட்டம்

முயற்சி திருவினையாக்கும்....

சுகி சிவம் சொல்வார், "யார் எங்கே என்ன சென்றாலும் கடைசியில் இந்த கிழவன் காலில் விழ வேண்டும்" என்று. ஞாயிறு மதியம் இது மீண்டும் ஒரு முறை உண்மையாயிற்று. இரண்டு மத்திய வயது பெண்மணிகள் சுமார் இரண்டறை மணி நேரம் சற்றும் சளைக்காமல் களிப்புடன் நடனமாடினார்கள். கடைசிவரை முகாந்திரத்திலே புன்னகை குறையவில்லை; சற்றும் சளைப்பு தெரியவில்லை. என்ன அற்புதம்!

மாதர்களின் வயதைப்பற்றி நாகரிகம் குறித்து விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் இந்த நிகழ்ச்சியிலே இவ்ர்களின் வயது அவர்களின் பெருமையைக் கூட்டியதே தவிர குறைக்கவில்லை. அறியாமல் செய்தாரோ, அல்ல்து குறும்போ, யாமறியோம். உமா அவர்கள், நாட்டியமாடிய நாரீமணிகளின் வயதைச் சொன்னார். அதிலொன்றும் தவறு நமக்குத் தெரியவில்லை. என் பக்கத்திலே இருந்த ந்(ண்)பர் அது தவறு என்று சொன்னமையால், இதைப்ப்ற்றி எழுத நேர்ந்தது.

விடா முயற்சி. மனதிலே இளமை. மற்றும் வேறென்ன வேண்டும்? சுமார் எட்டு வருடங்களாக பயின்று மற்றும் பயிற்சி செய்கிறார்களாம். "யாண்டு பலவாயினும் நரையிலவாகுதல்.." கவிதையை நான் மீண்டும் பாடம் செய்ய வேண்டும். வெறுமே படித்து என்ன பயன்? கற்ற பின் அதற்குத்தக நிற்க வேண்டாமா? என் போன்ற் சோம்பேறிகளுக்கு விடா முயற்சியும் பயிற்சியும் வேப்பங்காய். அவரவர் கணவன்மார்களும், குழந்தைகளும் உறுதுணையாய் இருந்திருக்கிறார்க்ள். குடும்பத்துடன் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நமது பரத நாட்டை விட்டு பல நூறு காத தொலைவிலேயிருக்கிறோம் என்ற் நினைப்பேயில்லாமல் லலிதா அம்மையாரின் கான மழையிலே நனைந்தோம், சில மணித்துளிகள். அது எப்ப்டி ஒரே சீராக அவ்வளவு நேரம் பாடினார் அவர்? ஒரு முறையாவது ஒரு க்கும், ஒரு ஹுக்கும் க்னைப்பு இல்லை. சங்கராபரணத்திலே மிதந்தார். தேநீர் இடைவெளியில் நமது கர்ணகடூர தொண்டையிலும் சங்கராபரணம் ரீங்காரித்தது என்றால் பாருங்களேன். பிற்பாடு குறிப்பாக தோடியிலே உயரே பறந்து சஞ்சாரித்தார். கனம் கட்டியபோது நீட்டாமல் சட்டென்று முடித்தார். என்னடா இது இன்னும் கொஞ்சம் சஞ்சாரிக்கக் கூடாதா என்று தோன்றியது என்னவோ வாஸ்தவம்தான். பிறகுதான் தோன்றியது. இது பாட்டுக்க்ச்சேரியல்லவேயென்று. மிருதங்கம், புல்லாங்குழல், வயலின் எல்லாமே ஒருங்கே ஒத்துழைத்தன. இவை எது பற்றியும் விமரிசனம் செய்யும் அருகதை இல்லாத ஞானசூனியம் யாம். உப்புமா கூட பண்ணத்தெரியாது. யாராவது பண்ணினால் சாப்பிட்டு உப்பில்லை, உரப்பில்லை என்று சொல்லத்தெரியும். அவ்வளவே.

க்டைசியாக ஒரு ஆதங்கம். தோடி என்றவுடன். அடுத்த முறையாவது, யாராவது தமிழ்ப்பெண் - சிறுமியோ அல்லது மாதுவோ. நாட்டியமாடும் போது, தாயே யசோதா உந்தன் ... சாகித்யத்தைத் தேர்வு செய்யட்டும். இது ஒரு சாதாரணனின் வேண்டுகோள்.

கடைசியாக ... இவற்றுக்கெல்லாம் காரண்கர்த்தாவான மாதுஸ்ரீ உமா செட்டி அவர்களைப் ப்ற்றி எழுத்வில்லையென்றால் மகாபாபம். இவர் பற்றி அடுத்த குறிப்பில் பார்ப்போம். ....

Sunday, November 19, 2006

அம்பி துருப்பிடிச்சக் கம்பி

தமிழ்த் தென்றல் நாடகக் குழுவின் முதல் நாடகமான அம்பி துருப்பிடிச்சக் கம்பியை வளைப்பதிவில் காண கீழ் கண்ட linkஐ க்ளிக்கவும்.

http://tthendral.blogspot.com/2006/11/blog-post.html

-முரளி.

Tuesday, November 14, 2006

இவர் யார் தெரியுமா?



இந்த பிரபலமான பாடகர் யாரென்று தெரிகிறதா?

சில விநோதமான படங்களும் என்னுடைய குறிப்புகளும்




















அட இன்னாய்யா இந்த சிக்னலோட படா பேஜாரப்போச்சு. ரெட் லைட்டுல லெப்ட் டர்ன் அடிக்கலாம்னு பாத்தா ஸ்ட்ரெய்ட் சிக்னல் விழுந்திடுச்சு.











கண்டக்டர்: பஸ்ஸுக்கு வெளியே தொங்கறவங்க டிக்கட் எடுத்தாச்சா?
LIC எல்லாம் இறங்கியாச்சா? ரைட் ரைட்

குரல்: கண்டக்டர், Hold On நான் இறங்கணும்

கண்டக்டர்: யாருய்யா அது? குரல் மட்டும் கேக்குது. ஆளு எங்க?

குரல்: பஸ்ஸுக்கு மேல roof ல இருக்கேங்க

கண்டக்டர்: LIC 4 வது மாடிக்கு பஸ்ஸு மேலிருந்தே அப்படியே ஏறி போய்யா.

Wednesday, November 08, 2006

நான்.. நான்... நானே சொந்தமா எழுதியது

இங்கும் அங்கும் பார்க்காமல், வலையிலும் சுடாமல், மண்டபத்தில் எழுதியவரிடமும் வாங்காமல், நானே சுயமாக சிந்தித்து, நானே சொந்தமாக உருவாக்கியவை இவை. படித்துக்களியுங்கள் ப்ளாகிகளே!

நபர் 1: ஏன் சார் உங்க பக்கத்து வீட்டுக்காரர் தென்னைமரத்துல குரங்கு
மாதிரி ஏறி அவங்க மொட்டை மாடியில குதிக்கிறாரு?
நபர் 2: அவரு ஒரு வாஸ்து பைத்தியம்.
வீட்டு வாசப்படியை மொட்டைமாடியில் தான் கட்டுவேன்னு
அடம்பிடிச்சு கட்டிட்டு இப்படி குரங்கு மாதிரி குதிக்கிறாரு.

பேஷண்ட்: டாக்டர், நானும் உங்ககிட்ட 2 வருஷமா treatment க்கு வரேன்.
ஆனா ஒரு improvement ம் இல்லையே
டாக்டர்: ஏன் இல்லை? வெளியில பாருங்க. அது என்னோட புது கார்

பேஷண்ட்: டாக்டர், எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமே வரமாட்டேங்குது
டாக்டர்: சில பேரு ஆபீஸில நல்லா தூங்குவாங்க. வேணும்னா ஒரு
வாரத்துக்கு ராத்திரி ஆபீசுக்கு போயி பாருங்களேன்
பேஷண்ட்: அதை தான் தினமும் செய்யறேனே
டாக்டர்: என்ன சொல்றீங்க?
பேஷண்ட்: டாக்டர், எனக்கு தினமும் 2nd shift வேலை. ஆபீஸில தூக்கம்
வரலேன்னு தான் சொன்னேன்.

நபர் 1: ஐயா இந்த வண்டி ஏறினா சென்னைக்கு போகமுடியுமா?
நபர் 2: இந்த வண்டி ஏறினா சொர்கத்துக்கே போகலாம்

நபர் 1: அந்த ஓட்டுச்சாவடியில ஒரே கலாட்டாவாமே?
நபர் 2: நம்ம தலைவரு அவரோட ஒட்டு போடும்போது எதிர்கட்சிக்காரங்க
voting machine ஐ reboot பண்ணிட்டாங்களாம்.

நபர் 1: ஓட்டு போட்டவங்க எல்லாம் ஏன் "ஆ" "ஊ" ன்னு கத்திக்கிட்டே
போறாங்க?
நபர் 2: இந்த எலக்ஷன்ல கமிஷனர் உத்தரவுப்படி ஓட்டு போட்டவங்க
கையில மைக்கு பதிலா சூடு போடறாங்களாம்.

Tuesday, November 07, 2006

நான் வாக்களித்த புராணம்

சில வாரங்களாக தினசரியிலும், தொலைக்காட்சியிலும் மாற்றி மாற்றி பிரசாரம் செய்துகொண்டிருந்தவர்கள் கம்மென்று ஆகி, முடிவுக்காக காத்திருக்கையில் நான் ஓட்டுப்போட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டேன். இந்தியாவில் இருந்தவரை ஒரு முறை கூட ஓட்டு போட்டது கிடையாது. ஆனால் அமெரிக்கன் ஆனவுடன் ஏனோ தெரியவில்லை இதுவரை 3 முறை ஓட்டுப்போட்டு விட்டேன். முதல் முறை ஜனாதிபதி தேர்தல், இரண்டாம் முறை ஆளுனர் தேர்தல், இன்று சட்டசபை உறுப்பினர்கள் (ஸெனேடர்/காங்கிரஸ்மன்) தேர்தல். நல்ல வேளை இன்று பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை. பள்ளிக்கு செல்லும் shuttle பேரூந்து பிடிக்க சாரத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலையில் எழுந்து குளித்து, ஆடையுடுத்தி, என் மனைவி கட்டித்தந்த நாஸ்தாவையும், மதிய உணவையும் ஏந்திக்கோண்டு என் வாகனத்தில் புறப்பட்டேன்.

சென்றமுறை சென்ற பள்ளியில் தான் வாக்களிக்கவேண்டும். பள்ளியருகில் சென்று வலக்கைப்பக்கம் திரும்பும் சமிஞை விளக்கைப்போட்டு திரும்பலாம் என்று எண்ணும்போது ஒரு பெரிய கருப்பு "சவ்" வண்டி (S U V) ரிவர்ஸில் வெளியே வந்தது. ஓட்டுனர் கையை அசைத்து உள்ளே பார்க் செய்ய இடமில்லை என்று கூறிவிட்டுச்சென்றார். நானும் வேறு வழியின்றி எதிரில் உள்ள மளிகைக்கடை (Grocery Store) பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையைக்கடந்து பள்ளிக்குள் நடக்க ஆரம்பித்தேன். வழியில் இரண்டொரு கட்சிக்கார ஜால்ராக்கள் துண்டு பேப்பரை வைத்துக்கொண்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தார்கள். நான் பார்க்காதமாதிரி நைஸாக நழுவிவிட்டு பள்ளியினுள் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் ஒரே கூட்டம். ஒரு இளம் பெண் நின்றுகொண்டு A-G முதல் வரிசை, H-L அடுத்த வரிசை, M-Z கடைசி வரிசை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த ஒருவரிடம் "அட நமக்கு மூன்று சாய்ஸ் இருக்கே" என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நைஸாக தன் வாக்காளர் அட்டையை (Voter Registration Card) பார்த்து தான் சரியான வரிசையில் நிற்கிறோமா என்று பார்த்துக்கொண்டார்.

கடைசிப்பெயர் (Last Name) படி வரிசையமைப்புக்கு பதில் கட்சிக்கு ஒரு வரிசை என்றாலும் ஏறக்குறைய 3 தான். அதே நம்மூரில் கட்சி படி வரிசை அமைத்தால் என்னவாகும் என்று நினைத்துப்பார்த்தேன். அதற்குள் வரிசை நகர ஆரம்பித்தது. உள்ளே ஒரு மேஜையில் 3 பேர் இருந்தார்கள். இடது பக்கம் ஒரு வயதான் பெரியவர். வலது பக்கம் ஒரு வயதான பெண்மணி. நடுவில் ஒரு இளம் பெண். பார்க்க இந்திய பெண் போல இருந்தாள். கல்லூரி மாணவி போலுமிருந்தாள். பெயரட்டை (Name Badge) அணிந்திருந்தாள். மிகவும் முயன்று என்ன பெயர் என்று படிக்க முயன்றேன். எழுத்து சிறியதாக இருந்ததால் சரியாகத்தெரியவில்லை. அருகில் சென்று படிக்க முடியவில்லை. மேலும் கூர்ந்து பார்த்தால் டேஞ்சர் என்று அதோடு நிறுத்திக்கொண்டேன். அதற்குள் அந்த முதியவர் என் வாக்காளர் அட்டையை வாங்கி, சோதித்து, பட்டியலில் இருந்த என் பெயரை பெருமிதத்துடன் கண்டுபிடித்துவிட்டார்.
"உங்க பெயரை எப்படி சொல்லலாம்?" என்றார். "மக்காக்கா இல்லை" என்று சொல்ல வாய் வந்தது. ஆனால் ஏடாகூடமாகிவிடும் என்று எண்ணி என் பெயரைச்சொன்னேன். பிறகு நடுவில் இருந்த அந்த சிட்டு கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு நகர்ந்தேன்.

இன்னொரு பெரியவர் வந்து என்னை வாக்களிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று என் சீட்டை வாங்கிக்கொண்டு, ஒரு அட்டியை இயந்திரத்தில் சொருகி எடுத்து "நீ ஓட்டு போடலாம்" என்றார். முதல் முறை போட்டது போல் அட்டையில் ஓட்டை போடவேண்டுமோ என்று எண்ணி பயந்த எனக்கு பளிச்சென்று ஒரு screen கண்ணில் பட்டது. கையால் தொட்டு தொட்டு தேர்ந்தெடுத்து கடைசி பக்கம் வந்தேன். "நீ தேர்ந்தெடுத்தவர்கள் இவர்கள் - சரியா தப்பா என்று கேட்டது". "சரி" என்றேன். பிறகு கடைசியாக ஒரு பெரிய பொத்தானில் "வாக்களி" என்று மின்னியது. டக்கென்று அழுத்திவிட்டேன். "உன் வாக்கு பதிவாகிவிட்டது - நன்றி" என்றது இயந்திரம். சரியென்று சொல்லி நடையைக்கட்டினேன். வழியில் இன்னொரு பெரியவர் "நான் வாக்களித்தேன்" என்று பறைசாற்றூம் ஒட்டியை (Sticker) கொடுத்தார். அதை வாங்கி என் மேலுடையில் ஒட்டிக்கொண்டு அடுத்த தேர்தலுக்குள் பேசாம முன் லாடனை பிடித்து விடுவார்களோ என்று எண்ணிக்கொண்டே என் வண்டியைத்தேடிச்சென்றேன்.

Saturday, November 04, 2006

எதிரொலி மன்னிச்சிக்கபா

எதிரொலி மிச்ச ப்ளாகையும் கரைச்சு குடிச்சு ஜீரணம் பண்ணிட்டிருப்பாருன்னு தெரியும். அதுனால எதிரொலிக்கு எதிரொலியா நானே ஒரு விமர்சனம் எழுதிட்டேன். எதிரொலி கண்டுக்காதே வாத்யாரே. கண்டிப்பா எதிரொலி 3, 4.... என்று வரும் என்று எனக்கு நல்லா தெரியும்.

வலைதளப்பிதா (அதான் Father of WWW) பற்றிய விஷயங்கள் பிரமாதம். அதுவும் தக்குணூண்டு Web Server ஐ வெச்சுக்கிட்டு இன்னா வேலை செஞ்சுக்கீராரு வெப்நைனா (நல்லா இருக்கில்ல இந்த பேரு?). அவரு செஞ்ச முதல் வெப் பேஜ் பார்த்தேன். வியப்பாக இருக்கிறது.

பாக்கெட் வெச்ச புடவை பற்றிய விஷயம் ஜோர். இனிமே பொம்பளைங்களும் பிக்பாக்கெட் ஆசாமிகள் கிட்ட உஷாரா இருக்கணும். அடுத்தது என்ன? வேஷ்டியில பாக்கெட் தானே?

'மடை திறந்து' ராப் ஷோக்கா கீதுபா. ராப்பர்களின் உடைகளும் நல்லாயிருக்கு.

சரி, இனிமே நிஜமான எதிரொலி தொடங்குவாரு. வர்ட்டா? ஜூட்.

Friday, November 03, 2006

வலைவலம்

வலை மேய்ந்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
உருப்படியாக வேலை செய்து உய்வார்.

டிம்-பர்னர்ஸ்-லீ
-யாயனமஹ!

தமிழ்நாட்டு தேர்தல், அமெரிக்கத் தேர்தல் எல்லாம் கிடக்கட்டும். இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு சொல்ல வேண்டும். பாக்கெட் வைத்த சட்டை, பேண்ட், சுடிதார் பார்த்திருப்பீர்கள். பாக்கெட் வைத்த புடவை பார்த்திருப்பீர்களா? இதோ பாருங்கள், குமரன் ஸ்டோர்ஸ் அறிமுகப்படுத்தும் பாக்கெட் வைத்த புடவை. பாக்கெட் சரியாக பக்கவாட்டில் வருமாறு கட்ட சொல்லித்தரும் வீடியோ காஸெட் தருகிறார்களா என்று விசாரிக்க வேண்டும். தம்பி எதிரொலி - கொஞ்சம் கேட்டு சொல்லேன்.

இவர்கள் இதற்கு முன்னால் 3-D புடவை, கலர் மாறும் மாயப்புடவை எல்லாம் தந்திருக்கிறார்கள். நமீதா கட்டும் மாயமாய் மறையும் புடவை யார் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Ipod-ல் பாட்டு கேட்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற பாட்கேஸ்ட்(யாரவர்?) பற்றியும் கேட்டிருப்பீர்கள். அறைத்துவிட்ட ரசம், பயத்தம்பருப்பு ரசம் பண்ணுவது எப்படி என்று தமிழில் பாட்கேஸ்ட் இருக்கிறது. முழுவதாக டவுன்லோடு பண்ணிவிட்டு சமைக்க ஆரம்பிக்கவும். இல்லாவிட்டால் தங்கவேலு சொல்வதுபோல பயத்தம்பருப்புதான் இருக்கும் ரசத்தை இண்டெர்நெட் அடிச்சிக்கிட்டு போயிடும். அந்த தளத்தில் மேலும் அவியல், மோர்குழம்பு மற்றும் கறிவேப்பிலை சட்னி பண்ணுவது எப்படி என்று என்னினிய தமிழ் மக்களுக்கு சுளுவாக புரிகிறமாதிரி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் சிங்கப்பூரில் இருந்து மாத்திஸ். சாப்பிட்டு பார்த்து சொன்னவர்கள் பாட்கேஸ்ட் இருந்தால் கொஞ்சம் தைரியமாக இருக்கும்.

நீங்கள் சில பல பதிவுகளை தொடர்ந்து படிப்பவராய் இருந்தால் ப்ளாக்லைன்ஸ், கூகுள் ரீடர் போன்ற இலவச சேவைகளை பயன்படுத்திப் பாருங்கள். யார் புதிதாய் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். சும்மா வலை மேயத் தேவையில்லை. நீங்கள் படிக்கும் தளத்தை உங்கள் ப்ளாக்லைன்ஸ் பட்டியலில் சேர்க்க சுலபமாக நெருப்புநரி 2.0 விலும், IE7லிம் வசதி இருக்கிறது. நான் மேயும் தளங்கள் இதோ. கவலைப்படாதீர்கள், பலான பதிவெல்லாம் அதில் இல்லை.

பேட்டை ராப் எல்லாம் ஜுஜுபி. அதுக்குத் தாத்தா ராப் இங்கே பாருங்க. பட்டிமன்றத்து பேச்சாளர்கள் இதை தவறாமல் பார்க்கவும். நம்ப ஊர் கிழியற கிழிக்கு...

செவ்வாய் கிழமை அமெரிக்கத் தேர்தல் பற்றி கணிப்பு சொல்லலாம் என்று யோசித்தேன். எதற்கு வம்பு? ஏற்கனவே பித்தனார் வாங்கிக் கட்டியிருக்கிறார். உனக்கெதுக்குடா 'மக்காகா' இதெல்லாம் என்று எதிரொலி சவுண்டு விட வாய்ப்பு கொடுப்பானேன்?

சரி - இரண்டாவது ரவுண்டு கூட்டாங்ஸ் பற்றி இங்கே பாருங்கள். கவிதை மற்றும் கதை.
நிறைய புண்ணியவான்கள் ரிச்மண்ட் தமிழ் காங்கிரஸில் (அதாங்க இந்த பிளாக்) சேர்ந்து விட்டு (ஓட்டுப்) பதியாமல் இருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி பிளாகாத பிளாகிகள் சங்கம் ஆரம்பித்து அங்கே பிளாக் கடத்திவிடுவேன் என்று எச்சரிக்கிறேன். நவம்பர் 12ல் எல்லோரையும் தமிழ் சங்க தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் சந்திக்கலாம். என்னைத் தெரியாதவர்கள் அங்கே என்னை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். மேடையில் ஒரு பாட்டுக்கு ஜால்ரா அடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

Thursday, November 02, 2006

எதிரொலி - 2

அல்லாருக்கும் வட்ட சலாம்.

பித்தனின் துவக்கம் - நல்லா போட்டு தாக்கு, ஏய் போட்டு தாக்குன்னு ஆரம்பிச்சிருக்காரு. அது என்ன கிறுக்கல்கள்-ன்னு பேர் வச்சிருக்கார்? 'தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்' -ன்னு எழுதியிருக்கார், அதுதான் தப்பா போயிடுச்சு. மதுரை-ல நல்லா நடந்த தேர்தல், சென்னை உள்ளாட்சித் தேர்தல்ல சுனாமி மாதிரி காட்டிட்டானுங்க.

கிறுக்கல்கள் - 2 - அய்யா கோபம் ரொம்ப ஜாஸ்தியாகீது, control yourself, அல்லாங்காட்டி அல்சர் வந்துடும். 'ஜென்டில்மேன்' படத்தில் செந்தில் சொல்வாரே அது மாதிரி, less tension more work.

முரளி: 55 வார்த்தை சிறுகதைகள் நல்லா இருக்கு. மனிதாபிமானம் - நீங்க கலைஞனுக்கு சொன்னது போல நாடகத்தனமாதான் இருக்கு, ஆனா நல்ல ட்விஸ்ட். கம்பன் கவி இன்பம், எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது so no comments.

கிறுக்கல்கள் - 3 - அண்ணே என்ன writer's blockஆ, சும்மா comments போட்டு ஜகா வாங்கிட்டே?

பரதேசியின் தீபாவளி கவிதை - அய்யா என்ன தமிழ் வாத்தியார் பையனா? பானாவுக்கு பானா, சனாவுக்கு சானா ன்னு கோர்வையா அடிச்சு விட்ருக்காரு.

கிறுக்கல்கள் - 4 - தலைவா தனிக்கட்சி போட்டுகினியா, I coming, your blog, ஒன் சீட் ப்ளீஜ்.
ஆமா, இன்னா சாஃப்ட்டா பூட்ட, ஓ ஷாட் பூட் த்ரீ தான் போட்டியா, நமக்கு ரைட் ஜூட் சொன்னா போதும் (பின்ன அடுத்தவன் கஷ்டப் பட்டு எழுதரத என்னை மாதிரி சும்மா வெட்டியா comment அடிக்கரவங்களுக்கு, writer's block-க்கே வராது) எளுதி தள்ளிடுவேன்.

நவம்பர் மாத லொள்ளு : அதோட இதையும் சேர்துக்கங்க:
தலைவலி மாத்திரை சாப்பிட்டா தலைவலி வருமா,
பேதி மாத்திரை சாப்பிட்டா பேதி ஆகுமா etc....

அடுத்த தபா பித்தன் சொல்லியிருக்கர டுபுக்கு, வெட்டிப் பயல் ப்ளாக்கை படிச்சுட்டு my comments putting.