Friday, November 03, 2006

வலைவலம்

வலை மேய்ந்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
உருப்படியாக வேலை செய்து உய்வார்.

டிம்-பர்னர்ஸ்-லீ
-யாயனமஹ!

தமிழ்நாட்டு தேர்தல், அமெரிக்கத் தேர்தல் எல்லாம் கிடக்கட்டும். இவற்றையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு சொல்ல வேண்டும். பாக்கெட் வைத்த சட்டை, பேண்ட், சுடிதார் பார்த்திருப்பீர்கள். பாக்கெட் வைத்த புடவை பார்த்திருப்பீர்களா? இதோ பாருங்கள், குமரன் ஸ்டோர்ஸ் அறிமுகப்படுத்தும் பாக்கெட் வைத்த புடவை. பாக்கெட் சரியாக பக்கவாட்டில் வருமாறு கட்ட சொல்லித்தரும் வீடியோ காஸெட் தருகிறார்களா என்று விசாரிக்க வேண்டும். தம்பி எதிரொலி - கொஞ்சம் கேட்டு சொல்லேன்.

இவர்கள் இதற்கு முன்னால் 3-D புடவை, கலர் மாறும் மாயப்புடவை எல்லாம் தந்திருக்கிறார்கள். நமீதா கட்டும் மாயமாய் மறையும் புடவை யார் தயாரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Ipod-ல் பாட்டு கேட்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற பாட்கேஸ்ட்(யாரவர்?) பற்றியும் கேட்டிருப்பீர்கள். அறைத்துவிட்ட ரசம், பயத்தம்பருப்பு ரசம் பண்ணுவது எப்படி என்று தமிழில் பாட்கேஸ்ட் இருக்கிறது. முழுவதாக டவுன்லோடு பண்ணிவிட்டு சமைக்க ஆரம்பிக்கவும். இல்லாவிட்டால் தங்கவேலு சொல்வதுபோல பயத்தம்பருப்புதான் இருக்கும் ரசத்தை இண்டெர்நெட் அடிச்சிக்கிட்டு போயிடும். அந்த தளத்தில் மேலும் அவியல், மோர்குழம்பு மற்றும் கறிவேப்பிலை சட்னி பண்ணுவது எப்படி என்று என்னினிய தமிழ் மக்களுக்கு சுளுவாக புரிகிறமாதிரி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் சிங்கப்பூரில் இருந்து மாத்திஸ். சாப்பிட்டு பார்த்து சொன்னவர்கள் பாட்கேஸ்ட் இருந்தால் கொஞ்சம் தைரியமாக இருக்கும்.

நீங்கள் சில பல பதிவுகளை தொடர்ந்து படிப்பவராய் இருந்தால் ப்ளாக்லைன்ஸ், கூகுள் ரீடர் போன்ற இலவச சேவைகளை பயன்படுத்திப் பாருங்கள். யார் புதிதாய் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பக்கத்திலேயே தெரிந்து கொள்ளலாம். சும்மா வலை மேயத் தேவையில்லை. நீங்கள் படிக்கும் தளத்தை உங்கள் ப்ளாக்லைன்ஸ் பட்டியலில் சேர்க்க சுலபமாக நெருப்புநரி 2.0 விலும், IE7லிம் வசதி இருக்கிறது. நான் மேயும் தளங்கள் இதோ. கவலைப்படாதீர்கள், பலான பதிவெல்லாம் அதில் இல்லை.

பேட்டை ராப் எல்லாம் ஜுஜுபி. அதுக்குத் தாத்தா ராப் இங்கே பாருங்க. பட்டிமன்றத்து பேச்சாளர்கள் இதை தவறாமல் பார்க்கவும். நம்ப ஊர் கிழியற கிழிக்கு...

செவ்வாய் கிழமை அமெரிக்கத் தேர்தல் பற்றி கணிப்பு சொல்லலாம் என்று யோசித்தேன். எதற்கு வம்பு? ஏற்கனவே பித்தனார் வாங்கிக் கட்டியிருக்கிறார். உனக்கெதுக்குடா 'மக்காகா' இதெல்லாம் என்று எதிரொலி சவுண்டு விட வாய்ப்பு கொடுப்பானேன்?

சரி - இரண்டாவது ரவுண்டு கூட்டாங்ஸ் பற்றி இங்கே பாருங்கள். கவிதை மற்றும் கதை.
நிறைய புண்ணியவான்கள் ரிச்மண்ட் தமிழ் காங்கிரஸில் (அதாங்க இந்த பிளாக்) சேர்ந்து விட்டு (ஓட்டுப்) பதியாமல் இருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி பிளாகாத பிளாகிகள் சங்கம் ஆரம்பித்து அங்கே பிளாக் கடத்திவிடுவேன் என்று எச்சரிக்கிறேன். நவம்பர் 12ல் எல்லோரையும் தமிழ் சங்க தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விழாவில் சந்திக்கலாம். என்னைத் தெரியாதவர்கள் அங்கே என்னை சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். மேடையில் ஒரு பாட்டுக்கு ஜால்ரா அடிக்கக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!