Thursday, December 27, 2007

கிராமத்து மார்கழிக் காலை

மார்கழி என்றாலே நம்ம ஊர்ல குளிர், சங்கீதம், திருப்பள்ளி எழுச்சி தான். அத்தோடு நம்ம ஊர் பெண்கள் வண்ணக் கோலம் இடுவதும் சிறப்பு (இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை !). அதைப் பற்றின என் எண்ணங்கள் கவிதையாய், இங்கே க்ளிக்கவும்.


http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html

Wednesday, December 26, 2007

தடயம் - மர்மத் தொடர்


தடயம் மர்மத்தொடரின் ஏழாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்:
http://kalaichcholai.blogspot.com/2007/12/7.html
- முரளி.

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது அத்தியாயங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்:

Sunday, December 16, 2007

உயிருக்கு போராடும் ராஜேஷ் ராமநாதன்


என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷ் ராமநாதன் இன்று லூகேமியாவுடன் போராடிக் கொண்டிருக்கிறான். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சென்ற வருடம் போராடி வென்றவன், இப்போது மீண்டும் போரைத் தொடர்ந்திருக்கிறான். முழு விவரங்களை இங்கே காண்க => http://www.helprajesh.com

இந்த Bone Marrow விஷயத்தில், போன் மாரோ(bone marrow) தானம் செய்ய நம் வர்க்கத்தினரால்தான் முடியும். நம் வர்க்கம் என்றால் தெற்காசிய மக்கள். ஆகவே எவ்வளவு பேர் bone marrow donor ஆக பதிவு செய்ய முடியுமோ,  ராஜேஷ் போன்றவர்களுக்கு உயிர் வாழ வாய்ப்புகள் அதிகமாகின்றன. ராஜேஷ் மாதிரி இன்னும் சில பேர் இருக்கிறார்கள். சிகாகோவில் ஆறு வாரங்களே நிரம்பிய பிரனவுக்கு தானம் செய்ய அவசரத் தேவை. 

நம் ரிச்மண்டில் வரும் புத்தாண்டு தினத்தன்று ஹிந்து மையத்தில் bone marrow donor registration நடக்கவிருக்கிறது. இதில் பதிய தேவையானதெல்லாம் ஒரு காகிதத்தை நிரப்புவதும், ஒரு குச்சியால் உங்கள் உள்கன்னத்தை தடவிக் கொடுப்பதும்தான். உங்களுக்கு ஒரு செலவும் இல்லை, பதிவு செய்ய ரத்தத்துளி தேவையில்லை.  ஒரு உயிரைக் காக்க தயாள குணம் மட்டுமே தேவை. 

உங்கள் ஊரிலும் மக்களை பதிவு செய்யலாம். சமார் நிறுவனம் தேவையான பொருட்களை இலவசமாக அனுப்புவார்கள்.விவரங்களுக்கு http://www.samarinfo.org. போன் மாரோ தானம் பற்றிய முழு விவரங்கள் சமார் தளத்தில் அமெரிக்க போன் மாரோ தளத்திலும்(http://www.marrow.org) காணலாம்.
இதைப் படிக்கும் அனைவரும் நீங்கள் பதிவது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களையும் பதிவு செய்யவிக்க வேண்டும். உங்களால் முடிந்த நிதியுதவியும் செய்தால் நல்லது.

Thursday, December 13, 2007

பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)

பாரதி அவர்களின் அதிர்ச்சியான மறைவு எப்போதும் சிந்தனையில் இருக்க அதன் விளைவாய் வந்த கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html

Monday, December 10, 2007

தீபாவளி-கிறிஸ்துமஸ் விழா!

சென்ற சனிக்கிழமை நடந்த ரிச்மண்ட் தமிழ் சங்க தீபாவளி-கிறிஸ்துமஸ் விழாவை எல்லோரும் ரசித்து மகிழ்ந்திருப்பீர்கள். விழாவைக் குறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் நலம்.

மேலும் படம், வீடியோ எடுத்திருந்தால், அவை இணையத்தில் காணமுடிந்தால், அவற்றின் சுட்டியையும் பின்னூட்டத்தில் கொடுங்கள். அனைத்தையும் ஒரு இடத்தில் சேகரிக்க முடிந்தால் அருமையாக இருக்கும். Flickr தளத்தில் இருந்தால் RTS 2007 Diwali என்று tag கொடுங்கள்.

Thursday, December 06, 2007

படம் பார்த்து கடி சொல் - 3



"நீ படிக்கிற படிப்புக்கு வண்டி தள்ள தான் லாயக்கு" ன்னு எங்கப்பா சொன்னதை நிஜமாக்கிட்டானே படுபாவி இந்த சீனியர் இஞ்சினியர்"

படம் பாருங்கோ! கடி கேளுங்கோ! நீங்களும் கடியுங்கோ!

Tuesday, November 27, 2007

செல்போன் ஃபார் ஸோல்ஜர்ஸ்!

மனமிருந்தால் மார்க்கமிருக்கும். ஒரு அக்கா தம்பி அமெரிக்க போர்வீரர்களுக்கு உதவ என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் மலைத்துப் போவீர்கள். இந்த ஒரு யூட்யூப் வீடியோவை பாருங்கள்.




ஒரு போர்வீரனுக்கு ஏழாயிரம் டாலர் செல்போன் பில் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போன இந்த உயர்பள்ளி மாணவர்கள் தங்களிடம் இருந்த பைசாவையும் நண்பர்களிடம் வசூல் செய்த பைசாவையும் கொடுக்கலாம் என்று ஆரம்பித்தது இன்று அமெரிக்க படைவீரர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலாக காலிங்கார்ட் வழங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!!!


CellPhone For Soldiers - இன்னும் பள்ளியில் படிக்கும் இந்த அக்கா தம்பி நிறுவனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். பழைய செல்போனை அவர்களுக்கு அனுப்ப வேண்டுமா? உங்கள் ஊரில் எங்கே கொண்டு போய் கொடுக்கலாம் என்று இங்கே பாருங்கள். இல்லாவிட்டால் இலவசமாக தபாலில் அனுப்ப இங்கே பாருங்கள்.

படம் பார்த்து கடி சொல் - 1



மேலுள்ள படத்திற்கேற்றார்போல் கடிக்கவும்!!!