செய்திகள் வாசிப்பதுன்னு எழுத ஆரம்பிச்சதும் அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியலை அதனால குன்சா ஏதோ போட்டிருக்கேன். என் சின்ன வயசுல ஆல் இந்தியா ரேடியோல ஒருத்தர் நியூஸ் படிப்பாங்க, கொஞ்சம் ஆம்பளை குரல்ல கர கரன்னு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஷ்வாமி'ன்னு சொல்லுவாங்க அது ஞாபகம் வந்தது, சரி அப்படியே சொல்லலாமேன்னு ஆரம்பிச்சேன். எந்த செய்தியைச் சொல்றதுன்னு யோசிச்சதும், சும்மா 4-5 விஷயம் டக்குன்னு மனசுல வந்துச்சு. யாரும் என்னோடு போன பதிவுக்கு 'யோவ் நிறுத்துய்யா"ன்னு சொல்லலை, நாகு மட்டும் வழக்கம் போல வந்து கமெண்ட் போட்டுட்டு போயிட்டார் அதனால உங்க தலையெழுத்து நல்லா அனுபவியுங்க. இந்தப் பய சும்மா இல்லாம் நம்மள இழுத்து விட்டுட்டானேன்னு தலைவர், மசலா டீன்னு ரேக்கி விட்டிருக்காரு.
தந்தையர் தினம்:
தினம் தினம் பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி (வாகூம் க்ளீனர் யூஸ் பண்ணியோ, துடைப்பம் யூஸ் பண்ணியோ), அப்பப்ப கார் கழுவி, புல் வெட்டி, கடை கடையா ஏறி இறங்கி (காஸ்ட்கோ, சாம்ஸ் க்ளப், வால் மார்ட்) பால், தயிர், எண்ணெய், அரிசி, காய்கறி, பழம் வாங்குவதிலிருந்து ஒரே ஒரு நாள் (அதுவும் 8 மணி நேரம்தான்) விடுதலை கிடைத்திருக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அபார வெற்றி.
அதிமுக எதிர்பார்த்தது போல புதுக் கோட்டை இடைத் தேர்தல்ல சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று புரட்சித் தலைவியின் ஆட்சி பொன்னான ஆட்சின்னு மீண்டும் நிருபிச்சிருக்காங்க. தாத்தா பாவம் என்ன செய்யரதுன்து தெரியாம, கலாம்ன்னா கலகம்னு மனசுல இருக்கர வெறுப்பை வெளில துப்பியிருக்கார். இப்போ கலாம் மைனாரிடின்னு தெரியலை, அதிகம் படிச்சவர்னு தெரியலை, தெளிவானவர்னு தெரியலை, நல்லவர்ன்னு தெரியலை அவர் பெயர்ல கலாம்ன்னா கலகம்ன்னு (எந்த புத்தகத்துல படிச்சாருன்னு தெரியலை) நல்லா உளர மட்டும் தெரிஞ்சிருக்கு. கழகம் ன்னா சூதாடும் இடம்னு திருக்குறள்ல இருக்கரதா ஒருத்தர் எழுதியிருக்கார் இதையே சோவும் ஒரு தடவை சொன்னதா ஞ்யாபகம். அது பரவாயில்லை போல இருக்கு. இவர் வாயை வெச்சுகிட்டு பொழப்பு கட்டர ஆளு, இப்ப இஸ்லாமிய இயக்கங்கள் இதை கண்டிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இது தீவிரமானா, இவரே "கலாம்ன்னா கலகத்தை தீர்ப்பவர்ன்னு ஒரு பொருள் இருக்குன்னு நான் சொல்ல, ஆரிய பத்திரிகைகள் 5 முறை தமிழகத்தை ஆண்ட நான் ஒரு தாழ்த்தப் பட்டவன் என்பதால், என் மார்பைச் சுற்றி அவர்களைப் போல ஒரு கயிரில்லாத காரணத்தால், என்னையையும் என் கண்களான இஸ்லாமியர்களையும் பிரித்தாள, பார்பன பண்டார பரதேசிகள் சேர்ந்து சொல்லாததைச் சொன்னதாக திரித்து சொல்வது என்னைப் போன்ற பகுத்தறிவு இயக்கத்தினர் நம்பாத அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்று, இதை நம் கழகக் கண்மணிகள் நன்கு உணர்ந்து எவ்விடர் வரினும் உங்கள் வாள்களும் வேல்களும், எந்தப் பகைவர்களையும் கொன்று குவிக்காமல் அமைதி காத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" ன்னு ஒரு சொற்பொழிவு கொடுத்தால் போச்சு.
துக்ளக்:
நான் விரும்பி படிக்கர ஒரு பத்திரிகை. என்னோட பல நண்பர்கள் என்னைப் போலவே தொடர்ந்து படிக்கராங்க. அதுலயும் கிறுக்கரவர் கண்டிப்பா படிச்சுடுவார். அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா அநேகமா முதல் 5-10 நிமிஷத்துல கேக்கர கேள்வி, "இந்த வார துக்ளக் படிச்சுட்டீங்களா, அதுலயும் இந்த ஆர்டிகில் படிச்சீங்களா, அதைப் பத்தி நீங்க எப்ப எழுதப் போறீங்க" இதுதான். சமீபத்தில துக்ளக் ஆசிரியர் சோவுக்கு உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்திருக்கார் அதைப் பத்தி அவரோட நகைச்சுவை குறையாம இந்த வார துக்ளக்ல எழுதியிருக்காரு. அதை நான் காபி எடுத்து போட்டாலோ, நானே திரும்ப டைப் பண்ணினாலோ அது காப் ரைட் லா படி தப்புன்னு நினைக்கிறேன். ஆனா, இட்லி வடைல இதப் போட்டிருக்காங்க. அது இந்த லின்க்ல இருக்கு.
http://idlyvadai.blogspot.com/2012/06/blog-post_15.html
அடுத்த ஜனாதிபதி தேர்தல்
இந்தியால அடுத்த ஜனாதிபதியா யாரை கொண்டு வரலாம்னு குடுமி பிடி சண்டை நடக்குது. ப்ரணாப் முகர்ஜியை காங்கிரஸ் இறக்கியிருக்கு, அப்துல் கலாம் கோதாவுக்கு இன்னும் வரலை. இந்தியாவுல தன்னோட பெருமைக்கு ஏத்த பதவின்னா அது ஜனாதிபதி பதவிதான்னு சேஷன் கூட ஒரு தடவை நிக்க முயற்சி பண்ணினாருன்னு நினைக்கரேன். ஒரு வழியாக் ஊழல் சிரோன்மணி ப்ரதீபா பாடில் வெளில போய்ட்டாங்க, சொல்ல முடியாது ப்ரணாப் ஜனாதிபதிக்கு தான் இப்போ ரெடியில்லைன்னு சொல்லிட்டா அந்தம்மா திரும்ப வந்தாலும் வந்துடும்.
ப்ரணாப் - இவர் இந்திரா காந்தி காலத்துல இருந்து அரசியல்ல ஊழல் பழம் தின்னு, விதை நட்டு அது இப்போ வ்ருட்சமா வளர்ந்திருக்கரத பார்த்திட்டு இருக்கர ஆள். இவரப்பத்தி சொல்லனும்னா, பெங்காலிகள் நல்ல புத்திசாலிகள்(மீன் எண்ணெய்), அப்படி ஒரு புத்திசாலி திருடன் எப்படி இருப்பான்னு பார்த்தால் அது இவர் மாதிரிதான் இருப்பான். இவர் ஜனாதிபதியா வந்தா, எது நல்லா நடக்குதோ இல்லையோ, 'சிதம்பர' ரகசியம் நல்லா கப்பலேறும்ங்கரது நிச்சயம். அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வராதுன்னு நினைக்கிறேன், அப்படி நடந்துச்சுன்னா, இவர் அடுத்து வர்ர கட்சிக்கு குடைச்சல் திலகமா மாறிடுவாரு. இவர் நாட்டாமை ஜாதி, இவர் ஜனாதிபதியாயிட்டா, நாட்டாமைக்கு இவரில்லாம, காங்கிரஸ் கொஞ்சம் தடுமாறும்ன்னு நினைக்கிறேன். பி.வி நரசிம்மராவ் ப்ரதமரா வரதுக்கு முன்னாடி இவரும் அந்த பதவிக்கு நல்லா முயற்சி பண்ணினாரு, கேசரி, குலோப் ஜாமூன்னு(குலாம் நபி ஆஸாட்) பல பேர் வேலை பாத்து, ராவ் காருவை கொண்டு வந்துட்டாங்க. இதுல பெரிய காமெடி, இவர் ராவ் கிட்டயே அமைச்சராவும் வேலை பார்த்தாரு. ஆனா நல்ல புத்திசாலி. மன்மோகன் சிங்கும் நல்ல புத்திசாலிதான் என்னத்த கிழிச்சாருன்னு 'கிறுக்கலார்' கத்தறது காதுல விளுது.
கலாம்: நல்லவர், படிச்சவர், நாட்டு மேல நல்ல பற்று வெச்சிருக்கரவர், படிப்பைப் பத்தி எந்த படாடோபமும் இல்லாதவர். இவர் ரெண்டாவது தடவையா ஜனாதிபதி ஆகியிருக்கனும், ஆனால் இவர் நல்லவரா இருக்கரது, ஊழல் மஹாராணி (இத்தாலி)க்கு பிடிக்கலை, தன்னைப் போல இன்னொரு ஊழல் கிழவியை கொண்டுவந்துட்டாங்க.
இவர் ரொம்ப நல்லவரா இருக்கரதுன்னால எப்போ எதைப் பத்தி பேசனும்னு தெரியாம சில சமயம் பேசிடராரு, உளர்ரத தி.மு.க தலைமைக்கு மொத்த குத்தகைக்கு விட்டாச்சு, அதனால இவர் உளர்ராருன்னு சொல்லக்கூடாது. சமயா சந்தர்ப்பம் தெரியாம எதையாவது சொல்லிடுவாரு. உதாரணத்துக்கு ஒரு முறை இந்தியாவோட ராணுவ பலம் எப்படி பாகிஸ்தானை விட நல்லா இருக்குன்னு ஒரு மீட்டிங்கல சொல்லிட்டாரு, எப்படி அணு ஆயுத பரிசோதனையை இந்தியா செஞ்சுதுன்னு சொல்ல ஆரம்பிச்சு நல்ல வேளையா நடுவுல நிறுத்திட்டாரு. இதுக்கு காரணம் இவர் ஒரு அரசியல்வாதி இல்லை, ஆனா, ஒரு பெரிய நிர்வாகத்துல இயக்குனரா இருந்தார் (இஸ்ரோ) எதை எங்க எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் யோசிச்சு சொல்லனும், இல்லை சொல்லித்தர சரியான ஆளுங்களை பக்கத்துல வெச்சுக்கனும். மிகப் பெரிய அறிவாளி, இவர் பல கண்டுபிடிப்புகளுக்கு உதவியா இருந்திருக்காரு. முக்கியமா, போலியோ அட்டாக் ஆனவங்க மற்றும் செயற்கை கால் வெச்சிருக்கரவங்களுக்கு காலுக்கு கணமான இரும்புல ஒரு கால் கவசம் இல்லை கட்டை கால் வெச்சிருப்பாங்க அதை கனமில்லாத உறுதியான கட்டமைப்புல செய்ய வெச்சு அதை செயல் படுத்தினவர். இவர் மிகப் பெரியவர் இவர் இந்த பதவிக்கு கண்டிப்பா உரியவர் ஆனா, இவர் அரசியல்வாதியில்லை அதனால இந்தப் பதவிக்கு இவரால கண்டிப்பா காலம் காலமா பெருமைதான் ஆனால், இந்தப் பதவியினால இவருக்கு துளி கூட பெருமையோ, பலனோ இருக்காது.
ஒரு தடவை நான் வேலை பார்த்த ஒரு இடத்துல ஒரு டைரக்டர் வேலை காலியாச்சு அதுக்கு என்னோட நண்பர் ஒருத்தரை சிபாரிசு பண்ணினேன், அவர 5-6 தடவை இண்டர்வ்யூ பண்ணிட்டு அவங்க சொன்ன ஒரு வார்த்தை கேவலமா இருந்துச்சு, நீ சொன்ன அவர் ரொம்ப புத்திசாலி ஆனா அவரோட வேகம் நம்ம கம்பெனிக்கு ஒத்து வராது, இவர் அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு புத்திசாலித்தனம் இல்லை, அதனால இவரு சீக்கிரம் நம்ம வேலை புடிக்கலைன்னு ஓடிப் போயிடுவாரு, திரும்ப நாங்க இன்னொருத்தர வேலைக்கு எடுக்கனும், அதனால இவர் அளவுக்கு இல்லாம கொஞ்சம் சுமாரா ஒருத்தர நாங்க தேடரோம்ன்னு சொன்னாங்க. இதுக்கு அப்புறம் 4 வருஷம் கழிச்சுதான் நான் அங்கேந்து கெளம்பினேன் அது வேற விஷயம். அது மாதிரி கலாம் ஜனாதிபதியாகிரத காங்கிரஸ் கண்டிப்பா ஆதரிக்காது, ஊழல்ல திளைச்சு இருக்கர தி.மு.க வும் விரும்பாது.
கருணாநிதி: இவர ஏன் ஜனாதிபதியாக்கக்கூடாதுன்னு சத்தியா எழுதரதா சொல்லியிருக்காரு அதனால நான் எழுதல.
நித்தி கைது
நித்தி கைது ஆகி ஜாமீன் வாங்கி திரும்ப கைதாகி திரும்ப ஜாமீன் வாங்கி இப்ப மதுரை ஆதீன மடத்துல இருக்கரதா செய்தி. ரஞ்சிதா எங்க இருக்காங்கன்னு என்னை கேக்காதீங்க, அது எனக்குத் தெரியாது. இவரை கர்நாடகா உள்ள வர விடக் கூடாதுன்னு கர்நாடகாவுல நிறைய பேர் பேச ஆரம்பிச்சிருக்காங்க, இது எனக்குப் புரியலை, இவர் மேல கேஸ் போட்டிருக்காங்க, கைது பண்ணினாங்க, தீர்ப்புல இவர் குத்தவாளின்னு வந்தா அப்போ இவரை கர்நாடகாவுல வெச்சிருக்காகூடாதுன்னா என்ன பண்ணுவாங்க, தமிழ்நாட்டுக்கோ, மஹாராஷ்ட்டிராவுக்கோ நாடு கடத்தற மாதிரி மாநிலம் விட்டு மாநிலம் கடத்துவாங்களோ? ஹைய் ஜாலி, அரசாங்க செலவுல நாலு ஜெயில் பாத்தா மாதிரியிருக்கும். ஆனா ஜெயில்ல போயி வாயை மூடிக்கிட்டு இருக்கனும்னு ஒரு ஆர்டர் போடனும், பாவம் அங்க இருக்கர மத்த கைதிங்க, ஒரே சமயத்துல ஒரு தண்டனைதான் தரனும் இந்த ஆள் பினாத்தரதையெல்லாம் கேட்டு இன்னும் கொலவெறியாகி கூட இருக்கர சக கைதி, இல்லை போலீஸ்காரன்னு யாரையாவது போட்டு தள்ளிறப் போறாங்க. மொதல்ல இந்த ஆளுக்கு ஒரு ரெபிடெக்ஸ் ஆங்கிலம் பேசுவது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்க, இந்த ஆளு ஆங்கிலம் சகிக்கல, இதுல நடுவுல அப்பப்ப கேணத்தனமா ஒரு சிரிப்பு வேற.
முரளி இராமச்சந்திரன்.