Tuesday, November 21, 2006

பரதநாட்டியம் ... கண்ணோட்டம்(2)

இப்பகுதியிலே சற்றே சர்ச்சைக்குரிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

முதலில். இதில் எது சரி எது தவறு என்று ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்த்து எழுதுகிறேனே தவிற வேறு சண்டையைத் துவக்க வேண்டுமென்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. நல்லெண்ணத்துடன் கூடிய ஆதார பூர்வமான, ஒத்த (ம) எதிர்ப்புக், கருத்துக்களை வரவேற்கிறேன்.

1. பாரதியின் கண்ணம்மா : எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரிய்ர்கள் மற்றும் நான் படித்த சில பல உரைகள் எல்லாம் சொன்னது இதுதான்: பாரதி கண்ணனைப் பெண்ணாக பாவித்து செய்த கவிதைக்ள் இவை என்று. ஆனால் இந்த நாட்டிய விழாவிலே, ஒரு பாடலை எடுத்து இது பராசக்தியை பாவித்து என்றனர். திக்கித்தேன். நான் கற்றதே தவறோ? இறையனாரும் எம்மான் இலக்குவனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்திலே இந்தக் கேள்வியை வைக்கிறேன். படித்த்மான்களே. கருத்துக்க்ளை அள்ளி வீசுங்கள். சரியான விடையை, விளக்கத்துடன், அறிய அவா.

2. RAGAA : ராகம் தமிழ். RAAG ஹிந்தி. ராகா என்ன மொழி? அவர்கள் ஷொன்னார்கள், நம ஷிவாய, போன்ற த்வனிகள் - பேச்சுக்களல்ல - எமக்கு ரத்தக் கொதிப்பைத் தரும். ராகாவும் அதேரகம் போலும். தன்னைத்தானே அறிவு ஜீவி என்று கருதும் ஒரு நடிகர், தங்கிலீஷ் என்பார் இதை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....

நான் நினைத்ததை எழுதிவிட்டேன். இனி உங்கள் பாடு.
(தொடரும்..)

4 comments:

  1. நீங்கள் நாட்டியம் தலைப்பில் எழுதி பொதுவாக தங்கிலிஷ் பற்றி திட்டுவது நாட்டியக்காரர்களை விமர்சிப்பது போல் இருக்கிறது. பொறுத்தது போதும் பொங்கியெழலாம் என்று நினைத்துவிட்டீர்கள் போல. ஆனால் தவறான மேடை. இளையயராஜாவை பெரியார் படம் இசை அமைக்க கூப்பிட்டமாதிரி.

    அதுவும் தமிழில் வல்ல மீனா, உமா சம்பந்தப் பட்ட பதிவில்......

    இந்த தங்கிலிஷ் பற்றி எனது கருத்துக்கள் தனியாக இடுகிறேன்.

    ReplyDelete
  2. எனக்குத் தெரிந்த வரை இந்தக் குறிப்பிட்ட பாடல் பராசக்தியைப் பாவித்துதான். தவறானால் அது என்னுடைய அறிவின் குறைவுதான்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    கவிநயா.

    ReplyDelete
  3. http://www.tamil.net/projectmadurai/pub/pm0049/barati3.pdf

    தற்சமயம் என்னிடம் பாரதியார் புத்தகம் இல்லாததால், இணையத்தில் தேடினேன். மேலே கிடைத்த தளத்தில் அது பராசக்தியை குழந்தையாய் பாவித்து எழுதியது என்று குறிப்பிட்டிருக்கிறது.

    மீனா இந்தப் பாடல் மட்டும் மற்ற கண்ணன் பாடல்களில் இருந்து வித்தியாசமானது என குறிப்பனுப்பியிருந்தார்.

    ஆகவே - அஜாதசத்ரு அவர்களே - மறுமொழியில்லாவிட்டால் போடும் தோப்புக்கரணம்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!