அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் எந்த தொழில் செய்யலாம். இன்னார் இந்தத் தொழில் செய்தால் கேவலம் என்ற நிலையில்லை. அந்த மனப்பான்மை இந்தியாவிலும் ஆரம்பித்திருப்பது நல்லது. ஊரில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இனிய அதிர்ச்சி. நடிகைகள் காலங் காலமாக சோப், ஷாம்பூ, நகை விற்று வருகிறார்கள். இன்று நம் நடிகர்கள் பல விளம்பரங்களில் வருகிறார்கள். விஜய் அலைபேசி விளம்பரத்தில் வந்தார், ஷாருக் கான் சிமெண்ட் விற்கிறார், மம்முட்டி பனியன், வேட்டி விற்கிறார். இவர்கள் எல்லோரையும் விட சூப்பர் அப்பாஸின் டாய்லட் கழுவும் திரவம் விளம்பரம்.
என்னடா, மார்க்கெட் போனதால் டாய்லட் கழுவும் விளம்பரத்திலெல்லாம் வருகிறானே என்று கேலி செய்வார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக விளம்பரத்தில் வருகிறார்.
என்னடா, மார்க்கெட் போனதால் டாய்லட் கழுவும் விளம்பரத்திலெல்லாம் வருகிறானே என்று கேலி செய்வார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக விளம்பரத்தில் வருகிறார்.
அடுத்து ______________________________ (மார்க்கெட் போன ஒரு நடிகர் பெயரை செருகவும்) நடிக்கும் தென்னந்தொடப்பம் விளம்பரத்தை எதிர்பார்க்கிறேன். என் பையன்கள் தென்னந்தொடப்பத்தின் அருமை பெருமைகளை ஒத்துக் கொள்ள மாட்டென்கிறார்கள். :-)